மொபைல் டேட்டா சிக்கனம் செய்ய எளிய டிப்ஸ்.!!

By Meganathan
|

ஒரு மாதம் முழுக்க நீடிக்கும் அன்லிமிட்டெட் டேட்டா பிளான்கள் இன்றும் விலை அதிகமான ஒன்றாகவே இருக்கின்றது. இது அனைவருக்கும் உகந்ததாகவும் இருக்காது. குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படும் டேட்டாவை மாதம் முழுக்க பயன்படுத்துவது அதிக சிக்கல் நிறைந்ததாகும். இங்கு குறைந்த டேட்டா பிளான்களை மாதம் முழுக்க பயன்படுத்த சில எளிய டிப்ஸ்களை தான் தொகுத்துள்ளோம்..

1

1

இன்று வீடு, அலுவலகம் என எங்கு சென்றாலும் எல்லா இடத்திலும் வை-பை கிடைக்கின்றது தான். இருந்தும் வெளியே செல்லும் போதும், பயணங்களின் போதும் டேட்டா பிளான்கள் தான் அனைவரும் நம்ப வேண்டியுள்ளது.

2

2

கூகுள் க்ரோம் பிரவுஸரில் டேட்டா கம்ப்ரஷன் அம்சம் முயற்சி செய்யலாம். இந்த அம்சமானது மொபைலில் பிரவுஸிங் செய்யும் போது டேட்டா பயன்பாட்டை குறைக்கின்றது.

3

3

இந்த அம்சத்தினை ஆக்டிவேட் செய்ய க்ரோம் மெனு சென்று Settings > Data Saver க்ளிக் செய்தால் போதும்.

4

4

மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப்ஸ் அப்டேட் ஆகும் போது தான் டேட்டா அதிகளவு செலவாகும். இதனால் ஆப்ஸ்களை வை-பை கனெக்ஷனில் மட்டும் அப்டேட் செய்ய வேண்டும்.

5

5

மொபைலில் ஆப்ஸ்களை அப்டேட் செய்யும் ஆப்ஷனை கூகுள் ப்ளே ஸ்டோர் செட்டிங்ஸ் சென்று வை-பை கனெக்ஷனில் மட்டும் அப்டேட் செய்யும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

6

6

டேட்டா பேக் பயன்படுத்தினால் இது சாத்தியமில்லை என்றாலும், ஆவலில் கூட ஆன்லைன் வீடியோக்களை பார்ப்பதை தவிர்க்கலாம். பாடல் மற்றும் வீடியோக்களை வை-பை இருக்கும் போது பயன்படுத்தினால் அதிகளவு டேட்டா சேமிக்க முடியும்.

7

7

கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற ஆப்கள் சிலவற்றை கேச்சி செய்ய அனுமதிக்கின்றன. இதை பயன்படுத்தி வை-பை கனெக்ஷனில் அவைகளின் சில சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் வை-பை இல்லா நேரங்களில் இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.

8

8

ரியல்-டைம் சின்கிங் மற்றும் புஷ் நோட்டிபிகேஷன்கள் சிறந்த சேவையை வழங்கினாலும் இவை அதிகளவு டேட்டா பயன்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் அக்கவுன்ட் சின்க் செட்டிங்ஸ் செக் செயவ்து சிற்பபானதாகும்.

9

9

சின்க் செ்டிங்ஸ் பயன்படுத்த கருவியின் Settings > Accounts சென்று தேவையான ஆப்ஷன்களுக்கு மட்டும் புஷ் நோட்டிபிகேஷன்களை செட் செய்து கொள்ளலாம்.

10

10

மொபைலில் டேட்டா மேனேஜ்மென்ட் ஆப்ஸ்களை பயன்படுத்தலாம். பொதுவாக இது போன்ற ஆப்ஸ்கள் டேட்டா பயன்பாட்டை 50% வரை குறைக்கும் திறன் கொண்டவையாகும். இந்த அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று பதிவிறக்கம் செய்திட முடியும்.

11

11

பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.??

கணினியில் அழிந்து போனவைகளை மீட்க எளிய தந்திரங்கள்.!!

12

12

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Simple tricks to reduce data usage on smartphone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X