பட்ஜெட் விலையில் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஜே4 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் இந்தியாவில் கேலக்ஸி ஜே4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஜே4 :
சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல்
திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் எக்ஸிநோஸ் 7570எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது,அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0
ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


விலை:
சாம்சங் கேலக்ஸி ஜே4 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.9,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications