உங்கள் போனில் ஜியோ சிம் வேலை செய்யவில்லை எனில் இதைச் செய்து சரி செய்யுங்கள்.!!

By Staff
|

அடிச்சு புடுச்சு ஒரு ஜியோ சிம் கார்டு வாங்கிட்டீங்களா. மூன்று மாதங்களுக்கு எல்லாமே இலவசம் என்றதும் வாங்கி இருப்பீர்கள். எல்லோரும் ஜியோ சிம் வாங்க இது தான் காரணம். ஆனால் புதிய சிம் கார்டு சிலர் புதிய 4ஜி போன் வாங்கியும் ஜியோ சிம் வேலை செய்யவில்லையா. கவலை வேண்டாம் ஜியோ சிம் வேலை செய்ய வைக்க சில வழிமுறைகள் இருக்கின்றது. அதனை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?

சிம் கார்டு:

சிம் கார்டு:

முதலில் உங்களது ஜியோ சிம் கார்டு 4ஜி சப்போர்ட் செய்யும் ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளதா என்தை சரி செய்யுங்கள். சில கருவிகளில் ஒரு ஸ்லாட் மட்டுமே 4ஜி சப்போர்ட் செய்யும். 4ஜி சப்போர்ட் செய்யாத ஸ்லாட்டில் சிம் இருந்தால் அது வேலை செய்யாது.

ரீஸ்டார்ட்:

ரீஸ்டார்ட்:

4ஜி சப்போர்ட் கொண்ட ஸ்லாட்டில் ஜியோ சிம் பொருத்தியதும் கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை சிம் கார்டினை கழற்றி மீண்டும் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் ஜியோ சிம் வேலை செய்யும். இப்பவும் வேலை செய்யாவிட்டால் உங்களது கருவியில் ஜியோ வேலை செய்யாது.

சிக்னல்:

சிக்னல்:

டூயல் சிம் கொண்ட கருவியில் பிரைமரி ஸ்லாட்டில் ஜியோ சிம் கார்டினை பொருத்துங்கள். பின் குறிப்பிட்ட சிம் கார்டின் டேட்டா ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பாருங்கள். இதற்கு நோட்டிபிகேஷன் பேனலில் மொபைல் டேட்டா சென்று ஆன் செய்ய வேண்டும்.

நெட்வர்க்:

நெட்வர்க்:

இனி மொபைல் போனின் நெட்வர்க் செட்டிங்ஸ் சென்று பிரைமரி சிம் கார்டின் அனைத்து செட்டிங்ஸ்களும் சரியாக இருக்கின்றதா எனச் சரி பாருங்கள். மேலும் மொபைல் டேட்டா பயன்படுத்த பிரைமரி சிம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

எல்டிஇ நெட்வர்க்:

எல்டிஇ நெட்வர்க்:

பின் மொபைல் போனில் எல்டிஇ நெட்வர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வர்க்ஸ் -- பிரெஃபர்டு நெட்வர்க் டைப் ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும்.

ஏபிஎன்:

ஏபிஎன்:

தேவையென்றால் ஏபிஎன் மூலம் இண்டர்நெட் செட்டப் செய்ய வேண்டும். இதற்கு உங்களது கருவியில் ஜியோ சிம் சிக்னல் இருக்க வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வர்க்ஸ் -- அக்செஸ் பாயின்ட் நேம்ஸ் செல்ல வேண்டும்.

செட்டிங்ஸ்:

செட்டிங்ஸ்:

இனி நெட்வர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷன்களை மேனுவலாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வர்க்ஸ் -- நெட்வர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வன்பொருள்:

வன்பொருள்:

இனியும் ஜியோ சிம் வேலை செய்யவில்லை எனில் உங்களது மொபைல் போனின் மென்பொருள் அல்லது வன்பொருள் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ஒரு வேலை சிம் கார்டு வேலை செய்து அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால் இதனை முயற்சிக்கலாம்.

ஆப்ஸ்:

ஆப்ஸ்:

கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஜியோ ஜாயின் ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பெரும்பாலும் ஜியோ சிம் வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட கருவிகளில் ஜியோ வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாற்று:

மாற்று:

ஒரு வேலை இவை எதுவும் வேலை செய்யவில்லை எனில் ஒன்று புதிய மொபைல் போன் அல்லது ஜியோஃபை கருவியை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் புதிய கருவியை வாங்குவதை விட ஜியோஃபை கருவியின் விலை குறைவு ஆகும்.

Best Mobiles in India

English summary
Simple Tips to Fix Jio SIM not working in your phone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X