Home
How to

மேக்புக் இண்டர்நெட்டில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு நெட் கனெக்ட் செய்வது எப்படி?

மேக்புக் பயனாளிகள் எவ்வாறு இண்டர்நெட்டை லேப்டாப்பில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு கனெக்ட் செய்வது என்பது குறித்து பார்ப்போம்

By Lekhaka

இண்டர்நெட் என்பது தற்போது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் கம்ப்யூட்டரில் உள்ள இண்டர்நெட்டை மொபைல் போனுக்கும், மொபைல் போனில் உள்ள இண்டர்நெட்டை கம்ப்யூட்டருக்கும் கனெக்ட் செய்யும் விதத்தை பலர் தெரிந்திருப்பார்கள்.

மேக்புக் இண்டர்நெட்டில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு நெட் கனெக்ட் செய்வது

எனினும் மேக்புக் இண்டர்நெட்டில் இருந்து வைஃபை வழியாக ஸ்மார்ட்போனுக்கு இண்டர்நெட்டை கனெக்ட் செய்வது எப்படி என்பது தெரியுமா? அதுகுறித்து தற்போது பார்ப்போம்

உங்கள் லேப்டாப்பை வயர்லெஸ் ரூட்டர் மூலம் இணைக்க வேண்டும். ஒருவேளை உங்கள் லேப்டாப்பில் இன்புட் வயர்லெஸ் அடாப்டர் இருந்தால் நீங்கள் ஒரு மொபைல் ஹாட்ஸ்பாட்டை கிரியேட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் இதன் வழியாக மேக்புக் இண்டர்நெட்டை ஸ்மார்ட்போனுக்கு மாற்றலாம்

ரூ.7,300/-க்கு தெறிக்க விடப்போகும் கேலக்ஸி எஸ்8 (அம்சங்கள், வெளியீடு).!

மேக்புக் இண்டர்நெட்டில் இருந்து மொபைலுக்கு இண்டர்நெட்டை மாற்ற உங்களுக்கு ஒரு எதெர்நெட் கேபிள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி மேக்புக் பயனாளிகள் எவ்வாறு இண்டர்நெட்டை லேப்டாப்பில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு கனெக்ட் செய்வது என்பது குறித்து பார்ப்போம்

ஸ்டெப் 1:

ஸ்டெப் 1:

முதலில் ஆப்பிள் மெனு பகுதிக்கு சென்று அங்குள்ள 'Sharing' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் இண்டர்நெட் 'Sharing' என்ற ஆப்சன் வரும் அதை க்ளிக் செய்தால் போதும்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

'Sharing' ஆப்சனை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு Share your connection from" என்ற ஆப்சன் வரும். அதில் உள்ள டிராப் டவுனில் நீங்கள் எதெர்னெட் கனெக்சன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இதுதான் உங்கள் மேக் இண்டர்நெட்டை ஸ்மார்ட்போனுக்கு மாற்றும். ஆனால் அதற்கு முன்னர் எதெர்நெட் கேபிள் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இண்டர்நெட் கனெக்ஷன் இருக்கின்றதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

இந்த ஸ்டெப்பில் நீங்கள் செய்ய வேண்டியது வைஃபை இருப்பதை உறுதி செய்ய நீங்கள் ஒரு வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டை கிரியேட் செய்ய வேண்டும்.

இதற்கு நீங்கள் வைஃபையை க்ளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டே ஓப்பன் ஆகும். அதில் இருக்கும் வயர்லெஸ் நெட்வொர்க்கில் ஒரு புதிய நெட்வொர்க்கை சேர்க்க வேண்டும். இதில் இருக்கும் பாஸ்வேர்ட் ஆப்சனையும் நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4:

இந்த ஸ்டெப்பில் நீங்கள் இண்டர்நெட்டை பகிர விரும்புகிறீர்களா? என்று கேட்டு ஒரு விண்டே ஓப்பன் ஆகும். அதில் ஸ்டார்ட் என்று இருப்பதை க்ளிக் செய்துவிட்டால் போதும்

ஸ்டெப் 5:

ஸ்டெப் 5:

ஸ்டார்ட் என்பதை க்ளிக் செய்து இண்டர்நெட்டை எனேபிள் செய்துவிட்டால் தற்போது உங்களது லேப்டாப் நெட்வொர்க் உங்கள் ஸ்மார்ட்போனில் கனெக்ட் ஆகியிருக்கும். லேப்டாப்பில் நீங்கள் பதிவு செய்த அதே பாஸ்வேர்டை ஸ்மார்ட்போனில் பதிவு செய்து ஸ்மார்ட்போனில் உங்கள் விருப்பம் போல் இண்டர்நெட்டை பயன்படுத்தலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are the steps on how to share your Macbook internet with your smartphones via Wi-Fi. Take a look!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X