என்ன என்ன ஐட்டங்களோ: எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ ஏஜிஎம் 2021 நேரலை பார்ப்பது எப்படி?

|

ரிலையனஸ் ஜியோவின் 44-வது ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஆன்லைன் நிகழ்வாக இருக்கும். ஜியோ ரசிகர்கள் நிறுவனத்தின் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம். அனைத்து ஆண்டு நிகழ்வுகளை போல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ரிலையன்ஸ் ஜியோ ஏஜிஎம் 2021 லைவ்ஸ்ட்ரீம்

ஏஜிஎம் நிகழ்வில் வெளியாகும் அறிவிப்புக்கு நீங்கள் ஆவலோடு காத்திருப்பவர்களாக இருந்தால், கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் லைவ்ஸ்ட்ரீம் வீடியோவைப் பார்க்கலாம். ரிலையன்ஸ் ஜியோ ஏஜிஎம் 2021-ல் என்ன நடக்கிறது என்பதை அறிய கீழே உள்ள வீடியோவை பிற்பகல் 2 மணிமுதல் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

அதேபோல் ஆர்வமுள்ள ஜியோ ரசிகர்கள் பிற சேவைகள் மூலமாகவும் லைவ்ஸ்ட்ரீமை பார்க்கலாம். https://jiomeet.jio.com/rilagm. இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ஜியோமீட் மூலவமாக லைவ் ஸ்ட்ரீமை பார்க்கலாம். உண்மையான நிகழ்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே இது கிடைக்கும். மேலும் லைவ் ஸ்ட்ரீமை பார்க்க விரும்பினால் நிறுவனத்தின் ஃபிளேம் ஆஃப் ட்ரூத் யூடியூப் சேனல் மற்றும் ஜியோ சேனலை பின்தொடரலாம். நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பதிப்புகள் வழியாகவும் நேரடி நிகழ்வுகளின் அறிவிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

ரிலையன்ஸ்ஜியோ ஏஜிஎம்2021 நேரலை பார்ப்பது எப்படி?-எகிறும் எதிர்பார்ப்பு

எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தின்போது ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த 5ஜி சேவையை தொடங்க உதவும் வகையில் புதிதாக ஒரு முழுமையான 5ஜி தீர்வை ஜியோ கண்டுள்ளதாக தெரிவித்தார். அதன்பின்பு 5ஜி தொழில்நுட்பத்துக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளுக்கு ஜியோ 100 சதவிகிதம் உறுதியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் 5ஜி சேவைக்கு முறையான அனுமதி கிடைத்ததும், சோதனைக்குதயாராக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு சந்தைபடுத்துதலுக்கு தயாராக இருக்கும் என்றும் முகேஷ் அம்பானி கூறியிருந்தார்.

ரிலையன்ஸ்ஜியோ ஏஜிஎம்2021 நேரலை பார்ப்பது எப்படி?-எகிறும் எதிர்பார்ப்பு

அதன்பின்பு இந்திய சந்தையில் 5ஜி திறன் நிரூபிக்கப்பட்ட பின்னர், சர்வதேச அளவில் இருக்கும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஜியோ 5ஜி ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதனால் இன்று நடைபெறும் இந்த வருடாந்திர கூட்டம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஜியோ-கூகுள் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யும் 5ஜி போன் மாடல் ரூ.5000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக 2ஜி பீச்சர் போன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி போன் மாடலை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ரிலையன்ஸ்ஜியோ ஏஜிஎம்2021 நேரலை பார்ப்பது எப்படி?-எகிறும் எதிர்பார்ப்பு

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில், கூகுள்-ஜியோ நிறுவனங்களின் 5ஜி போன் தனிப்பயனாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாதனம் குறைந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது

ஜியோ நிறுவனம் குவால்காம், இன்டெல், பேஸ்புக் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டது. எனவே குவால்காம் கூட்டாண்மை மூலம் ஜியோ நாட்டில் முக்கியமான 5ஜி டூல்களை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் கூகுள்-ஜியோ 5ஜி போனில் குவால்காம் நிறுவனத்தின் சிப்செட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த கூகுள்-ஜியோ போனுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வழங்படும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio AGM 2021: How to Watch LiveStream?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X