Home
How to

பாக்கெட்டில் லேப் : சாதாரண மைக்ரோஸ்கோப்பை வெர்சுவல் இமேஜிங் மெசினாக மாற்றிய ஐ.ஓ.டி கருவி.!

நியூயார்க் பல்கலைகழக முதுகலை மாணவர்கள் இருவருடன் அகஸ்டேவும் இணைந்து 2016ல் அலெக்ஸாபாத் நிறுவனத்தை துவங்கினர்.

By Gizbot Bureau

2010 ம் ஆண்டில் லேடின் அமெரிக்கன் நாட்டில் நடந்த பயங்கர நிலநடுக்கத்தின் போது அவசர உதவியாளாராக பணியாற்றிய நிலையில், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவரை சந்தித்த நிகழ்வு லாவ் அகஸ்டே-ன் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

பாக்கெட்டில் லேப் : வெர்சுவல் இமேஜிங் மெசினாக மாற்றிய ஐ.ஓ.டி கருவி.!

"அந்த பெண்மணி தனது மார்பகத்தில் உள்ள கட்டி தீங்கற்றதா அல்லது சிகிச்சை தேவைப்படுமா என தெரிந்துகொள்ள விரும்புகிறார். அறுவை சிகிச்சை நிபுணர் மாதிரிகளை சேகரித்தார். ஆனால் ஆய்வக வல்லுநர் இல்லாத அந்த மருத்துவமனையில் , நோய் கண்டறியும் ஆய்வான டைக்னாசில் செய்ய முடியாது. அடுத்தமுறை நான் அவரை பார்த்த போது அந்த டியூமர் கட்டி உடல் முழுதும் பரவியிருந்தது"என்கிறார் யாலே.

ஆய்வக வல்லுநர்கள் பற்றாக்குறையால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போன பலருடன் அந்த பெண்மணியும் இணைந்தார்.

அகஸ்டே

அகஸ்டே

விரைவான அதே நேரம் மலிவு விலையிலான ஆய்வக உபகரணங்களை கிராமப்பகுதிகளும் பெறுவதை நோக்கமாக கொண்டு, ஸ்மார்ட்போனை பயன்படுத்தி மருத்துவ ஆய்வுகளை செய்யும் தொழில்நுட்பத்தை கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கினார் அகஸ்டே.

மலிவு விலையில்

மலிவு விலையில்

நியூயார்க் பல்கலைகழக முதுகலை மாணவர்கள் இருவருடன் அகஸ்டேவும் இணைந்து 2016ல் அலெக்ஸாபாத் நிறுவனத்தை துவங்கினர். இதன் மூலம் பாரம்பரிய மைக்ரோஸ்கோப்களை திறமையாகவும், வேகமாகவும் செயல்பட வைக்கவும், மலிவு விலையில் மருத்துவ பரிசோதனைகளை செய்யவும் தீர்வை உருவாக்க விரும்பினர்.

தவால் பல்சானா

தவால் பல்சானா

ஏ.டி.ஏ என அழைக்கப்படும் இந்த வன்பொருளை எந்த மைக்ரோஸ்கோப்பின் ஸ்டேஜிலும் பொருத்தி, ஐபீசில் கேமராவை பொருத்துவதன் மூலம் எதையும் தானாகவே படம்பிடிக்க முடியும். உலகின் முதல் ஐ.ஓ.டி ரோபோட்டிக் ஸ்லைடு ஹோல்டர் என அறியப்படும் இந்த ஏடிஏ(ஆட்டோ டைக்னாஸ்டிக் அசிஸ்டென்ட்) , சாதாரண மைக்ரோஸ்கோப்பை விர்சுவல் இமேஜிங் மெசினாக மாற்றுகிறது.


இந்த கருவியை ஸ்மார்ட்போனுடன் இணைப்பதன் மூலம், வைஃபையை பயன்படுத்தி நிறுவனத்தின் மென்பொருளை பயன்படுத்தி இமேஜ் மற்றும் வீடியோக்களை நிகழ்நேரத்தில் வேறு இடங்களில் உள்ள வல்லுநர்களுக்கு பகிர முடியும் என்கிறார் நிறுனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி தவால் பல்சானா.

ஸ்கைப் ஃபார் மைக்ரோஸ்கோப்

ஸ்கைப் ஃபார் மைக்ரோஸ்கோப்

இந்நிறுவனத்தின் மற்றொரு மென்பொருளான mWSI(mobile Whole Slide Imaging) உதவியுடன் தனித்தனியாக எடுக்கப்பட்ட இமேஜ்கள் அனைத்தையும் ஒன்று சேர்க்க முடியும். பின்னர் mWSI நேரலை வசதியின் மூலம், இணையதளம் வாயிலாக அந்த ஆய்வு மாதிரிகளை பார்க்கமுடியும் என்பதால், இது 'ஸ்கைப் ஃபார் மைக்ரோஸ்கோப்' ஆக பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளின் மூலம் மருத்துவ ஆய்வுகள் செய்வதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. குக்கிராமங்களில் மருத்துவ பரிசோதனைகள் எளிதாக கிடைக்கிறது என்கிறார் பல்சானா. ஸ்மார்ட்போன்கள் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வருவதால், தொழில்நுட்பங்களின் உதவியுடன் மருத்துவ ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்கிறார்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
ஆட்டோபேப் - கனெக்டேட் லேப்

ஆட்டோபேப் - கனெக்டேட் லேப்

மேலும் அலெக்ஸாபாத் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் செயல்படும் பரிசோதனை அமைப்பான ஆட்டோபேப்ஐ வடிவமைத்திருக்கிறது. இது தற்போது இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் புற்றுநோயை கண்டறிய பயன்பட்டு வருகிறது.

ஆய்வக வல்லுநர்கள் இல்லாத பகுதிகளில், இந்த ஆட்டோபேப்ஐ பயன்படுத்தி அதன் கருவிகளில் மூலம் விசுவல்இமேஜ்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு இடமான ஏதேனும் இருந்தால் தெரிவிப்படும் என்கிறார் பல்சானா. அவை உடனடியாக ஆய்வக வல்லுநர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் அனுப்பிவைக்கப்படும்.


தற்போது அலெக்ஸாபாத் நிறுவனத்திற்கு தொலைதூர மருத்து பரிசோதனை சேவைகளுக்காக 4 மருத்துவமனைகள் வாடிக்கையாளர்களாக உள்ளன.

Best Mobiles in India

English summary
This IoT device turns a standard microscope into a virtual imaging machine : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X