Smartphone Hanging: இந்த தவறை சரிசெய்தால் சாதா போனும் iPhone தான்!

|

நமது நிலை அறிந்து ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். தகுதிக்கு மீறி ஆடம்பர பொருட்களை கடனுக்கு வாங்கினால் அது நமக்கு சிக்கல் தான். நமது கடன் சுமையும் அதிகமாகும், மன அமைதியும் தொலையும்.

அதேபோல் ஒரு இஎம்ஐ செலுத்திக் கொண்டிருக்கும் போது மற்றொரு பொருளை இஎம்ஐக்கு வாங்கக்கூடாது இது நமது மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழ வைக்கும். இரண்டு இஎம்ஐ-கள் கட்டுவதிலும் சிக்கல் ஏற்படும். இதே நிலை தான் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலும்.

நிலை மற்றும் தகுதி அறிவது அவசியம்

நிலை மற்றும் தகுதி அறிவது அவசியம்

இதில் "நிலை" என்பது ஸ்மார்ட்போனின் ரேம் பவர். ஒரு ஸ்மார்ட்போனின் ரேம் பவர் என்ன என்பதை அறிந்தே அதில் ஆப்ஸ்-கள் டவுன் லோட் செய்ய வேண்டும்.

ரேம் பவர் மீறி அதிக கிராஃபிக்ஸ் தன்மை கொண்ட ஆப்ஸ் டவுன்லோட் செய்தால்.. அது ஸ்மார்ட்போனை நிலை குலைய வைக்கும்.

அதேபோல் "தகுதி" என்பது ஸ்மார்ட்போனின் இன்டெர்னல் ஸ்டோரேஜ். அதை எப்போதும் ஓரளவிற்கு ஃப்ரீயாக வைத்திருக்க வேண்டும்.

முழுவதும் பிசியாக வைத்திருக்கக் கூடாது. கடன் சுமை அதிகரித்தால் மன அமைதி கெடுவது போல் இன்டெர்னல் மெமரி ஃபுல் ஆனால் ஸ்மார்ட்போனின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும்.

முக்கிய பிரச்சனைக்கு காரணம்

முக்கிய பிரச்சனைக்கு காரணம்

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு அம்சங்களோடு விற்பனைக்கு கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் பொதுவாக அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை "Hanging". இதற்கு முக்கிய காரணம் ரேம் பவர் தான்.

ரேம் பவர் கவனித்தல் அவசியம்

ரேம் பவர் கவனித்தல் அவசியம்

அந்த ஸ்மார்ட்போனில் ஒருவர் சூப்பர் கேம் விளையாடுகிறார் என்று நாமும் நமது போனில் விளையாடக் கூடாது. அவர்களது போன் 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் ஸ்மார்ட்போனாக இருக்கும். நமது போன் 4 ஜிபி ரேம் ஆக இருக்கும் பட்சத்தில் ஹேங் ஆவதற்கு பெரிய அளவில் வழிவகுக்கும்.

சந்தையில் வெவ்வேறு ரேம் பிரிவில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கிறது, நமது ஸ்மார்ட்போன் ரேம் எவ்வளவோ அதை அறிந்து அதற்கு தகுந்த அளவிலான பயன்பாட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எத்தனை ஆப்ஸ் ரன் ஆகிறது

சராசரி பயன்பாட்டை தான் பயன்படுத்துகிறோம் இருப்பினும் Hang ஆகிறது என்றால். உங்கள் ஸ்மார்ட்போனின் பேக்ரவுண்டில் எத்தனை ஆப்ஸ் ரன் ஆகிறது என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ளவும். தேவையில்லாம் ரன் ஆகும் ஆப்ஸ்-களை க்ளோஸ் செய்து கொள்ளவும்.

லைவ் வால்பேப்பர்களை தவிர்க்கவும்

லைவ் வால்பேப்பர்களை தவிர்க்கவும்

அனிமேஷன் அல்லது லைவ் வால்பேப்பரை பயன்படுத்த வேண்டாம். காரணம் இது ரேம் செயல்திறனை நேரடியாக பாதிக்கும்.

ஒவ்வொரு முறை மெனு பட்டன் அழுத்தும் போதும் ஸ்மார்ட்போன் Hang ஆகும். உங்கள் ஸ்மார்ட்போனின் வால்பேப்பரை எளிமையாக வைத்திருக்க முயற்சிக்கவும்.

மெமரி ஃபுல்

மெமரி ஃபுல்

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் மெமரியை ஓரளவிற்கு ஃப்ரீயாக வைத்திருக்கவும். எத்தனை அளவு ஃப்ரீயாக வைத்திருக்கிறீர்களோ அத்தனை அளவு வேகமாக ஸ்மார்ட்போன் செயல்படும். புகைப்படம், வீடியோ, பாடல்கள் என அனைத்தையும் மெமரி கார்டில் சேமித்துக் கொள்ளுங்கள்.

பல டேப்கள் ஓபன் செய்வது தவறு

பல டேப்கள் ஓபன் செய்வது தவறு

இணையதளத்தை பயன்படுத்தும் போது பல டேப்களை ஓபன் செய்ய வேண்டாம். ஒவ்வொன்றும் Load ஆகிக் கொண்டிருக்கும் இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் பெரிதளவு Hang ஆகும். ஒரு டேப் மட்டும் ஓபன் செய்து அதை பயன்படுத்திவிட்டால் க்ளோஸ் செய்துவிடவும்.

ஸ்மார்ட்போன் தரம்

ஸ்மார்ட்போன் தரம்

குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதிக எம்பி-க்கள் கொண்ட ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டாம். ஸ்மார்ட்போன்களின் தரம் அறிந்து பயன்படுத்துவது அவசியம்.

Anti-virus பயன்பாடு

Anti-virus பயன்பாடு

உங்கள் மொபைலில் நம்பகமான Anti-virus மென்பொருளை நிறுவவும். இதை அவ்வப்போது ஸ்கேன் செய்து உங்கள் மொபைலில் தீம்பொருள் விளைவிக்கும் வைரஸ் ஏதும் உள்ளதா என்பதை தொடர்ந்து சோதித்துக் கொள்வது அவசியம். இது இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியம்.

Cache

Cache

நாம் தினசரி பயன்படுத்தும் பயன்பாடுகள் Cache-ஐ உருவாக்குகின்றன. இது ஸ்மார்ட்போனை ஹேங் ஆவதற்கு வழிவகுக்கும். ஒவ்வொரு ஆப்ஸ்களையும் ஓபன் செய்து Cache-ஐ கிளியர் செய்து கொள்ளவும்.

Software update

Software update

ஸ்மார்ட்போன் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று About Phone என்ற தேர்வை தேர்ந்தெடுத்து சோதித்தால் உங்களுக்கு Software update உள்ளதா என்பதை அறியலாம். Software update இருக்கு என்பதை அறிந்தும் பல பேர் தினசரி டேட்டா வீணாகிவிடுமே என அப்டேட் செய்வதில்லை.

இது மிக தவறு, ஸ்மார்ட்போன்களின் அடிப்படை கட்டமைப்பில் பிழைகளை கண்டறிந்து, அதை சரிசெய்து நிறுவனம் வழங்குவது தான் Software update என்பது. இதை முறையாக அப்டேட் செய்து கொள்வது அவசியம்.

தேவையில்லாத தரவுகளை டெலிட் செய்யவும்

தேவையில்லாத தரவுகளை டெலிட் செய்யவும்

File Manager பயன்பாட்டுக்குள் சென்று ஒவ்வொன்றையும் சோதித்து எது தேவையில்லையோ அதை டெலிட் செய்யவும். இது ஸ்மார்ட்போனின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும்.

Best Mobiles in India

English summary
Smartphone Hanging problems: Best Ways to Solve Phone issues

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X