அலெர்ட்! திடீரென்று நீல நிறத்தில் மாறும் லேப்டாப் ஸ்க்ரீன்.. OFF செஞ்சிட்டு அப்படியே விட்டுறாதீங்க!

|

சமீபத்தில் எப்போதாவது உங்கள் லேப்டாப்பின் ஸ்க்ரீன் ஆனது திடீரென்று நீல நிறத்திற்கு மாறியதை (Laptop Blue Screen Error) கவனித்தீர்களா?

ஆம் என்றால் அடுத்தமுறை அப்படி நடக்கும் போது, முதல் வேலையாக உங்கள் லேப்டாப்பை உடனே ஆப் (OFF) செய்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை இருக்கிறது!

ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்!

ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்!

"நீல நிறத்தில் மாறும் லேப்டாப் ஸ்க்ரீன்" என்கிற தலைப்பில் நாம் இங்கே பேசுவது - விண்டோஸ் பிசி அல்லது லேப்டாப்பில் ஏற்படும் பேட் சிஸ்டம் கான்ஃபிக் இன்ஃபோ (Bad System Config Info) என்கிற பிழையை (Error) பற்றித்தான்!

இதை ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் (Blue Screen of Death - BSOD) என்றும் கூறுவார்கள்!

இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!இது தெரிஞ்சதும் Settings-க்கு போவீங்க! இந்த 5 சீக்ரெட் அம்சங்களும் சில போன்களில் மட்டுமே கிடைக்கும்!

இந்த Error ஏற்பட என்ன காரணம்?

இந்த Error ஏற்பட என்ன காரணம்?

உங்களின் விண்டோஸ் பிசி அல்லது விண்டோஸ் லேப்டாப்பில் உள்ள ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதேனும் தவறு ஏற்பட்டு விட்டது என்றால், உங்கள் லேப்டாப் ஸ்க்ரீன் ஆனது நீல நிறத்திற்கு மாறி விடும்.

இப்படியான Bad System Config Info சிக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன: தவறான ஹார்ட்வேர், மோசமான ட்ரைவர், தவறான சிஸ்டம் செட்டிங்ஸ் என இந்த நிகழ்விற்கு பின்னால் பல வகையான காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதை சரி செய்ய ஒரே ஒரு வழி தான் உள்ளது!

சரி செய்வது எப்படி?

சரி செய்வது எப்படி?

விண்டோஸ் பிசி அல்லது லேப்டாப்பில் ஏற்படும் பேட் சிஸ்டம் கான்ஃபிக் இன்ஃபோ சிக்கலை சரிசெய்ய அதிக நேரம் எடுக்காது.

அதே நேரம் - முன்னரே குறிப்பிட்டது போல - இந்த சிக்கலை சரிசெய்ய நமக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. அது உங்கள் லேப்டாப்பை உடனே OFF செய்வதே ஆகும். அதுமட்டுமல்ல, ஆப் செய்த பிறகும் கூட நீங்கள் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன.

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

முதலில் ஆப் செய்ய வேண்டும்.. பின்னர்?

முதலில் ஆப் செய்ய வேண்டும்.. பின்னர்?

- உங்கள் Windows 11 லேப்டாப்பில் பேட் சிஸ்டம் கான்ஃபிக் இன்ஃபோ எரர் ஏற்பட்டு விட்டால், லேப்டாப்பின் பவர் பட்டனை லாங் பிரஸ் செய்து, அதை ஆஃப் செய்யவும்.

- பின்னர் ரீஸ்டார்ட் (Restart) செய்யவும். இப்போது பிசியின் உற்பத்தியாளர் லோகோ (Manufacturer's logo) தெரிந்தவுடன், லேப்டாப்பை மீண்டும் ஆப் (OFF) செய்யவும். 'தயவுசெய்து காத்திருங்கள்' (Please wait) என்பதை நீங்கள் பார்க்கும் வரை இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.

ட்ரபில்ஷூட் முதல் சிஸ்டம் ரீஸ்டோர் வரை..

ட்ரபில்ஷூட் முதல் சிஸ்டம் ரீஸ்டோர் வரை..

- பிறகு ட்ரபில்ஷூட் (Troubleshoot) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- அதை தொடர்ந்து அட்வான்ஸ்டு ஆப்ஷன்ஸ் (Advanced Options) என்கிற விருப்பத்தை ர்ந்தெடுக்கவும்.

- இப்போது சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore) என்பதை கிளிக் செய்யவும்.

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டை(Administrator account) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட்-ஐ (Password) உள்ளிடவும். பிறகு கன்ட்டினியூ (Continue) என்பதைக் கிளிக் செய்யவும்.

- இப்போது உங்கள் சிஸ்டத்தை ரீஸ்டார்ட் (Restart) செய்ய ஒரு ரீஸ்டோர் பாயிண்ட்டை (Restore point) தேர்ந்தெடுக்கவும். உங்கள் சிஸ்டமில் முன்னதாக நீங்கள் பயன்படுத்திய configuration-ஐ தேர்ந்தெடுக்கவும்; அவ்வளவு தான்!

ஒருவேளை இந்த சிக்கல் தொடர்ந்தால், உங்கள் பிசி-ஐ ரீசெட் (Reset) செய்யவும்!

Best Mobiles in India

English summary
Suddenly your Windows 11 laptop screen turns blue and shows Bad system config info how to fix it

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X