ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!
ஏனைய பணப் பரிமாற்ற ஆப்களை போலவே ஜியோசாட் வழியாகவும் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
தமது வாடிக்கையாளர்கள் எளிதில் பணப்பரிமாற்றம் மேற்கொள்கின்ற வகையில் ஜியோ சாட் வழியாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
மக்கள் பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள வசதியாக அரசு அறிமுகம் செய்த பீம் ஆப் உட்பட பல நிறுவனங்கள் பணமில்லை பரிவர்த்தனை மேற்கொள்ள வசதியாக தமது ஆப்களை வெளியிட்டன.
அதன் தொடர்ச்சியாக இப்போது ஜியோவும் தமது வாடிக்கையாளர்கள் ஜியோ சாட் வழியாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.அதுகுறித்த தகவல்கள் கீழே.

ஜியோசாட்:
ஜியோ சாட் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனுடனேயே ஜியோஆப்ஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.அதில் ஒன்றே இந்த ஜியோ சாட் ஆகும்.இந்த ஆப்பின் வழியாகத்தான் தமது வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளல் என ஜியோ அறிவித்துள்ளது.
ட்விட்டர்:
இந்த அறிவிப்பினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் வழியாக அறிவித்துள்ளது.

எப்படி:
ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பின் வழியாக பணம்பெறவேண்டிய நபரினை தேர்ந்தெடுத்து எவ்வளவு பணம் அனுப்பப்போகிறோம் என்பதனை குறிப்பிட்டு உடனடியாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க


Click it and Unblock the Notifications








