மொபைலில் அந்தரங்களை மறைக்க அற்புத வழிகள்.!!
ஸ்மார்ட்போன் கருவியினை சில நிமிட நோட்டம் கொண்டே ஒருவரின் குணத்தை கண்டுபிடித்து விடலாம். இன்று அழைப்பு, குறுந்தகவல்களை தாண்டி வங்கி முதல் பொழுதுபோக்கு வரை அனைத்திற்கும் ஸ்மார்ட்போன் கருவிகள் நமக்கு உதவி வருகின்றன. உண்மையில் நம்மை அவைகளுக்கு அடிமையாக்குகின்றன என்றே கூற வேண்டும்.
அந்த வகையில் ஸ்மார்ட்போன் கருவியில் தான் பெரும்பாலானோரின் வாழ்க்கை அடங்கியுள்ளது, அதாவது அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சேமித்து வைக்கப்படுகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களில் ஒருவரின் மன நிலையை பொருத்து பல அந்தரங்க புகைப்படக்களும் இருக்கலாம்.
மற்றவர்கள் பார்க்க கூடாத, அவர்கள் பார்க்க நாம் அனுமதிக்காத, அல்லது விரும்பாதவைகளை தான் அந்தரங்கம் என்று நாம் பிரிக்கின்றோம். அத்தகைய அந்தரங்க புகைப்படங்களை நமது மொபைல் கருவிகளில் இருந்து மற்றவர்கள் பார்க்காமல் இருக்க செய்யும் சில அற்புத செயலிகள் சாந்த தகவல்களை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்..!

Private Photo Vault
ஐஓஎஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும் இந்த செயலி புகைப்படம் மற்றும் ஆல்பங்களை பின் லாக் கொண்டு பாதுகாக்கின்றது.

Gallery Lock Lite
மற்ற செயலிகளை போன்று இல்லாமல், கேலரி லாக் லைட் செயலி உங்களது போனில் மறைந்திருக்கும். மேலும் இந்த செயலியானது யாரேனும் மறைமுகமாக புகைப்படங்களை பார்க்க முயற்சித்தால் அவர்களது புகைப்படத்தை எடுத்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் வேலை செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Secret Folder
நீங்கள் ரகசியங்களை பாதுகாக்கும் செயலியை பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை யாரும் கண்டுபிடிக்க வேண்டாம் என நினைத்தால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலி உங்களது மொபைலில் 'My Utilities' என்ற பெயரில் காணப்படும். முந்தைய செயலி போன்றே இந்த செயலியும் ரகிசயமாக உங்களது புகைப்படங்களை பார்க்க முயற்சிப்பவர்களின் புகைப்படத்தை எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செயலி ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கின்றது.

KeepSafe
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிமையான முறையில் ரகசியமாக வைக்க விரும்பினால் இந்த செயலி சரியான தேர்வாக இருக்கும். பின் லாக் முறையில் உங்களது ரகசியங்களை இந்த செயலி பாதுகாக்கின்றது. இந்த செயலி ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்கின்றது.

KYMS
இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் போது மொபைல் திரையில் கால்குலேட்டர் ஐகானில் இந்த செயலி பதிவாகி விடும். இந்த செயலியை திறக்கும் போது கால்குலேட்டர் போன்றே இருக்கும், இங்கு நான்கு இலக்கு
கடவுச்சொல்லை பதிவு செய்தால் உங்களது அனைத்து விதமான ரகசியங்களையும் பயன்படுத்த முடியும். இந்த செயலி ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கின்றது.

Vaulty
இந்த செயலி புகைப்படங்களோடு சேர்த்து வீடியோக்களையும் மறைத்து வைக்க உதவுகின்றது. மற்ற செயிலைகளை போன்றே ரகசியமாக புகைப்படங்களை பார்க்க நினைப்போரை புகைப்படம் எடுத்து இந்த செயலி நமக்கு தெரியப்படுத்தும். வால்டி செயலியை சப்ஸ்கிரைப் செய்திருந்தால் கருவி தொலைந்தாலும் புகைப்படங்களை மீட்க முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கின்றது.

PhotoVault
மற்ற செயலிகளை போன்று இல்லாமல் இந்த செயலியில் பிரைவேட் மற்றும் பப்ளிக் என இரு மோட்கள் இருக்கின்றன, பிரைவேட் மோடு கடவுச்சொல் கொண்டு பாதுகாத்திட முடியும். பப்ளிக் மோடு அனைவரும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கின்றது.

மேலும் படிக்க :
மொபைலில் மெமரி காலியா, 2 நிமிடத்தில் தூக்குவது எப்படி.??
மின்சாரம் தயாரிக்க டைனிங் டேபிள் போதும், அசத்தும் மாணவர்கள்.!!
வை-பை பாஸ்வேர்ட் : இனி ஒரு பயலும் கண்டுப்பிடிக்க முடியாது..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications