முற்றிலும் இலவசமாக ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெறுவது எப்படி.?
அட.. இது செம்ம ஐடியாவே இருக்கே.! ஆகமொத்தம் நமக்கு லாபம்.!
மேலும் அதிக அளவிலான ஜியோ சந்தாதாரர்களை கவரும் நோக்கத்துடன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆன முகேஷ் அம்பானி பல புதிய சலுகைகளை வழங்கி வருகிறார். ஹேப்பி நியூ இயர் ஆபர் அறிவிக்கப்பட்டுமார்ச் 31-ஆம் தேதியுடன் அது முடிவடைய உள்ளதை தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதன் கட்டண சேவை திட்டங்களை அறிவித்தது உடன் அதன் வருடாந்திர மெம்பர்ஷிப் ஆன ஜியோ ப்ரைம் திட்டத்தின் கீழ் அதன் அனைத்து சலுகைகளையும் அறிவித்தது.
அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் ரூ.99/- என்ற வருடாந்திர கட்டணத்தை செலுத்தி இதர மாதாந்திர மலிவு விலை கட்டண சேவைகளை அனுபவிக்கலாம். அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் ரூ.99/- என்ற வருடாந்திர கட்டணத்தை செலுத்தி இதர மாதாந்திர மலிவு விலை கட்டண சேவைகளை அனுபவிக்கலாம். இதன் மூலம் அனைவருமே கட்டாயமாக ப்ரைம் சேவையை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அணுகயிருக்க வேண்டுமென்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.

மெம்பராக வேண்டும்
இதன்படி நீங்கள் முன்பு அனுபவித்த 'ஹேப்பி நியூ இயர்' வாய்ப்பை தொடர விரும்பினால், நீங்கள் முதலில் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக வேண்டும் (ரூ.99/- சந்தா கட்டணம் செலுத்தி) பின்னர் ரூ.303/- திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் நீங்கள் இதுவரை பெட்ரா அதே சலுகைகளை பெறலாம் என்று வகுக்கப்பட்டிருந்தது.

ரூ.50/- கேஷ்பேக்
தற்போது ஜியோ நிறுவனத்தின் ஜியோ மணி ஆப் மூலம் புதிதாக வெளியாகியுள்ள தகவலின் கீழ் ஒரு புதிய வாய்ப்பை நீங்கள் பெற முடியும். இந்த புதிய திட்டத்தின் படி, நீங்கள் உங்களின் ஜியோ மணி ஆப் பயன்படுத்தி நிகழ்த்தும் ரீசார்ஜ்களுக்கு (ஒவ்வொரு ரீசார்ஜ்க்கும்) ரூ.50/- என்ற கேஷ்பேக் பெறுவீர்கள்.

ஜியோ ப்ரைம் சேவை கட்டணம்
நீங்கள் ஒருமுறை உங்களின் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சேவை கட்டணம் செலுத்திய பின்னர், நீங்கள் மேலும் மாதாந்திர கட்டணமான ரூ.303/- மூலம் உங்களின் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

மொத்தம் ரூ.100/-
ஆக ரூ.99/- ரீசார்ஜுக்கு ஒரு ரூ.50/- கேஷ் பேக் மற்றும் ரூ.303/- ரீசார்ஜுக்கு ஒரு ரூ.50/- கேஷ்பேக் என மொத்தம் ரூ.100/- உங்களுக்கு கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும், ஆக இலவசமாக நீங்கள் ரூ.99/- என்ற ஜியோ ப்ரைம் மெம்பர் ஆகலாம். அதாவது இந்த கேஷ்பேக் ஆனது நுகர்வோர்களுக்கு அவர்களின் ரூ.99/- என்ற ப்ரைம் கட்டணத்தை திருப்பி தருகிறது என்றே அர்த்தம்.

நாள் ஒன்றுக்கு ரூ.10/-
மேலும் முந்தைய 'ஹேப்பி நியூ இயர்' வாய்ப்பை போல், பிரதம உறுப்பினர் பயனர்கள் ஒவ்வொரு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான பயன்பாட்டு எல்லையை கொடுக்கும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.10/- என்ற கணக்கில் ஒரு மாதத்திற்கு 30ஜிபி தரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

20% நன்மைகளை கூட
மார்ச் 31-ஆம் தேதிக்குள் நீங்களொரு ஜியோ ப்ரைம் உறுப்பினராக மாறாவிட்டால் ஜியோவின் கட்டண சேவைகளை உங்களால் அனுபவிக்க முடியும் ஆனால் ஏனைய ஜியோ ப்ரைம் பயனர்கள் பெறும் நன்மைகளில் 20% நன்மைகளை கூட அதே விலைக்கு உங்களால் பெற முடியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ஜியோ ப்ரைம் சேவைக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்னவாகும்.?


Click it and Unblock the Notifications