Home
How to

ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் வீடியோ ரெசல்யூஷன் சரிபார்ப்பது எப்படி?

வீடியோ ரெசல்யூஷனை உங்களின் தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும். சில சமயங்களில் வீடியோ ரெசல்யூஷனை நீங்கள் அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும்.

By Meganathan S

ஸ்மார்ட்போன் அல்லது மற்ற டிஜிட்டல் திரைகளில் உள்ள பிக்சல்களின் எண்ணிக்கையை தான் வீடியோ ரெசல்யூஷன் என்கின்றனர். இவை (அகலம்xஉயரம்) கோணங்களில் மதிப்படப்படுகின்றன. ஒரு வீடியோவின் ரெசல்யூஷன் அதன் தரம் மற்றும் ஸ்டோரேஜ் அளவில் நேரடியாக பாதிக்கும்.

ஆன்ட்ராய்டு, விண்டோஸ் தளங்களில் வீடியோ ரெசல்யூஷன் சரிபார்க்க டிப்ஸ்.!

வீடியோ ரெசல்யூஷனை உங்களின் தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும். சில சமயங்களில் வீடியோ ரெசல்யூஷனை நீங்கள் அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். கம்ப்யூட்டரில் இருந்து ஸ்மார்ட்போனிற்கு வீடியோவை அப்லோடு செய்யும் போது ரெசல்யூஷன் குறைக்கப்பட வேண்டும், இவ்வாறு செய்யாத பட்சத்தில் வீடியோ வேலை செய்யாமல் போகலாம்.

ஆன்ட்ராய்டு தளத்தில் வீடியோ ரெசல்யூஷனை கண்டறிவது எப்படி?

ஆன்ட்ராய்டு தளத்தில் வீடியோ ரெசல்யூஷனை கண்டறியும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம். ஆன்ட்ராய்டு தளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வீடியோக்கள், அல்லது மற்ற சாதனங்களில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களின் ரெசல்யூஷனை அறிந்து கொள்ள முடியும்.

1 - ஸ்மார்ட்போனின் கேலரியை திறந்து, ஏதேனும் வீடியோவை தேர்வு செய்ய வேண்டும்.


2 - வீடியோவை ஓபன் செய்து இன்ஃபர்மேஷன் டேபை க்ளிக் செய்ய வேண்டும். இன்ஃபர்மேஷன் டேப் ஒவ்வொரு ஆன்ட்ராய்டு சாதனத்திலும் வேறுபடும்.


3 - இன்ஃபர்மேஷன் டேபை தேர்வு செய்யும் போது குறிப்பிட்ட வீடியோக்களின் ரெசல்யூஷன், ஃபைல் அளவு மற்றும் ஸ்டோரேஜ் பாத் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

ஆன்ட்ராய்டு, விண்டோஸ் தளங்களில் வீடியோ ரெசல்யூஷன் சரிபார்க்க டிப்ஸ்.!

விண்டோஸ்-இல் வீடியோ ரெசல்யூஷன் பார்க்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


1 - வீடியோ ஃபைலை தேர்வு செய்து, ரைட் க்ளிக் செய்ய வேண்டும்.


2 - டிராப்-டவுன் மெனுவில் இருந்து பிராப்பர்டீஸ் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும்.


3 - வீடியோ பிராப்பர்டி ஸ்கிரீனில் உள்ள டீடெயில்ஸ் டேபை க்ளிக் செய்ய வேண்டும்.


4 - டீடெயில்ஸ் டேபில் வீடியோவின் ரெசல்யூஷன் உள்பட பல்வேறு தகவல்களை வழங்கும்.

Best Mobiles in India

English summary
Android, Windows, How To, Tech Tips, Smartphone, Technology, News, India, ஆன்ட்ராய்டு ,விண்டோஸ், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X