ரவுட்டரை ரீபூட் செய்தால் அந்த பிரச்சனையில் சிக்காமல் தப்பிக்க முடியும்.!

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் விபிஎன் ஃபில்ட்டர் (VPNFilter) எனும் மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

உலகளவில் ரவுட்டர்கள் மற்றும் இதர நெட்வொர்க் சாதனங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து பயனர்கள் தங்களது ரவுட்டர்களை உடனடியாக ரீபூட் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ரவுட்டரை ரீபூட் செய்தால் தாக்குதலில் சிக்காமல் இருக்கலாம்.!

இதுகுறித்த தகவல்கள் வேகமாமக பரவி வரும் நிலையில் உங்களின் ரவுட்டர் உண்மையில் பாதிக்கப்பட்டு இருக்கிறதா, அதில் இருக்கும் மால்வேரை விரட்டுவது எப்படி? மேலும் இவ்வளவு பெரிய பிரச்சனையில் ரவுட்டரை ரீபூட் செய்தாலே சரியாகிவிடுமா?

எவ்வித அச்சுறுத்தல்?

எவ்வித அச்சுறுத்தல்?

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் விபிஎன் ஃபில்ட்டர் (VPNFilter) எனும் மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரவுட்டர்களை பாதித்து இருப்பதாக கூறப்படும் இந்த மால்வேர் சிஸ்கோவின் டலோஸ் புலனாய்வு பிரிவு ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

விபிஎன்ஃபில்ட்டர் எனும் மால்வேர் சிறிய அலுவலகம் மற்றும் வீட்டு ரவுட்டர்களை தாக்கி, அவற்றை செயலிழக்க செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர் ரவுட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சேகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சோஃபசி க்ரூப் என்ற பெயரில் இயங்கி வரும் ரஷ்ய ஹேக்கர்கள் இந்த மால்வேர் பரவ முக்கிய காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டிருப்பதை எவ்வாறு கண்டறிவது?

பாதிக்கப்பட்டிருப்பதை எவ்வாறு கண்டறிவது?

உங்களின் ரவுட்டர் விபிஎன்ஃபில்ட்டர் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிவது மிகவும் கடினமான விஷயமாகும். பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த ரவுட்டர்களையும், ஒரு நிறுவனம் தயாரித்து இருக்கும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்ட ஸ்டோரேஜ் சாதனங்களையும் இந்த மால்வேர் குறிவைக்கும்.

லின்க்சிஸ், மைக்ரோடெக், நெட்கியர், கியூநாப் மற்றும் டிபி-லின்க் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இதுகுறித்து சிஸ்கோ கூறும் போது சில மாடல்கள் மட்டுமே இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

ரவுட்டர் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்யாமல், இந்த பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்வது? தாக்குதலுக்கு ஆளாகியிருந்தாலும், இல்லையென்றாலும் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ரீபூட் வேலை செய்யுமா?

ரீபூட் வேலை செய்யுமா?

இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ரீபூட் அல்லது பவர்-சைக்ளிங் செய்வது எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது. பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய முதலில் ரீபூட் செய்வது சிறப்பான தீர்வை தரும். இன்டர்நெட் கோளாறு குறித்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது ரவுட்டரை ரீபூட் செய்வதே உங்களுக்கான முதல் தீர்வாக இருக்க முடியும்.

எனினும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள ரீபூட் மட்டுமே தீர்வாகாது என்றும், ரீபூட் செய்த பின்பும் விபிஎன்ஃபில்ட்டரின் சில குறியூடுகள் அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது. இதை எதிர்கொள்ள ஃபேக்ட்ரி-டீஃபால்ட் செட்டிங்ஸ்-ஐ ரீசெட் செய்ய வேண்டும்.

விபிஎன்ஃபில்ட்டர் பிரச்சனையில் இருந்து விடுபட ரீபூட் செய்வதோடு ரீசெட் செய்ய வேண்டியது அவசியமாகும்.

ஒரு நல்ல செய்தி: ரவுட்டரில் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் ரீசெட் ஆகிவிடும். இது மிகவும் எளிமையான காரியமே.

ஒரு கெட்ட செய்தி: ரவுட்டரை ரீசெட் செய்து விட்டால், மீண்டும் உங்களின் நெட்வொர்க் செட்டிங்-களை ரீகான்ஃபிகர் செய்ய வேண்டும்.

வேறு என்ன செய்ய முடியும்?

வேறு என்ன செய்ய முடியும்?

விபிஎன்ஃபில்ட்டர் பிரச்சனையில் இருந்து விடுபட பல்வேறு நிறுவனங்கள் பரிந்துரைப்பது. புதிய ஃபர்ம்லேர் வைத்து ஃபேக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும்.

பெரும்பாலும் மால்வேர் தாக்குதல்களில் இருந்து எதிர்கொள்ள ரவுட்டரை பேட்ச் செய்து புதிய ஃபர்ம்வேர் மூலம் பிரத்யேக பாஸ்வேர்டு பயன்படுத்தலாம். இதனால் விபிஎன்ஃபில்ட்டர் மட்டுமின்றி மற்ற ரவுட்டர் சார்ந்த மால்வேர் அச்சுறுத்தல்களில் இருந்தும் தற்காத்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
The FBI says you should reboot your router Should you : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X