Home
How to

Valentine's Day டிப்ஸ்: 90ஸ் கிட்ஸ் & முரட்டு சிங்கிள்ஸ் இதை படிக்க வேண்டாம்.. கடுப்பாகிடுவீங்க!

ஒரு விஷயத்தை பண்ணாதனு சொன்னா, அதைத்தான் முதல்ல செய்வாங்க.. அவங்க தான் 90ஸ் கிட்ஸ்! ஆனால் முரட்டு சிங்கிள்களுக்கு பொதுவான குணங்கள் என்று எதையும் சுட்டிக்காட்டிவிட முடியாது. ஆனால் கண்டிப்பாக ஜோடி இல்லாமல் தான் சுற்றுவார்கள். அதெல்லாம் சரி.. இப்போ எதுக்கு இதைப்பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்?

காரணம் இல்லாமல் பேசுவோமா?

அடுத்த ஒரு வாரத்திற்கு, அதாவது பிப்ரவரி 14 முடியும் வரை.. நின்றால் காதல், நடந்தால் காதல், தூங்கினால் காதல் என்று 360 டிகிரி கோணத்திலும் காதல் மழை உங்களை சுற்றிச்சுற்றி அடிக்கபோகிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் ஸ்டோரீஸ், இன்ஸ்டா ரீலிஸ், யூட்யூப் ஷார்ட்ஸ் என எங்கு பார்த்தாலும் காதல் அருவி கொட்டப்போகிறது. அதிலிருந்து தப்பிக்க விரும்புகிறவர்கள், இக்கட்டுரையில் இருந்தும் தப்பித்துக்கொள்ளவும்!

90ஸ் கிட்ஸ், முரட்டு சிங்கிள்ஸ் இதை படிக்க வேண்டாம்; கடுப்பாகிடுவீங்க!

லவ்வர்ஸ் டே டிப்ஸ் மற்றும் ஐடியாஸ்!

இது லவ்வர்ஸ் டே டிப்ஸ் மற்றும் ஐடியாக்களை வழங்கும் ஒரு கட்டுரையாகும். ஆகையால் இன்னமும் திருமணத்தை பற்றி சிந்திக்காத 90ஸ் கிட்ஸ்களுக்கும், "சிங்கிள் தான் கெத்து" என்று 24/7 கர்ஜிக்கும் முரட்டு சிங்கிள்களுக்கும் - இங்கே வேலை இல்லை!

ஒருவேளை காதலிக்கும் ஐடியா இருந்தால், ஒருவரை இம்ப்ரெஸ் செய்வது எப்படி? அவருக்கு என்ன கிஃப்ட் கொடுத்தால் அசந்து போவார்கள்? என்பதை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பினால்.. தொடர்ந்து படிக்கவும்:

ஆல் டே.. லவ்வர்ஸ் டே!

யாருக்கு, என்ன கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்று ஐடியா கிடைத்து விட்டாலே போதும், பிப்ரவரி 14 மட்டுமல்ல.. இந்த வருஷம் முழுக்க உங்களுக்கு காதலர் தினம் தான்!

அப்படியாக, 2023 காதலர் தினத்தன்று உங்கள் அன்புக்குரியவருக்கு நீங்கள் பரிசளிக்கக்கூடிய சிறந்த டெக் கிஃப்ட் ஐடியாக்களை (Best Tech Gift Ideas) இங்கே பட்டியலிட்டோம். அதுமட்டுமின்றி, குறிப்பாக எந்தெந்த மாடல்களை பரிசளிக்காமல் என்கிற டிப்ஸ்களையும் தொகுத்துள்ளோம்.

90ஸ் கிட்ஸ், முரட்டு சிங்கிள்ஸ் இதை படிக்க வேண்டாம்; கடுப்பாகிடுவீங்க!

01. ஸ்மார்ட்போன்

உங்கள் காதலனோ / காதலியோ 24 மணி நேரமும் உங்களை பற்றியே யோசிக்க வேண்டுமென்றால், நீங்கள் வாங்கி கொடுக்கும் பொருளானதும் 24 மணி நேரமும் அவருடனேயே இருக்க வேண்டும். அது ஒரு ஸ்மார்ட்போனாக இருந்தால் இன்னும் சிறப்பு!

லேட்டஸ்ட் மாடலை வாங்கும் அளவிற்கு பட்ஜெட் இல்லையென்றால்.. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக சற்றே பழைய ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல தள்ளுபடி மற்றும் நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி கொள்ளவும்!

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரீஸ், ஆப்பிள் ஐபோன் 12 அல்லது 13 சீரீஸ், ஐக்யூ 11 மற்றும் ஒப்போ ரெனோ 8டி ஆகியவைகளை கருத்தில் கொள்ளலாம்.

90ஸ் கிட்ஸ், முரட்டு சிங்கிள்ஸ் இதை படிக்க வேண்டாம்; கடுப்பாகிடுவீங்க!

02. ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட்போன் வாங்கும் அளவிற்கு பட்ஜெட் இல்லை என்பவர்கள், ஸ்மார்ட் வாட்ச்சை பரிசளிக்கலாம். இதுவும் கிட்டத்தட்ட நாள் முழுவதும் பயனளிக்கும் ஒரு புத்திசாலித்தனமான கிஃப்ட் தான்.

ரூ.2000 அல்லது ரூ.3000 க்குள் என்கிற பட்ஜெட்டாக இருந்தால்.. நாய்ஸ், ரியல்மி போன்ற பிராண்டுகளை தேர்வு செய்யலாம்.

ஒருவேளை பிரீமியம் ஸ்மார்ட் வாட்ச்சை வாங்க விரும்பினால் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 போன்றவற்றை பரிசளிக்ககலாம்.

03. ஹெட்ஃபோன்ஸ்

உங்கள் காதலனோ அல்லது காதலியோ ம்யூசிக் லவ்வர் ஆக இருந்தால்.. உங்களை விட இசையை அதிகம் நேசித்தால்.. அவருக்கு ஒரு தரமான ஹெட்போன்ஸை வாங்கி கொடுப்பதை விட சிறந்த காதலர் தின பரிசு வேறு எதுவும் இருக்காது!

பிரீமியம் விலையல் வாங்க விரும்பினால் Apple AirPods 3ர்ட் ஜென்-ஐ வாங்கலாம். பட்ஜெட் விலையில் தேடினால் Dizo, Boat, Noise, Truke போன்ற பிராண்டுகளை கருத்தில் கொள்ளலாம்.

04. ப்ளூடூத் ஸ்பீக்கர்

உங்கள் காதலன் / காதலியிடம் ஏற்கனவே ஒரு நல்ல ஹெட்போன்ஸ் இருக்கிறது என்றால்.. கவலைப்பட வேண்டாம். வெயிட்டான சவுண்ட் குவாலிட்டியை வழங்கும் ஒரு நல்ல ப்ளூடூத் ஸ்பீக்கரை வாங்கி கொடுத்து அசத்தி விடுங்கள்!

இது நல்ல ஐடியாவே இருக்கே என்பவர்கள் JBL, BOSE, Sony, Blaupunkt போன்ற நிறுவங்களின் தயாரிப்புகளை கருத்தில் கொள்ளலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Sorry 90s Kids and Morattu Singles But Its Valentines Day Week Here is Our Top 4 Tech Gift Ideas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X