வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த எளிய வழிமுறைகள்.!!

By Aruna Saravanan
|

வீட்டில் வீடியோ கண்காணிப்பு கேமரா பொருத்துவது அனைவருக்குமே மிகவும் நல்லது. நாம் வீட்டில் இல்லாத சமயம் உங்கள் வீட்டை யார் பாதுகாப்பது என்று சிந்தித்து இருக்கின்றீர்களா? அந்த நேரங்களில் உங்கள் பொருட்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும் வீடியோ கண்காணிப்பு கேமரா.

இன்று பல கடைகள், சமூக கூடங்கள், மற்றும் பொது இடங்களில் 24x7 வீடியோ கண்காணிப்பு அடங்கிய CCTV கேமரா பொருத்துகின்றனர். பின்பு ஏன் உங்கள் வீட்டில் பொருத்தக் கூடாது. இங்கு வீடியோ கண்காணிப்பு பொருத்த சில எளிய முறைகளை தான் தொகுத்திருக்கின்றோம்.

வெப்கேம்

வெப்கேம்

வெப்கேம் போன்ற கேமராவை நீங்கள் ஏற்கனவே உங்கள் வீட்டில் பொருத்தி இருக்கக் கூடும். இந்த வெப்கேமை செக்யூரிட்டி கேமராவாக பொருத்தி கொள்ள முடியும். Icam மிகவும் பிரபலமான மென்பொருளாக இயங்கி வருகின்றது. இதை விண்டோஸ் மற்றும் மேக் கணினியுடனும் அல்லது ஐபோனுடன் இணைத்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கு உங்கள் மொபைல் ஆப்பில் $5 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

பழைய ஸ்மார்ட் போன்

பழைய ஸ்மார்ட் போன்

உங்கள் பழைய ஸ்மார்ட் போனை பயனுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது. இன்றைய காலக்கட்டத்தில் எல்லா போனிலும் கேமரா உள்ளது ஏன் நீங்கள் அதை பயன்படுத்தக் கூடாது. ஐபோன், ஆண்ட்ராய்ட் ப்ளாக்பெரி என எதுவாக இருந்தாலும் அதில் உள்ள கேமரா உங்களுக்கு பயன் தரும். உங்கள் பழைய போனில் இருந்து புதிய போனுக்கு நேரலையில் வீடியோ அனுப்பக்கூடிய பொருத்தமான ஆப்ஸை மட்டும் தேடி எடுங்கள். எடுத்துக்காட்டாக presence. இது ஒரு இலவச iOS ஆப். இதன் மூலம் வை-பை அல்லது மற்ற நெட்வர்க் மூலம் லைவ் வீடியோவை நீங்கள் தூரத்தில் இருந்து பார்க்க முடியும். இதில் கண்காணிப்பு அம்சம் உள்ளது. இதில் ஆடியோ வசதியும் உள்ளது.

ஆக்ஷன் கேம்

ஆக்ஷன் கேம்

இந்த கண்காணிப்பு மற்றும் ஸ்போர்ட் கேமரா அம்சம் கொண்ட ஒரு டூ இன் ஒன் கேமரா உங்களுக்கு உதவும். இதில் உள்ள FLIR FX அம்சம் 160 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கவும் மற்றும் 1080p பதிவு செய்யவும் உதவும். இதனால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை பதிவு செய்ய முடியும். இது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலிகளில் செயல் புரியும்.

Go Professional

Go Professional

இங்கு பட்டியல இடப்பட்டுள்ள மற்றவைகளை போல் இல்லாமல் வீட்டு கண்காணிப்பு கேமராவில் இது மிகவும் கச்சிதமானது. இது முக்கியமாக வீட்டு கண்காணிப்புக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள செயலி என்பதால் கொஞ்சம் அதிக செலவாகும் என்றாலும் மிகவும் சிறப்பானது. இதில் அதிக பவர் இருப்பதால் சில நேரங்களில் நெட் மூலம் நீங்கள் இதை பயன்படுத்தும் போது வேறு ஒருவர் தவராக கையாளக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

Raspberry Pi Security Cam

Raspberry Pi Security Cam

Raspberry Pi Security Cam விலை மலிவு என்பதுடன் இதனை யுஎஸ்பி வெப்கேம் அல்லது PI கேம் மூலம் செயல்படுத்த முடியும். இது லேசான எடை உடையது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

மொபைலில் அந்தரங்களை மறைக்க அற்புத வழிகள்.!!

மொபைல் போன் பாதுகாப்பு : அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Simple Ways to Set Up Remote CCTV At Home Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X