ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ஜியோ போனை புக்கிங் செய்வது எப்படி?

ஜியோ போனை டெல்லியில் உள்ள என்.சி.ஆர் பகுதியில் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Lekhaka
|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோனை வரும் ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் புக்கிங் செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் ஆஃப்லைன் புக்கிங்கை முன்கூட்டியே செய்யும் வசதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ஜியோ போனை புக்கிங் செய்வது எப்படி?

கடந்த மாதம் அறிவித்த தேதியில் இருந்து ஒரு வாரம் முன்கூட்டியா ஜியோ போனை டெல்லியில் உள்ள என்.சி.ஆர் பகுதியில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற பகுதியில் உள்ளவர்களுக்கும் விரைவில் இதேபோல் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதி செய்து தரப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நாம் ஜியோபோனை ஆஃப்லைனில் புக்கிங் செய்வது எப்படி? என்பது குறித்து பார்த்திருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது

பிஎஸ்என்எல் & மொபிவிக் வாலட் கூட்டனியில் பணமில்லா பரிவர்த்தனை.!பிஎஸ்என்எல் & மொபிவிக் வாலட் கூட்டனியில் பணமில்லா பரிவர்த்தனை.!

விதிமுறைகளின்படி ஜியோ போனை புக் செய்ய தேவையானது ஆதார் கார்ட் மட்டுமே. ஒரு ஆதார் கார்டுக்கு ஒரு போன் மட்டுமே புக் செய்ய முடியும். மொத்தமாக புக் செய்ய வேண்டுமானால் அதற்கு ஜிஎஸ்டிஎன் அல்லது பான் எண் வேண்டும்

ஆஃப்லைனில் ஜியோ போனை புக் செய்வது எப்படி?

ஆஃப்லைனில் ஜியோ போனை புக் செய்ய உங்கள் ஆதார் கார்டின் ஒரு காப்பியை அருகில் உள்ள ரீடெய்லரிடம் கொண்டு செல்லுங்கள். உங்களுடைய ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டதும், அதில் உள்ள விபரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களுக்கு ஒரு டோக்கன் எண் தரப்படும்.

மேலும் நீங்கள் இந்த புக்கிங்கை செய்யும் போது ரூ.1500 திரும்ப பெறக்கூடிய டெபாசிட் பணத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்னொரு வழியின் மூலமும் இந்த ஜியோ போனை எஸ்.எம்.எஸ் மூலம் புக் செய்யலாம். 7021170211 என்ற எண்ணுக்கு உங்கள் அருகில் உள்ள ரிலையன்ஸ் ரீடெயில் ஷோரூம் கோட் எண்ணை எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும். உங்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் உங்களுக்கு புக்கிங் உறுதியானதற்கான மெசேஜ் ஒன்று வரும்

ஆன்லைனில் ஜியோ போன் புக்கிங் செய்வது எப்படி?

ஆன்லைனில் ஜியோ போனை வரும் 24ஆம் தேதி முதல் மிக எளிதில் புக்கிங் செய்து கொள்ளலாம்

ஜியோ போனை ஆன்லைனில் புக்கிங் செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அல்லது உங்கள் மொபைலில் மை ஜியோ என்ற செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். ரிலையன்ஸ் இணையதளத்தில் ஜியோ போன் என்ற பேனரில் க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், இமெயில் முகவரி, போன் நம்பர், பின்கோடு நம்பர் ஆகியவற்றை பதிவு செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். உடனடியாக உங்களுக்கு இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதில் வரும். மேலும் உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் குறிப்பிடும் வரை உங்களது புக்கிங் உறுதி செய்யப்படாது என்பதையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்

Best Mobiles in India

Read more about:
English summary
JioPhone bookings have started in select retail stores in Delhi NCR region a week before the scheduled date.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X