ரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.!

எலக்ட்ரி பைக் தற்போது ஒன்பது முக்கிய நகரங்களான மும்பை, கோவா, புனே, அகமதாபாத், டெல்லி-என்.சி.ஆர், சண்டிகார், சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் கிடைக்கும்.

|

ஐதராபாத் நிறுவனமான ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றான டிரான்ஸ் நிறுவனம் இன்று டிரான்ஸ் ஒன் என்ற எலக்ட்ரிக் பைக் ஒன்றை ரூ.49,999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.!

இந்த புதிய எலக்ட்ரி பைக் தற்போது ஒன்பது முக்கிய நகரங்களான மும்பை, கோவா, புனே, அகமதாபாத், டெல்லி-என்.சி.ஆர், சண்டிகார், சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் முறையான அப்பாயின்மெண்ட் பெற்று வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை ஓட்டி பார்க்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்

டிரான்ஸ்

டிரான்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில் இந்த எலக்ட்ரிக் பைக் அறிமுகம் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையாக கருதுவதாக இந்த நிறுவனத்தின் சேர்மன் மகேஷ் லிங்காரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட்ரான் மற்றும் டிரான்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களில் நவீன தொழில்நுட்பங்களை இணைப்பதன் மூலம் தனித்துவமாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்.

வோல்டா மோட்டார்ஸ்

வோல்டா மோட்டார்ஸ்

இந்த டிரான்ஸ் மோட்டார் நிறுவனம் இதற்கு முன்னர் அனுப் நிஷாந்த் தலைமையில் சென்னையில் வோல்டா மோட்டார்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது. அதன் பின்னர் ஸ்மார்ட்ரான் டிரான்ஸ் என்ற பெயரில் உள்ள இந்தா நிறுவனம் எலக்ட்ரிக்கல் தொடர்புள்ள வாகனங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

ஸ்மார்ட் டிஸ்ப்ளே

ஸ்மார்ட் டிஸ்ப்ளே

டிரான்ஸ் ஒரு ஸ்மார்ட் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இது டிரோன்எம்எம்டி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு ஒருங்கிணைந்த டிபி எக்ஸ் பயன்பாடாக வருகிறது, இது உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து எல்லாவற்றையும் மதிப்பிட மற்றும் உடற்பயிற்சி இலக்குகளை அனுமதிக்கிறது

50 கிமீ வேகத்தில்

50 கிமீ வேகத்தில்

இந்த எலக்ட்ரிக் பைக் தற்போது மணிக்குக் 25கிமீ செல்லும் வகையில் இருந்தாலும் இன்னும் அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த பைக்கில் வெர்ட்சுவல் கியர்கள், மூன்று எலக்ட்ரிக் கியர்கள் மற்றும் ஆறு ஸ்பீட் ஷிப்டர்கள் உள்ளன. மேலும் இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 50 கிமீ வேகத்தில் 70 முதல் 85 கிமீ வரை எலக்ட்ரிக் கியர்களை அட்ஜெஸ்ட் செய்து செல்லலாம்

எஞ்சினியர்களின் பெரும் முயற்சியில் உருவானது

எஞ்சினியர்களின் பெரும் முயற்சியில் உருவானது

டிரான்ஸ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அனுப் நிஷாந்த் அவர்கள் இந்த எலக்ட்ரிக் பைக் குறித்து மேலும் கூறியபோது, 'டிரான்ஸ் ஒன் இந்தியாவில், இந்திய வாடிக்கையாளர்களுக்காக எங்களுக்கு சிறந்த வாய்ந்த டிசைனர்கள் மற்றும் எஞ்சினியர்களின் பெரும் முயற்சியில் உருவானது. இந்த மாடலின் சிறப்பு அம்சமாக கூறப்படுவது என்னவெனில் இதில் லித்தியம் பேட்டரி டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. அட்வான்ஸ் சாம்சங் செல்களை கொண்ட இந்த பேட்டரி இந்த பைக்கை நல்ல முறையில் இயக்க உதவுகிறது. டிரான் எக்ஸ்டி.எம் எக்கோ சிஸ்டத்தால் இயங்கும் இந்த எலக்ட்ரிக் பைக்கை ஓட்டுவதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்கள் ஆச்சரியமான, நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Smartron Tronx One Indias first smart crossover electric bike launched at Rs49999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X