Home
How to

டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை மறைப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

டெலிகிராம் செயலி ஆனது தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக இந்த டெலிகிராம் செயலி ஆனது பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் வாட்ஸ்அப் எப்போதும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது என்பது நமக்கு தெரியும்.

சிக்னல், டெலிகிராம்

இப்போதும் கூட வாட்ஸ்அப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் எது சிறந்தது? எது பாதுகாப்பானது? போன்ற கேள்விகளும் தேடல்களும் அதற்கான பதில்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் எந்த செயலி சிறந்தது என மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ்அப் போலவே டெலிகிராம்

அதன்படி வாட்ஸ்அப் போலவே டெலிகிராம் செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெலிகிராம் செயலியில் சில பாதுகாப்பு அம்சங்கள் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவதுஇந்த டெலிகிராம் செயலி மூலம் நீங்கள் செய்தி அனுப்பும் நபர்களிடமிருந்தோ அல்லது உங்களின் பொதுவான குழுக்களில்
இருப்பவர்களிடமிருந்தோ தனிப்பட்ட விவரங்களை மறைக்க முடியும்.

கூறவேண்டும் என்றால்

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உங்களது டெலிகிராம் செயலியில் போன் நம்பரை மறைக்க முடியும். இந்த வசதி நமக்கு பல்வேறு வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது டெலிகிராம் செயிலியில் உங்களது போன் நம்பரை எப்படி மறைப்பது என்பதை பற்றிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்களது டெலிகிராம் செயலியில்settings பகுதிக்கு செல்லவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து settings பகுதியில் இருக்கும் Privacy and Security என்பதை தேர்வுசெய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

Privacy and Security தேர்வுசெய்தவுடன், போன் நம்பர் (phone number) என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

போன்நம்பரை கிளிக் செய்தவுடன் மூன்று விருப்பங்கள் காணப்படும். everybody, my contacts, nobodyஎன்ற மூன்று விருப்பம் இருக்கும், அதில் nobody என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம்டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை மறைக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Simple tips to hide your phone number in Telegram app: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X