டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை எப்படி மீண்டும் பெறுவது?இப்போதே முயற்சி செய்யுங்கள்.!

|

தெரியாமல் உங்கள் வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை டெலீட் செய்து விட்டீர்களா? டெலீட் ஆனா சாட் மெசேஜ்களை எப்படி ரீஸ்டோர் செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம் தெரியாமல் டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்ஜை ரீஸ்டோர் செய்வதற்கு சில வழிகள் உள்ளது, அதை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப்

வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப்

இந்த செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்களுடைய வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் சோதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்படவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் டெலீட் செய்த சாட்களை திரும்பப்பெற இயலாது.

ஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS

ஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS

டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை உங்கள் ஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS போன்களில் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ள உங்கள் கூகுள் டிரைவ் பேக்அப் மற்றும் ஐகிளவுட் சேவையை பயன்படுத்த வேண்டும். இந்த சேவைகளை உங்கள் வாட்ஸ் ஆப் இல் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் டெலீட் செய்த சாட்களை திரும்பப் பெற முடியாது.

<strong>பொது மக்களை மகிழ்விற்கும் அம்பானி-ஜியோவுக்காக அடுத்த அதிரடி பிளான் அம்பலம்.!</strong>பொது மக்களை மகிழ்விற்கும் அம்பானி-ஜியோவுக்காக அடுத்த அதிரடி பிளான் அம்பலம்.!

வாட்ஸ் ஆப் பேக்அப்

வாட்ஸ் ஆப் பேக்அப்

  • முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பேக்அப் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.
  • உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) ஓபன் செய்யுங்கள்.
  • சாட்ஸ்(Chats) கிளிக் செய்யுங்கள்.
  • சாட் பேக்அப்(Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இத்தகு கீழ் கொடுக்கப்பட்டுள்ள never, daily, weekly or monthly சேவையை கிளிக் செய்து உங்கள் சாட்களை பேக்அப் செய்துகொள்ளுங்கள்.
  • ஐபோனில் பேக்அப் செய்வது எப்படி?

    ஐபோனில் பேக்அப் செய்வது எப்படி?

    • உங்கள் ஐபோனில் எப்படி பேக்அப் சேவையை ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.
    • உங்கள் ஐபோனில் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
    • வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் (Settings) ஓபன் செய்யுங்கள்.
    • சாட்ஸ் (Chats) கிளிக் செய்யுங்கள்.
    • சாட் பேக்அப் (Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
      • ஆட்டோ பேக்அப் (Auto Backup) அல்லது பேக்அப் நௌ (Back Up Now) கிளிக் செய்யுங்கள்.
      • <strong>ஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு!</strong>ஒவ்வொரு ரீசார்ஜிலும் 100% உறுதியான கேஷ்பேக், டேட்டா, வாய்ஸ் கால், காலர் ட்யூன் பரிசு!

           சாட்களை ரீஸ்டோர் செய்யும் முறை

          சாட்களை ரீஸ்டோர் செய்யும் முறை

          • கிளவுட் சேவையைப் பயன்படுத்தி எப்படி டெலீட் ஆனா சாட்களை ரீஸ்டோர் செய்யும் முறை.
          • உங்கள் Android ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.
          • வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.
          • உங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும்.
          • நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால் கூகுள் டிரைவிலிருந்தும், ஐபோன் பயனராக இருந்தால் iCloud இருந்தும் சாட்கள் பேக்அப் செய்யப்படும்.
          • பேக்ஆப் ஆல் சாட் என்ற ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யவும்.
          • முக்கிய குறிப்பு:

            முக்கிய குறிப்பு:

            உங்கள் சாட்களை பேக்அப் செய்தால், பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்பட்டால் கண்டிப்பாக அதை மீட்டெடுக்க வழி இல்லை என்பதை நினைவில் கொள்க.

            <strong>நிலவுக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திராயன்-2: சாதனை உச்ச குஷியில் இஸ்ரோ.!</strong>நிலவுக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திராயன்-2: சாதனை உச்ச குஷியில் இஸ்ரோ.!

            டெலீட் ஆனா சாட்களை ஆண்ட்ராய்டு மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை

            டெலீட் ஆனா சாட்களை ஆண்ட்ராய்டு மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறை

            File Manager கிளிக் செய்யுங்கள்.
            WhatsApp ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள்.
            Database கிளிக் செய்யுங்கள், இங்கு தான் உங்கள் பேக்அப் டேட்டா ஃபைல்கள் இருக்கும்.
            msgstore.db.crypt12 என்ற ஃபைல் பெயரை msgstore_BACKUP.db.crypt12 என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
            இந்த ஃபார்மட் msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 அடிப்படியில் பல ஃபைல்கள் இருக்கும் ரிசென்ட் ஃபைலை கிளிக் செய்து msgstore.db.crypt12. என்று பெயர் மாற்றம் செய்யுங்கள்.
            இப்பொழுது உங்கள் கூகுள் டிரைவில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்து அந்த வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்யுங்கள்.

            பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய

            பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய

            • உங்கள் Android ஸ்மார்ட்போனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.
            • வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.
            • உங்கள் எண்ணை பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும்.
            • இப்பொழுது உங்கள் மொபைல் இல் உள்ள லோகல் மெமரியிலிருந்து பேக்அப் சாட் எடுத்துக்கொள்ளப்படும்.
            • Restore கிளிக் செய்தால் டெலீட் செய்யப்பட்ட உங்கள் சாட்கள் திரும்பக் கிடைத்துவிடும்.

Best Mobiles in India

English summary
Restore Deleted Whatsapp Chat Messages In Android And Iphone From Cloud And Local backup : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X