அனுப்பியவருக்கு தெரியாமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிப்பது எப்படி.?

அதாவது அனுப்பியவருக்கு தெரியாமலேயே உங்களால் ஒரு வாட்ஸ்ஆப் மெசேஜை படிக்க முடியும் என்று அர்த்தம்.

|

வாட்ஸ்ஆப்பில் உள்ள 'ரீட் ரெசிப்ட்' அம்சமானது, மிகவும் சுவாரசியமான ஒரு அம்சமாகும். இது உங்கள் வாட்ஸ்ஆப் மெஸேஜ் வாசிக்கப்பட்டதா.? அல்லது இல்லையா.? என்பதை உறுதிப்படுத்தும் ஒரு அம்சம் என்பதையும், அதற்கு குறிப்பிட்ட மெஸேஜில் இரண்டு ப்ளூ டிக்ஸ்கள் காட்சிப்படும் என்பதையும் நாம் அறிவோம்.

அனுப்பியவருக்கு தெரியாமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிப்பது எப்படி.?

சிலருக்கு இந்த ப்ளூ டிக்ஸ் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இதனால் எந்தவொரு சிக்கலும் கிடையாது. மற்ற சிலருக்கு இது ஒரு பெரிய 'ரிஸ்க்' ஆக உள்ளது. மெசேஜை படிச்சாலும் பிரச்னை, படிக்காமல் அப்படியே விட்டாலும் பிரச்சனை என்கிற நிலைமை.!

அனுப்பியவருக்கு தெரியாமலேயே.!?

அனுப்பியவருக்கு தெரியாமலேயே.!?

அப்படியான ஒரு நிலைப்பாட்டில் நீங்களும் இருந்தால், உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள, சிறிய வாட்ஸ்ஆப் தந்திரம் ஒன்று உள்ளது. அதை பயன்படுத்தினால், உங்களால் ப்ளூ டிக்ஸ் ஏற்படாமல் மெஸேஜ்களை படிக்க முடியும். அதாவது அனுப்பியவருக்கு தெரியாமலேயே உங்களால் ஒரு வாட்ஸ்ஆப் மெசேஜை படிக்க முடியும் என்று அர்த்தம்.

அதெப்படி.? ரொம்ப சிம்பிள்.!

அதெப்படி.? ரொம்ப சிம்பிள்.!

ஒரு குறிப்பிட்ட மெசேஜை நீங்கள் படித்துவிட்டீர்கள் என்பதை மற்றவர்கள் அல்லது (மெஸேஜை அனுப்பியவர்கள்) தெரிந்து கொள்ளக்கூடாத சில நேரங்கள் இருக்கின்றன. அப்படியான நேரத்தில், நம்மில் பெரும்பாலானோர்கள் மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறோம் அல்லது மொபைல் டேட்டாவை ஆப் செய்து விடுகிறோம். இனி அதற்கு அவசியம் இருக்காது.

வழிமுறை #01

வழிமுறை #01

ஒரு குறிப்பிட்ட மெஸேஜ் வந்து விட்டதை நோட்டிபிகேஷன் களின் வழியாக நீங்கள் அறிந்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் 'ஏர்பிளேன் பயன்முறையை' ஆன் செய்யவும் (இது உங்களின் மொபைல் டேட்டாவை முடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்).

வழிமுறை #02

வழிமுறை #02

இப்போது வாட்ஸ்ஆப்பிற்குள் நுழையவும். குறிப்பிட்ட சாட்டில் உள்ள குறிப்பிட்ட மெசேஜை படிக்கவும். வாட்ஸ்ஆப்பை விட்டு வெளியேறவும். இந்த இடத்தில் நீங்கள் மெசேஜை பார்த்ததற்கு சாட்சியான "ப்ளூ டிக்ஸ் முறை" செயல்படாது. எளிமையான சொல்லவேண்டும் என்றால், மெசேஜ் அனுப்பியவரை பொறுத்தவரை "டபுள் டிக்ஸ்" மட்டுமே கட்சிப்படும். ப்ளூ டிக்ஸ் காட்சிப்படாது.

கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்.!

கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள்.!

டபுள் டிக்ஸ் என்பது அனுப்பிய மெசேஜ் வெற்றிகரமாக சென்று அடைந்து விட்டது என்பதற்கான அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை விட முக்கியமாக, உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் 'ஒப்பன்' செய்யப்பட்டு இருக்கவிலி என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் இந்த தந்திரமே வீணாகிவிடும்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
வசமாக மாட்டிக்கொள்வீர்கள்.!

வசமாக மாட்டிக்கொள்வீர்கள்.!

ஏனெனில் வாட்ஸ்ஆப்பை முழுமையாக க்ளோஸ் செய்யாமலேயே ஏர்பிளேன் பயன்முறையை ஆப் செய்யும் பட்சத்தில், உங்கள் மொபைல் டேட்டா தானாக ஆன் ஆகும். அது திறந்துள்ள வாட்ஸ்ஆப்பில் உள்ள மெசேஜ்களில் ப்ளூ டிக்ஸ்-ஐ ஏற்படுத்தும். வசமாக மாட்டிக்கொள்வீர்கள். நீங்கள் உங்களின் ரீட் ரெசிப்ட் அம்சத்தினை 'எனேபிள்' செய்திருந்தாலும் கூட, இந்த வாட்ஸ்ஆப் தந்திரம் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
This WhatsApp smart hack lets you read messages without sender knowing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X