முழுவதும் தீர்ந்து போன லாப்டாப் பேட்டரியை சரி செய்வது எப்படி?

By Meganathan
|

லாப்டாப் பேட்டரிகளின் விலை சற்றே அதிகம் ஆகும். பழைய லாப்டாப் கருவிக்கு திடீரென அதிக பணம் செலவிடப் பலருக்கும் மனம் வராது. ஒரு வேளை மாற்றிடலாம் என்றாலும் நிதிநிலை காரணமாக பலரும் கரண்ட் உள்ளவரை நேரடியாக சார்ஜர் மூலம் பயன்படுத்துவர். பழைய கருவிக்கு அதிகம் செலவிடாமல் முழுமையாகத் தீர்ந்து போன பேட்டரிக்கு மறு வாழ்வு கொடுக்க சில எளிய வழிமுறைகள் இருக்கின்றது. அவற்றை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

குளிரூட்டு

குளிரூட்டு

முதலில் பேட்டரியை கழற்றி முழுமையாக அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பையில் அதனை வைத்து குளிரூட்டியினுள் (Freezer) அதனை சுமார் 11 முதல் 12 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும். பின் அதனை வெளியே எடுத்து முழுமையாகக் குளிர் இருக்கும் வரை காத்திருந்து பின் அதனைக் காய்ந்த சுத்தமான துணி கொண்டு துடைத்து மீண்டு லாப்டாப்பில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும். முழுமையாக சார்ஜ் ஆனதும் அதனை மீண்டும் காலியாக விட வேண்டும். பேட்டரி முழுமையாகத் தீர்ந்ததும் அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இதே வழிமுறையை 3 அல்லது 4 முறை பின்பற்ற வேண்டும்.

குறிப்பு: இந்த வழிமுறை NiCD அல்லது NiMH வகை பேட்டரிகளில் மட்டுமே வேலை செய்யும், உயிரற்ற லித்தியம் பேட்டரிகளில் இந்த வழிமுறை வேலை செய்யாது.

கூலிங் பேட்

கூலிங் பேட்

லித்தியம் பேட்டரி பயன்படுத்தினால் பேட்டரியின் வாழ்நாளைப் பாதுகாக்க லாப்டாப்பினை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். முடிந்தால் எப்பவும் கூலிங் பேட் பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும்.

ரீகேலிபரேட்

ரீகேலிபரேட்

லாப்டாப்பினை எந்நேரமும் சார்ஜ் செய்து பயன்படுத்தினாலும், பேட்டரியை முழுமையாக ஆஃப் ஆகவிடாமல் பயன்படுத்தும் போது பேட்டரியை ரீகேலிபரேட் செய்ய வேண்டும். இதனைச் செய்ய முதலில் லாப்டாப் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும்.ய பின் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து போகும் வரை அதனைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது லாப்டாப் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து போனால் அதனை மீண்டும் முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து முடித்தால் பேட்டரி ரீகேலிபரேட் செய்யப்பட்டு விடும்.

பேட்டரி

பேட்டரி

சில லாப்டாப்களை பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்ட நிலையில் பயன்படுத்த முடியும். உங்களது லாப்டாப்பில் இது சாத்தியமெனில் நேரடியாக மின்சாரம் செலுத்து லாப்டாப்பினை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரியின் ஆயுள் நீட்க்கும்.

சார்ஜிங்

சார்ஜிங்

இறுதியாக பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்து சார்ஜர் கேபிளை அகற்றிப் பயன்படுத்த வேண்டும். பேட்டரி 3 அல்லது 5 சதவீதம் வரும் போது அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி அளவு 30 முதல் 90 வரை இருக்கும் போது பேட்டரியின் ஆயுள் நீடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Simple Ways to Fix Your Dead Laptop Battery Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X