பலருக்கும் தெரியாத Gmail செட்டிங்! ஒருமுறை ஆக்டிவேட் செஞ்சிட்டா.. சிங்கிள் கிளிக்கில் 1500 பேர்!

|

ஜிமெயில் வழியாக.. ஒரே நேரத்தில், ஒரே கிளிக்கில் கிட்டத்தட்ட 1500 பேருக்கு இமெயில் அனுப்புவது எப்படி என்று தெரியுமா? தெரியாதென்றால் கவலைப்பட வேண்டாம்!

ஏனென்றால் இப்படி ஒரு ஜிமெயில் ட்ரிக் (Gmail Trick) இருப்பது பற்றி - உங்களை போலவே - பலருக்கும் தெரியாது!

தனித்தனியாக அனுப்பினால்..?

தனித்தனியாக அனுப்பினால்..?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! 50 பேருக்கு தனித்தனியாக இமெயில் அனுப்பினால் எவ்வளவு நேரம் எடுக்கும்? எப்படி பார்த்தாலும் சுமார் 45 நிமிடங்களாவது ஆகும்! அதுவே 1000 பேருக்கு அனுப்பினால்? - கதை கந்தல் ஆகிவிடும் அல்லவா?

இதுபோன்ற "சிக்கலான" சூழ்நிலைகளில், ஜிமெயிலில் உள்ள ஒரு சீக்ரெட் அம்சம் உங்களுக்கு நிச்சயமாக கைகொடுக்கும்! ஏனென்றால், அந்த அம்சத்தின் கீழ் உங்களால் ஒரே நேரத்தில் 1500 பேருக்கு இமெயில் அனுப்ப முடியும்!

ஒரு பால் கூட விடக்கூடாது! T20 உலக கோப்பை போட்டிகளின் FREE LIVE-ஐ பார்ப்பது எப்படி?ஒரு பால் கூட விடக்கூடாது! T20 உலக கோப்பை போட்டிகளின் FREE LIVE-ஐ பார்ப்பது எப்படி?

மாஸ் இமெயில்ஸ்!

மாஸ் இமெயில்ஸ்!

ஒரே நேரத்தில் ஒரு இமெயிலை, 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்புவதை மாஸ் இமெயில்ஸ் (Mass emails) என்பார்கள்.

இதன் கீழ் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்களை சிங்கிள் கிளிக்கில் - மிகவும் சுலபமாக - ஒன்றாக இணைக்க முடியும்.

தனிநபர் vs நிறுவனங்கள்!

தனிநபர் vs நிறுவனங்கள்!

பெரும்பாலும் இந்த முறையை தனிநபர்கள் பயன்படுத்த மாட்டார்கள்; நிறுவனங்கள் தான் பயன்படுத்தும்.

ஒருவேளை இது உங்களுக்கோ / அல்லது உங்கள் தொழிலுக்கோ உதவும் என்பது போல் தோன்றினால்.. நீங்களும் இந்த ஜிமெயில் சீக்ரெட்-ஐ கற்றுக்கொள்ளலாம்; பயன்படுத்தலாம்!

ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்!

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்!

ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இமெயில் அனுப்ப நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - ஜிமெயிலில் உள்ள மல்டி-சென்ட் மோட்-ஐ (Multi-send mode) பற்றி தெரிந்து கொள்வதே ஆகும்.

உங்கள் ஜிமெயில் அக்க்கவுன்ட்டில், மல்டி-சென்ட் மோட் என்கிற அம்சம் 'ஆன்' ஆகி இருக்கும் போது, உங்களால் பல பேருக்கு ஒரே நேரத்தில் இமெயில் அனுப்ப முடியும்.

Gmail-ல் உள்ள Multi-send Mode-ஐ ஆன் செய்வது எப்படி?

Gmail-ல் உள்ள Multi-send Mode-ஐ ஆன் செய்வது எப்படி?

- உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள, உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு செல்லவும்.

- இப்போது, இடதுபுறத்தில் உள்ள கம்போஸ் (Compose) பட்டனை அழுத்தவும்.

- கீழே உள்ள டூல் பாரில் (Tool Bar) கிடைக்கும் டர்ன் மல்டி-சென்ட் மோட் ஆன் / ஆஃப் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்! உங்கள் ஜிமெயிலில் உள்ள Multi-send Mode-ஐ நீங்கள் ஆன் செய்து விட்டீர்கள்!

பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!பலருக்கும் தெரியாத போன் செட்டிங்! இதை செஞ்சா போதும்; மொபைல் டேட்டா சீக்கிரம் தீராது!

1500 பேருக்கும் ஒரே ஒரு 'சிசி' தான்!

1500 பேருக்கும் ஒரே ஒரு 'சிசி' தான்!

இந்த மல்டி சென்ட் மோட்-ஐ பயன்படுத்த விரும்பும் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

அது என்னவென்றால்.. ஜிமெயிலில் உள்ள மல்டி சென்ட் மோட்-ஐ நீங்கள் ஆன் செய்து விட்டால்.. ஒரு இமெயிலை 'கம்போஸ் செய்யும் போது அணுக கிடைக்கும் ​​"To" ஃபீல்டில் உங்களால் 1500 பெறுநர்களை சேர்க்க முடியும்.

ஆனால் "Cc" அல்லது "Bcc" ஃபீல்டில் அதிகபட்சம் 1 இமெயில் ஐடி-ஐ மட்டுமே சேர்க்க வேண்டும்

ஏனென்றால்?

ஏனென்றால்?

மல்டி-சென்ட் மோடின் கீழ் நீங்கள் அனுப்பும் அனைத்து அவுட்கோயிங் இமெயிலும் "Cc" அல்லது "Bcc" ஃபீல்டில் சேர்க்கப்படும் ஐடி-ஐ நகலெடுத்து அனைவருக்குமானதாக மாற்றிக்கொள்ளும்!

இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால். நீங்கள் ஒருமுறை சேர்க்கும் 'சிசி' அல்லது 'பிசிசி' ஆனது, குறிப்பிட்ட இமெயிலை பெறும் அனைவருக்கும் கிடைக்கும் / பிரதிபலிக்கும்!

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

ஒரே நேரத்தில் 1500 பேருக்கு இமெயில் அனுப்புவது எப்படி?

ஒரே நேரத்தில் 1500 பேருக்கு இமெயில் அனுப்புவது எப்படி?

- நீங்கள் அனுப்ப விரும்பும் இமெயிலை தயார் செய்த பின்னர், கீழே தெரியும் Continue பட்டனை கிளிக் செய்யவும் (மல்டி-சென்ட் அம்சத்தின் கீழ் சென்ட் பட்டன் கிடைக்காது; மாறாக கன்ட்டிநியூ பட்டனே கிடைக்கும்)

- Cc அல்லது Bcc ஃபீல்டில் ஒரே ஒரு இமெயில் ஐடியை சேர்க்கவும்; அதிகமாக சேர்த்தால், அதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை பெறுவீர்கள்.

"அந்த" Link மிகவும் முக்கியம்!

அதே போல நீங்கள் Unsubscribe link-ஐ டெலிட் செய்தாலும் கூட ஒரு எச்சரிக்கை அறிவிப்பை பெறுவீர்கள். குறிப்பிட்ட Unsubscribe link-ஐ மீண்டும் சேர்க்க Add பட்டனை கிளிக் செய்யவும்.

நினைவூட்டும் வண்ணம், மல்டி-சென்ட் மோட் ஆனது ஆன் செய்யப்பட்டு இருக்கும் போது, இமெயில்கள் தானாகவே மெசேஜின் கீழே ஒரு Unsubscribe link-ஐ சேர்க்கும்.

இந்த Unsubscribe link ஏன் மிகவும் முக்கியம்?

இந்த Unsubscribe link ஏன் மிகவும் முக்கியம்?

இது எதிர்காலத்தில் நீங்கள் அனுப்பும் மாஸ் இமெயிலில் இருந்து ஒரு பெறுநர் விலக விரும்பும் போது, பயன்படுத்தி கொள்வார்

மேலும் யாராவது Unsubscribed செய்து இருந்தாலும் கூட அது தொடர்பான மொத்த எண்ணிக்கையுடன் உறுதிப்படுத்தல் பெட்டி காண்பிக்கப்படும்.

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க விரும்பினால், Send Preview என்கிற ஆப்ஷனைக் கிளிக் செய்வதன் வழியாக நீங்கள் அனுப்ப போகும் இமெயிலை சரிபார்க்கலாம்!

- கடைசியாக, குறிப்பிட்ட இமெயிலை அனுப்ப Send all என்கிற பட்டனை கிளிக் செய்யவும்; வேலை முடிந்தது! ஒரே கிளிக்கில் 1500 பேரை நீங்கள் சென்றடைந்து இருப்பீர்கள்!

Best Mobiles in India

English summary
This Gmail Trick Helps You to Send An Email To 1500 Members at Once

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X