கடந்த ஆண்டு கூகுள் தேடலில் டிரெண்ட் ஆன தலைப்புகள்.!

|

கூகுள் தேடல்களில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளில் ஒன்றாக How To சார்ந்த தேடல்கள் முதன்மையானவையாக இருக்கின்றன. கூகுள் செல்லும் பெரும்பாலானோர் முதலில் டைப் செய்வதில் How To ஆக தான் இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு கூகுள் பயனர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு தலைப்புகள் பயனர்கள் மத்தியில் பெருமளவு பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பெருமளவு புதுமைகள் கூகுள் டிரெண்டிங்கில் இடம்பிடித்தன.

கடந்த ஆண்டு கூகுள் தேடலில் டிரெண்ட் ஆன தலைப்புகள்.!

2019 ஆம் ஆண்டில் இருந்தபடி கடந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடியவற்றை திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்றாகும். வாட்ஸ்அப் செயலியில் புதிய ஸ்டிக்கர் அம்சத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் துவங்கி, ஆதாருடன் மொபைல் நம்பரை எப்படி இணைக்க வேண்டும், ரங்கோலி எப்படி போட வேண்டும் என பல்வேறு தலைப்புகள் பொதுப்படையான ஒன்றாக இருக்கிறது. இதுதவிர மேலும் பல தலைப்புகள் கடந்த ஆண்டு கூகுளில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. அவற்றில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் வழக்கமாக டெக்ஸ்ட் மட்டும் அனுப்புவதை தவிர்த்து ஸ்டிக்கர்களை அனுப்ப பலரும் விரும்புகின்றனர். இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.

பின் நீங்கள் ஸ்டிக்கர் அனுப்ப விரும்பும் கான்டாக்ட்டை தேர்வு செய்து பின் ஸ்மைலி ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இதில் ஜிஃப் ஐகானிற்கு அடுத்து காணப்படும் ஸ்டிக்கர் ஆப்ஷனில் நீங்கள் விரும்பும் ஸ்டிக்கரை தேர்வு செய்து அனுப்பி மகிழலாம்.

மொபைல் நம்பருடன் ஆதாரை இணைப்பது எப்படி?

மொபைல் நம்பருடன் ஆதாரை இணைப்பது எப்படி?

இதற்கு டெலிகாம் ஆப்பரேட்டர் ஸ்டோர் செல்ல வேண்டும். இனி உங்களது ஆதார் கார்டு நகலை அங்கிருக்கும் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். இனி மொபைல் நம்பரை வழங்கினால், ஒரு முறை பதிவு செய்ய வேண்டிய கடவுச்சொல் உங்களது மொபைல் நம்பருக்கு வரும். இதனை டெலிகாம் ஆப்பரேட்டரிடம் வழங்கினால், அவர்களது தரப்பில் இருந்து உங்களுக்கு குறுந்தகவல் வரும். அதற்கு பதில் அனுப்பி e-KYC வழிமுறையை நிறைவு செய்யலாம்.

ரங்கோலி போடுவது எப்படி?

ரங்கோலி போடுவது எப்படி?

உங்களுக்கு பிடித்த வடிவங்களில் ஒன்றை தேர்வு செய்யவும். பின் நீங்கள் வரைய வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். தேர்வு செய்த வடிவங்களை காகிதத்தில் ஒருமுறை வரைந்து பார்க்கவும்.

பின் ரங்கோலி இட வேண்டிய இடத்தில் அதனை வரைந்து பின் அதில் வெவ்வேறு நிறங்களை போட வேண்டும். நிறங்களை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இறுதியில் அதன் மீது எவரும் கால் வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரங்கோலியிட்டு முடித்ததும் நீங்கள் அதனை மற்றவர்களுக்கு காண்பிக்கலாம்.

மொபைல் நம்பர் போர்ட் செய்வது எப்படி?

மொபைல் நம்பர் போர்ட் செய்வது எப்படி?

முதலில் www.trai.gov.in வலைத்தளம் செல்ல வேண்டும். பின் போர்ட் செய்யக் கோரும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இனி மொபைலில் 'PORT' என டைப் செய்து உங்களது பத்து இலக்க மொபைல் நம்பரை பதிவிட்டு 1900 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பி உங்களுக்கு பிரத்யேக குறியீட்டு எண்ணை பெற வேண்டும். இறுதியில் உங்களின் மொபைல் நம்பர் போர்ட் செய்யப்பட்டு விடும்.

பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி?

பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி?

முதலில் உங்களது தனிப்பட்ட விவரங்களுடன் கணக்கு ஒன்றை துவங்க வேண்டும். இனி பிட்காயின்களை வாங்கக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் வாங்க விரும்பும் தொகையை பதிவிட்டு பின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தவும்.

இனி பிட்காயின் வாலெட் முகவரியை பதிவிட வேண்டும். இது உங்களது பொது கீயாக இருக்க வேண்டும். இனி அவற்றை பேபால் அல்லது பேடிஎம் உள்ளிட்டவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

உடல் நல குறைவு ஏற்பட்டு இருப்போர் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளில் ஆரோக்ய மித்ராஸ் இடம் சரியான விவரங்களை வழங்க வேண்டும். இனி ஆதார் மூலம் சேவையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இனி நீங்கள் கோரிக்கைக்கு விண்ணப்பித்து பின் மருத்துவமனைகள், கட்டணங்கள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இனி மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.

முகத்தில் இருந்து ஹோலி நிறத்தை நீக்குவது எப்படி?

முகத்தில் இருந்து ஹோலி நிறத்தை நீக்குவது எப்படி?

ஹோலி விளையாட துவங்கும் முன் முகத்தில் கடுகு அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் மாவு மற்றும் தயிர் கலந்து கலவையை முகம் முழுக்க தடவிக் கொள்ள வேண்டும்ய

இவ்வாறு செய்வதால் முகம் குளிர்ச்சி பெறுவதோடு இரசாயணங்களால் சருமம் பாதிக்கப்படாமலும் இருக்கும். முகத்தை நீண்ட நேரத்திற்கு தேய்த்து விட்டு பின் சில நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

குளிக்ம் போது நீங்கள் பயன்படுத்தும் சோப் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் சோப் உங்களது சருமத்தை வரண்டு போக விடக்கூடாது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

கூகுள் வலைத்தளம் சென்று தகுந்த அதிகாரப்பூர்வ வலைத்தளம் செல்ல வேண்டும். இனி உங்களது பதிவு எண் மற்றும் விவரங்களை பதிவிட்டு சமர்பிக்கக்கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

சில நொடிகளில் உங்களது மதிப்பெண்களை தெரிவிக்கும் வலைப்பக்கம் திறக்கும். இதேபோன்று முடிவுகளை பார்க்கும் முன் குறிப்பிட்ட வருடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ரூபிக்ஸ் க்யூப் பயன்படுத்துவது எப்படி?

ரூபிக்ஸ் க்யூப் பயன்படுத்துவது எப்படி?

முதலில் நீங்கள் வெள்ளை நிற கிராஸ்களை பூர்த்தி செய்ய வேண்டும். வெளிப்புறம் வெள்ளை நிறம் வரும் போது உள்புறம் ஒரே நிறத்தில் மாறும் வரை திருப்ப வேண்டும். இனி வெள்ளை நிற ஓரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஓரங்களில் உள்ள வெள்ளை நிறத்தை பூர்த்தி செய்யும் போது வெள்ளை நிற கிராஸ் மேல்புறமாக இருக்க வேண்டும். இனி மத்தியில் உள்ள அடுக்குகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அசாம் NRC பெயர் சரிபார்ப்பது எப்படி?

அசாம் NRC பெயர் சரிபார்ப்பது எப்படி?

முதலில் http://www.assam.gov.in. வலைத்தளம் செல்ல வேண்டும். இனி 'For complete draft NRC' பகுதிக்கு சென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இறுதியில், நீங்கள் தேடும் விடை உங்களுக்கு கிடைக்கும். இதேபோன்று மற்ற மாநிலங்களுக்கும் தேட முடியும். இந்த வழிமுறையை பயன்படுத்த எவ்வித பகுதியிலும் NRC-யை அறிந்து கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
These How To topics were trending most on Google Search in 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X