ஐபோன்களில் 4K வீடியோக்களை படமாக்குவது எப்படி?

|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது. ஐபோன்களில் உள்ள பல்வேறு அம்சங்களில் மிகமுக்கியமானதாகவும், இன்றைய யுகத்தினர் அதிகம் விரும்பும் அம்சமாகவும் அதன் கேமரா இருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் செல்பிக்களும், அழகிய நினைவுகளை அப்பட்டமாக உடனடியாக புகைப்படங்களாகவும் சேமிக்க ஸ்மார்ட்போன் கேமரா இன்றியமையாத அம்சமாக இருக்கிறது.

ஐபோன்களில் 4K வீடியோக்களை படமாக்குவது எப்படி?

அவ்வாறு ஐபோன்களின் பின்புற கேமரா கொண்டு 4K வீடியோக்களை படமாக்கவும் முடியும். 4K வீடியோ மட்டுமின்றி சீரான வீடியோக்களை படமாக்க அவற்றின் நொடிகளில் இயங்கும் ஃபிரேம்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்கவும் முடியும்.

ஐபோன்களில் 4K தரத்தில் வீடியோக்களை படமாக்கும் வசதி முதன் முதலில் ஐபோன் 6 சாதனத்தில் வழங்கப்பட்டது. அன்று துவங்கி இன்று அனைத்து ஐபோன்களிலும் 4K மட்டுமின்றி அதிக துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஐபோன்கலில் சாதாரணமாக கேமராவை திறந்து இத்தகைய தரத்தில் வீடியோக்களை படமாக்க முடியாது. செட்டிங்ஸ் மூலமாகவே இதனை சாத்தியமாக்க முடியும்.

இந்தியா : அட்டகாசமான மோட்டோ ஜி5எஸ் மிட்நைட் புளூ எடிஷன் அறிமுகம்.!இந்தியா : அட்டகாசமான மோட்டோ ஜி5எஸ் மிட்நைட் புளூ எடிஷன் அறிமுகம்.!

முதலில் செட்டிங்ஸ் -- கேமரா -- ஆப்ஷன்களை தேர்வு செய்து, ரெக்கார்டு வீடியோ அல்லது ரெக்கார்டு ஸ்லோ-மோ போன்ற ஆப்ஷன்களை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ரெசல்யூஷனை தேர்வு செய்ய வேண்டும்.

அதிக ரெசல்யூஷன் மற்றும் ஃபிரேம் ரேட்களை தேர்வு செய்யும் போது வீடியோ பதிவானதும் அதிகப்படியான மெமரி பயன்படுத்தப்படும்.

ஐபோன்களில் 4K வீடியோக்களை படமாக்குவது எப்படி?

வழக்கமாக வீடியோ பதிவு செய்யும் போது:

- 720p HD at 30fps: நொடிக்கு 40 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

- 1080p HD at 30fps : நொடிக்கு 60 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

- 1080p HD at 60fps : நொடிக்கு 90 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

- 4K at 24fps: நொடிக்கு 135 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

- 4K at 30fps: நொடிக்கு 170 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

- 4K at 60fps: நொடிக்கு 400 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

ஐபோன்களில் 4K வீடியோக்களை படமாக்குவது எப்படி?

ஸ்லோ-மோ வீடியோ எடுக்கும் போது:

1080p HD at 120fps: நொடிக்கு 170 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

1080p HD at 240fps: நொடிக்கு 480 எம்பி அளவு எடுத்து கொள்ளும்

ஐபோன்களில் அதிக துல்லியமான வீடியோக்கள் மட்டுமின்றி புகைப்படங்களை எடுக்கவும், எடுத்த பின் அவற்றிற்கு மேலும் அழகூட்டவும் பல்வேறு அம்சங்கள் மற்றும் செயலிகள் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
To get the best 4K video on your iPhone, you need to follow these steps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X