வாட்ஸ் ஆப் இல் உங்களின் சாட் & மீடியா பைல்களை பேக்கப் செய்வது எப்படி?

வாட்ஸ் ஆப் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அப்டேட்டின்படி,உங்களின் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் இல் நேரடியாகவும் நிரந்தரமாகவும் சேமித்துக்கொள்ளும் வசதியை அறிமுகம்

|

வாட்ஸ் ஆப் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அப்டேட்டின்படி, உங்களின் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் இல் நேரடியாகவும், நிரந்தரமாகவும் சேமித்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் ஆப் பேக்கப்

வாட்ஸ் ஆப் பேக்கப்

வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் டேட்டா தகவல்களைக் கூகுள் டிரைவ் இல் பேக்கப் செய்துகொள்ளலாம். உங்கள் வாட்ஸ் ஆப் இல் உள்ள சாட் மற்றும் மீடியா பைல்களை கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் இல் எப்படி பேக்கப் செய்வதென்பதை பார்க்கலாம்.

 சாட் மற்றும் மீடியா பைல் பேக்கப்

சாட் மற்றும் மீடியா பைல் பேக்கப்

வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை பேக்கப் செய்வதற்கு முதலில் உங்கள் கூகுள் அக்கௌன்ட் உடன் உங்களின் மொபைல் போனை இனைத்துக்கொள்ளுங்கள். பேக்கப் சேவை வைஃபை இணக்கத்தில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே உங்களின் வைஃபை சேவையை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.

புது போன்னிற்கு டேட்டா மாற்றம்

புது போன்னிற்கு டேட்டா மாற்றம்

கூகுள் டிரைவ் இல் பேக்கப் செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக பேக்கப் செய்யப்படுகிறது. அடிக்கடி புது போன் மற்றும் பயனர்களுக்கு அவர்களின் வாட்ஸ் ஆப் டேட்டாகளை எளிதில் புது போனிற்கு மாற்றிக்கொள்ளக் கூகுள் டிரைவ் பேக்கப் மிகவும் உதவியாய் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என்று இரண்டு முறையில் டேட்டாகளை பேக்கப் செய்யலாம்.

ஆட்டோமேட்டிக் பேக்கப் செயல்முறை:

ஆட்டோமேட்டிக் பேக்கப் செயல்முறை:

- முதலில் உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

- உங்கள் போனில் கூகுள் டிரைவ் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.
- வாட்ஸ் ஆப் ஓபன் செய்து மெனுவிற்கு செல்லுங்கள்.
- மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
- சாட் செலக்ட் செய்யுங்கள்.
- அதனைத் தொடர்ந்து சாட் பேக்கப் கிளிக் செய்யுங்கள்.
- பேக்கப் டு கூகுள் டிரைவ் கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கப் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
- "நெவர்(Never)" ஆப்ஷன் கிளிக் செய்தால் உங்களின் சாட்கள் பேக்கப் ஆகாது.
- உங்களின் கூகுள் அக்கௌன்ட் விபரத்தைத் தேர்வு செய்யுங்கள்.
- உங்களின் சாட் டேட்டாக்கள் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகிக்கொள்ளும்.

மேனுவல் பேக்கப் செயல்முறை:

மேனுவல் பேக்கப் செயல்முறை:

- மெனு கிளிக் செய்யுங்கள்.
- செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
- சாட் ஆப்ஷன் சென்று சாட் பேக்கப் கிளிக் செய்யுங்கள்.
- பேக்கப் ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யுங்கள். உங்களின் கூகுள் டிரைவ் அக்கௌன்ட் இல் பேக்கப் ஆகிவிடும்.

Best Mobiles in India

English summary
Tech Tips: How to backup your WhatsApp chats on Google Drive : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X