Just In
- 6 min ago
மலிவு விலையில் புதிய ஸமார்ட்போனை அறிமுகம் செய்து கெத்து காட்டிய ஐடெல்.!
- 31 min ago
இந்தியாவில் விமானத்தை இறக்கிய Amazon: ஜெயிச்சுட்டோம் மாறா! இவ்ளோ நன்மைகள் இருக்கா?
- 1 hr ago
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- 2 hrs ago
உங்களிடம் PAN Card இருக்கிறதா? அப்போ இந்த மேட்டரை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.! ஏனெனில்?
Don't Miss
- Lifestyle
சனி-சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷார்..
- News
ரத சப்தமிக்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில்..ஜன.28ல் மினி பிரம்மோற்சவம்
- Movies
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய புரட்சித் தளபதி விஷால்.. என்ன ஆச்சு?
- Automobiles
பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த காரியத்தால் நடுவழியில் தவித்த குடும்பம்! கடவுளாய் வந்து காப்பாற்றிய மஹிந்திரா!
- Finance
Microsoft: 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு 10 பில்லியன் முதலீடு..!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Sports
விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
உங்கள் ஐபோனில் இருந்து ஆப்பிள் மியூஸிக்கை நீக்குவதற்கான வழிகள்
ஐஓஎஸ் தளத்தில் இசையை விருந்தை அளித்து நம்மை மகிழ்விப்பதில், ஆப்பிள் மியூஸிக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பட்டியல்களில் பல்வேறு விதமான ட்ராக்குகள் அளிக்கப்படுகிறது என்றாலும், இன்று வரை அதில் சில ட்ராக்குகள் கிடைப்பதில்லை. எதிர்கால இசையைச் சேவையை அளிப்பதில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் மியூஸிக் போன்ற அதிகளவிலான ஸ்ட்ரீமிங் சேவைகள் காணப்படுகின்றன.

ஆனால் மூன்று மாதங்களுக்கு வெள்ளாட்ட காலமாக பயனர்களுக்கு அளிக்கப்படும் இந்தச் சேவை, அதற்கு மாதந்தோறும் சந்தா கட்டணத்தைக் கட்டினால் மட்டுமே தொடர முடியும். இந்த முறையில் தொடர நீங்கள் விரும்பினால், இந்தச் செய்தியை தொடர்ந்து படிப்பதில் பயனில்லை.
ஆனால் அதை தொடர வேண்டாம் என்றால், இதற்கான வழிகாட்டலை கீழே அளிக்கிறோம். இந்தச் சேவையை விட்டு முழுமையாக நீங்கள் வெளியேற முடியாது என்றாலும், ஆப்பிள் மியூஸிக்கின் பெரும்பாலான அம்சங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற முடியும். இந்த முறையை ஐபோன், ஐபேட் டச், ஐபேட் மற்றும் மெக் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.
படி 1: உங்கள் ஐபோன், ஐபேட் டச் அல்லது ஐபேட்டில் உள்ள அமைப்புகள் அப்பை திறக்கவும்.
படி 2: மியூஸிக் பிரிவிக்கு செல்லவும்.
படி 3: காட்டப்படும் ஆப்பிள் மியூஸிக் சுவிட்ச்சை ஆஃப் செய்யவும்.
ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரி இயங்கும் வரை, மேற்கூறிய செயல்பாட்டின் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் வைத்திருக்க நினைத்த எந்த பாடல்களும் அகற்றப்படாது. மெக்கில் ஆப்பிள் மியூஸிக்கை நீங்கள் மறைக்க விரும்பினால், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும்.
படி 1: ஐட்யூன்ஸை திறக்கவும்
படி 2: ஐட்யூன்ஸ் மெனுவில் உள்ள விருப்பங்களைத் (பிரிஃப்பரென்ஸ்) தேர்ந்தெடுக்கவும் அல்லது திருத்து -> விருப்பங்கள் (பிசி) தேர்ந்தெடுக்கவும்.
படி 3: ஜெனரல் டேப் கிளிக் செய்து, "ஆப்பிள் மியூஸிக்கை காட்டு" என்ற பெயரிடப்பட்ட பெட்டியை அன்செக் செய்யவும்.
நீங்கள் ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரியை முடக்கினால், உங்கள் சாதனத்தில் உள்ள ஆஃப்லைன் ட்ராக்குகள் மற்றும் ஆப்பிள் மியூஸிக் பாடல்கள் ஆகியவை அகற்றப்படும். மேலும், ஆப்பிள் மியூஸிக்கில் உள்ள ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரியை கூட தனியாக ஆன் / ஆஃப் செய்ய வேண்டியுள்ளது. ஐகிளவுட் மியூஸிக் லைப்ரரியையும் முடக்க விரும்பினால், கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றவும்.
படி 1: அமைப்புகளுக்குச் செல்லவும்.
படி 2: மியூஸிக் பிரிவுக்கு செல்லவும்.
படி 3: ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரியை ஆன்செக் செய்து, ஆஃப் நிலைக்கு மாற்றவும்.
உங்கள் மெக்கில் விருப்பங்களுக்கு சென்று "ஐகிளவுடு மியூஸிக் லைப்ரரி"யை அன்செக் செய்தும், இதை செய்ய முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470