களவு பயம் இனி எதற்கு? அதிநவீன கருவி வந்தாச்சு.!

இந்த கருவியானது மிகவும் நேர்த்தியானது மற்றும் சிறியதும் கூட. வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணைம் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

|

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி 35% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். ஒரு தாயும் மகளும் தங்களின் கண்டுபிடிப்பான DAZL மூலம் இந்த மோசமான புள்ளிவிவரங்களை மாற்ற முனைகின்றனர்.

களவு பயம் இனி எதற்கு? அதிநவீன கருவி வந்தாச்சு.!

ஒரு சிறிய ஐ.ஓ.டி கருவியான இந்த டாசில்(DAZL),பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணரும் போது ஒன்று அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு சாஸ் (SOS) எச்சரிக்கையை அனுப்ப அனுமதிக்கிறது. "உலகம் முழுக்க பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் சமசரசெய்யக்கூடிய மற்றும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலேயே உள்ளனர். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார் டாசில்-ன் இணை நிறுவனர் அதிதி.

இந்த கருவியானது மிகவும் நேர்த்தியானது மற்றும் சிறியதும் கூட. வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணைம் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. " எங்களுடைய பணியானது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்மையுடைய மற்றும் பயமில்லாத பெண்கள் உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே" என மேலும் தொடர்கிறது.

களவு பயம் இனி எதற்கு? அதிநவீன கருவி வந்தாச்சு.!

சாஸ் எச்சரிக்கைகளை அனுப்புவது மட்டுமில்லாமல், அதிலுள்ள பட்டனை அழுத்தி பிடிப்பதன் மூலம் அதிக ஒலியெழுப்பி தாக்க முயல்பவர்களை பயமுறுத்தவும் பயன்படுகிறது. மேலும் டாசில் பற்றி கூறும் போது, வியரபல் டெக்னாலாஜி மற்றும் ஐ.ஓ.டி யை பயன்படுத்தி, பேசன் ஜூவல்லரிகள் மூலம் பெண்களின் தனித்துவ தேவைகளான பாதுகாப்பு, சௌகரியம், ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கை அனைத்தும் தரமுடியும் என்கிறார்.

இந்த சிறிய கருவியானது பயனர்களின் ஒரு நாளுக்கான பல்வேறு தேவைகளை பூர்த்திசெய்யும் பல அம்சங்களை கொண்டுள்ளது. எளிதாக ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பாதுகாப்பாக சென்றடைந்துவிட்டேன் என்பதை எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பாமல் தெரிவிக்க முடியும்.

களவு பயம் இனி எதற்கு? அதிநவீன கருவி வந்தாச்சு.!

டாசில் தான் பெண்களுக்களின் பாதுகாப்பிற்காக உள்ள ஒரே கருவி எனக் கூறிவிட முடியாது. சந்தை முழுவதும் பெப்பர் ஸ்பிரே, மகளிர் பாதுகாப்பு செயலிகள் என பல உள்ளன. இருந்தாலும் இந்த டாசில் மற்றவற்றுடன் போட்டி போடும் அளவிற்கு சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்கின்றனர் இதன் நிறுவனர்கள்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 45 நாட்கள் செயல்படக்கூடியதாகவும், பார்க்க கலைநயத்துடன் , பல்வேறு அம்சங்களை கொண்டதாகவும் உள்ளது என்கிறார் அதிதி. மேலும் இந்த டாசில் கருவியில் சாவி போன்ற தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது. பெண்கள் பாதுகாப்பற்ற சூழுநிலையில் இருக்கும் போது கைப்பேசி கூட பயன்படுத்த இயலாத நிலையில்இந்த கருவியை பயன்படுத்தி, நீங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை சாஸ் எச்சரிக்கை வாயிலாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப முடியும்.

மேலும் இந்த கருவி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற முக்கிய தினசரி நோட்பிகேசன்களை அனுப்பவல்லது.இதை எளிதில் கீசெயின், கைப்பை அல்லது உடையில் கூட எளிதாக வைத்துக்கொள்ளலாம்.

களவு பயம் இனி எதற்கு? அதிநவீன கருவி வந்தாச்சு.!

முதலில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏராளமான வெளிநாட்டு ஒப்பந்தங்களை பெற்றுவந்த நிலையில், தற்போது இந்தியாவில் இதன் சந்தை பெருமளவில் வளர்ந்து வருகிறது. "இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு என்பது பெரிய கவலையாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் 90% பிரச்சனைகள் வெளியில் தெரிவதேயில்லை".

மேலும் இந்நிறுவனம் ஐரோப்பியா மற்றும் ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் கால்பதிக்க உள்ளதாக அதிதி. ஐரோப்பியா மற்றும் ஐப்பானில் இருந்து ஏராளமான ஒப்பந்த விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவற்றை சரி பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
This device not only keeps you safe on streets, but also finds your lost items ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X