Just In
- 13 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 13 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 13 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 14 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
குளிர்காலத்தில் இதய பிரச்சினைகள் அதிகரிப்பது ஏன்? தடுக்க என்ன செய்யனும்? மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
TV, Phone வாங்க 'ஈஸி லோன்' கொடுக்கும் Samsung.. யாருக்கு, எவ்ளோ கிடைக்கும்?
இந்த 2022 தீபாவளி பண்டிகை காலத்தில் புதிய TV, ஏசி, ஸ்மார்ட்போன் போன்ற தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கேற்ற பட்ஜெட் கைவசம் இல்லையா?
ஆம் என்றால் கவலைப்பட வேண்டாம், நீங்கள் வாங்க விரும்பும் பொருளுக்காக - மிகவும் சுலபமான முறையில் கடன் கொடுக்க சாம்சங் நிறுவனம் (Samsung) தயாராக உள்ளது!

சாம்சங் நிறுவனத்தின் இன்னொரு பக்கம்!
மொபைல், டிவி, ஏசி போன்ற தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஒரு சாம்சங் நிறுவனத்திற்கு இன்னொரு பக்கம் உள்ளது. அது சாம்சங் பைனான்ஸ் பிளஸ் (Samsung Finance Plus) ஆகும்!
சாம்சங் பைனான்ஸ் பிளஸ் என்றால் என்ன? இதன் கீழ் லோன் வாங்குவது எப்படி? லோன் வாங்குவதற்கான தகுதிகள் என்னென்ன? இதற்காக என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? இதன் கீழ் என்னென்ன தயாரிப்புகளை வாங்கலாம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

என்னென்ன தயாரிப்புகளை வாங்கலாம்?
2022 தீபாவளி பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, சாம்சங் நிறுவனம் அதன் பைனான்ஸ் பிளஸின் பலன்களை பரந்த அளவிலான தயாரிப்புகளுக்கு மேம்படுத்தியுள்ளது.
இப்போது சாம்சங் பைனான்ஸ் பிளஸ் சேவையின் கீழ் - ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி, ஸ்மார்ட் டிவிகள், சவுண்ட்பார்கள், குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற சாம்சங் தயாரிப்புகளை மிகவும் எளிமையாக வாங்கலாம்.

முதலில் போன்களுக்கு மட்டுமே கிடைத்தது!
சாம்சங் நிறுவனம் அதன் பைனான்ஸ் பிளஸ் சேவையை கடந்த 2020-இல் அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்தில், இதன் கீழ் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மட்டுமே வாங்க கிடைத்தது.
ஆனால் தற்போது இந்த "கடன் அளிக்கும்" சேவை வீட்டு உபயோகப் பொருட்கள், டிவிகள் போன்ற அனைத்து வகைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் லோன் கிடைக்கும்?
சம்சம்ங் பைனான்ஸ் பிளஸ் வழியாக லோனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு 22 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதாவது 22 வயதை எட்டிய அனைவருக்குமே லோன் கிடைக்கும்!
மேலும் இந்திய ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்படும் KYC விதிமுறைகளுக்கும் நீங்கள் இணங்க வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
- மொபைல் எண்
- இமெயில் ஐடி
- வீட்டு முகவரி
- பான் கார்டு நம்பர்
- KYC ஆவணங்கள் (ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம்).
- சரிபார்ப்புக்காக ஒரு செல்பீயையும் நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
- வேலை தொடர்பான தேவையான விவரங்கள்.
- Direct debit registration-க்கான அக்கவுண்ட் விவரங்கள்

கடன் வாங்குவது எப்படி?
சில எளிய படிகளை பின்பற்றுவதன் வழியாக நீங்கள் சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸின் கீழ் கடனை பெறலாம்.
இதற்காக நீங்கள் உங்கள் அருகிலுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் ரீடெய்ல் ஸ்டோருக்குத் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.
அங்கே சாம்சங் பைனான்ஸ் பிளஸ் சேவையை வழங்கும் டெஸ்க்கை கேட்டறிந்து, KYC சரிபார்ப்பிற்கான இ-டாக்குமென்ட்களை சமர்ப்பிக்க வேண்டும்.

20 நிமிடங்களுக்குள் கடன் வழங்கப்படும்!
கேஒய்சி சரிபார்ப்பு மற்றும் கிரெடிட் ஸ்கோரிங் போன்ற பணிகள் முடிந்ததும், 20 நிமிடங்களுக்குள் எளிதான இஎம்ஐ பேமெண்ட் திட்டங்களுடன் உங்களுக்கான கடன் வழங்கப்படும்.
கடன் பெற்றதும், உங்களுக்கு பிடித்த சாம்சங் தயாரிப்பை எந்த தொந்தரவும் இல்லாமல் வாங்கிக்கொள்ள முடியும்.

அதிகபட்சம் எவ்வளவு கடன் வாங்கலாம்?
சாம்சங் ஃபைனான்ஸ்+ சேவையின் கீழ் அதிகபட்சமாக எவ்வளவு கடன் வாங்கலாம் என்கிற சரியான விவரங்கள் இல்லை.
நீங்கள் வாங்கப்போகும் சாம்சங் தயாரிப்பின் விலையை பொறுத்தே உங்களுக்கான அதிகபட்ச கடன் தொகை நிர்ணயம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது; இதுகுறித்த தெளிவான தகவல்களை சாம்சங் ரீடெய்ல் ஸ்டோரில் கேட்டு தெரிந்து கொண்டு, பின்னர் லோன் வாங்கவும்!

மொத்தம் 3000 சாம்சங் ஸ்டோர்களில்!
சாம்சங் நிறுவனத்தின் இந்த பைனான்ஸ் பிளஸ் சேவை ஆனது நாடு முழுவதும் 1,200 நகரங்களில் சுமார் 3,000 ரீடெயில் ஸ்டோர்களில் அணுக கிடைக்கிறது என்பதால், சாம்சங்கின் இந்த தீபாவளி லோன்-ஐ பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி, 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் சாம்சங் பைனான்ஸ் பிளஸ் சேவையானது 5,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470