மேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்
மேக் ஓ.எஸ். நம் அனைவருக்கும் பிடிக்க பல்வேறு காரணங்களில் முதன்மையானதாக இருப்பதே அது பூட் மற்றும் ஷட் டவுன் வேகமாக இருப்பது தான் எனலாம்.
மேக் ஓ.எஸ். நம் அனைவருக்கும் பிடிக்க பல்வேறு காரணங்களில் முதன்மையானதாக இருப்பதே அது பூட் மற்றும் ஷட் டவுன் வேகமாக இருப்பது தான் எனலாம். இதன் அதிவேகத்திற்கு போட்டியாக அதன் செயல்திறன் மட்டுமே இருக்க முடியும்.
சில சமயங்களில் ஷட் டவுன் ஆகும் நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை பலரும் உணரலாம். சில நொடிகளில் நிறைவுறும் வேளை சற்றே நீடித்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஷட் டவுன் ஆகும் நேரத்தை குறைத்துக் கொள்ளலாம்.

ரி-ஓபன் விண்டோஸ்
மேக் கம்ப்யூட்டர்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் போது விண்டசை மீண்டும் திறக்கக் கோரும் ஆப்ஷன் திறக்கும். இந்த அம்சம் தற்சமயம் எளிமையாக்கப்பட்டுள்ளது. அதுவும் நேற்றைய பணிகளை மீண்டும் நீங்கள் துவங்க வேண்டுமெனில் இது பயனுள்ளதாக இருக்கும். எனினும் இவ்வாறு செய்ய ஓ.எஸ். உங்களது பணி விவரங்களை ஹார்டு டிரைவில் சேமித்து வைக்க வேண்டும். இதற்கு சில நிமிடங்கள் ஆகும் என்பதால் ஷட் டவுன் ஆவதில் தாமதமாகலாம். இதனால் ஷட் டவுன் செய்யும் போது இந்த ஆப்ஷன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ப்ரின்ட் பணிகள்
ப்ரின்ட் செய்ய முயன்று பின் அதை நிறைவுறாமல் இருந்தால், மேக் ஷட் டவுன் ஆவதில் தாமதம் ஆகலாம். நீங்கள் ப்ரின்டர் பயன்படுத்தினால், அதுவும் மேக் ஷட் டவுன் ஆகாமல் இருக்க காரணமாக இருக்கலாம். இதற்கு ஆப்பிள் மெனுவில் ப்ரின்டர் மற்றும் ஸ்கேனர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி உங்களின் ப்ரின்டரை தேர்வு செய்து, அதில் திறந்திருக்கும் அனைத்து பணிகளையும் மூட வேண்டும்.

செயலிகள்
மேக் கம்ப்யூட்டரில் அதிகளவு செயலிகளை திறந்து வைத்திருக்கும் போது சாதனத்தின் மெமரி அதிகமாக பயன்படுத்தப்படும். இது பழைய இயங்குதளங்களில் ஷட் டவுன் ஆகும் நேரத்தை அதிகப்படுத்தலாம். சில செயலிகள் உடனுக்குடன் க்ளோஸ் ஆகிவிடும் என்றாலும், சில செயலிகளுக்கு நேரம் கூடுதலாக தேவைப்படும். இதனால் செயலிகளை நீங்களாகவே க்ளோஸ் செய்ய Cmd+Q அல்லது Cmd+Option+Esc போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஹார்டு டிஸ்க்
ஹார்டு டிஸ்க் முழுக்க மெமரி ஆக்கிரமிக்கப்பட்டு இருத்தல் அல்லது சிறிதளவு மெமரி மட்டும் காலியாக இருப்பது போன்றவை கம்ப்யூட்டரில் பிரச்சனை ஏற்பட காரணமாகலாம். தற்காலிக தகவல்களை சேமிக்க செயலிகள் மற்றும் ஓ.எஸ்.க்கு மெமரி தேவைப்படும். இதனால் ஹார்டு டிஸ்க் மெமரியை காலி செய்துவிட்டு பின் ஷட் டவுன் செய்யலாம்.

டிஸ்க்
டிஸ்க் சீராக இயங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேக் கம்ப்யூட்டரில் இருக்கும் டிஸ்க் யூடிலிட்டி செயலியை திறக்க வேண்டும். இனி டிரைவை தேர்வு செய்து ஃபர்ஸ்ட் ஏய்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். டிஸ்க் முழுமையாக ஸ்கேன் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும். இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவை சரி செய்யப்படும்.

கேச்சி
சில செயலிகள் மற்றும் அம்சங்களை இயக்க கேச்சிக்கள் மிகவும் அவசியமானவை. கேச்சிக்களை க்ளியர் செய்ய இருவித வழிமுறைகள் இருக்கின்றன. கெர்னல் கேச்சி மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேகமாக பூட் செய்யலாம். அவ்வப்போது கேச்சிக்களை அழிக்கும் போது ஷட் டவுன் நேரம் எப்போதும் சீராக இருக்கும்.
கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போது ஷிஃப்ட் மற்றும் பவர் பட்டனை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மேக் சேஃப் மோடில் பூட் ஆகும். இதற்கான லாக் இன் விண்டோ தெரியும் வரை தொடர்ந்து அழுத்திப்பிடிக்க வேண்டும்.
செயலிகளின் கேச்சிக்களை அழிக்க ஸ்பாட்லைட் திறந்து ~/Library/Caches என சைப் செய்ய வேண்டும். இன் ஒவ்வொரு ஃபோல்டரில் காணப்படும் தரவுகளை ஒவ்வொன்றாக அழிக்க வேண்டும்.

என்.வி.ரேம்/பி.ரேம்
முக்கிய பணிகளை மேற்கொள்வதில் NVRAM/PRAM மற்றும் SMC உள்ளிட்டவை பார்த்துக் கொள்கின்றன. இவற்றை ரீசெட் செய்ய cmd+Option+P+R உள்ளிட்ட ஆப்ஷன்களை தொடர்ந்து அழுத்தி பிடிக்க வேண்டும். லோகோ திரையில் தோன்றி, மறையும் வரை தொடர்ந்து அழுத்தி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பூட் மற்றும் ஷட் டவுன் ஆகும் வேகம் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








