வாங்கிய 5 அல்லது 6 மாதத்திலேயே உங்கள் ஸ்மார்ட்போன் 'ஸ்லோ' ஆவது ஏன்

'ஸ்லோ டவுன்' பிரச்சினை என்பது 5 அல்லது 6 மாதங்கள் கழித்து ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்படுமொரு பொதுவான பிரச்சனையாகும்.!

|

ஆப்பிள் ஐபோன்களை விட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் தான் நம்மில் மிக அதிகம். ஆக நாம் ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையைப் பற்றி பேசினால், அது பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களை பற்றி பேசுவதற்கு சமம். அதற்காக நாம் ஐஓஎஸ் பயனர்களை பற்றி பேசாமல் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் 'ஸ்லோ டவுன்' பிரச்சினை என்பது 5 அல்லது 6 மாதங்கள் கழித்து ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்படுமொரு பொதுவான பிரச்சனையாகும்

<strong>ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறை</strong>ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறை

எது எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட ஆறு மாத கால கனரகப் பயன்பாட்டிற்குப் பிறகு, ஆண்ட்ராய்டின் அல்லது ஆப்பிளின் எந்தவொரு பதிப்பின்கீழ்ம் இயங்கும், எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் செயல்திறன் இழப்பு காணப்படுகிறது. அதற்கு பல சாத்தியமான காரணங்கள் உள்ளன. அவைகளை அலசி ஆராய்வதின் மூலம், இன்னும் சில கூடுதல் மாதங்களுக்கு உங்களின் ஸ்மார்ட்போனை 'ஸ்லோ டவுன்' ஆகாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

01. முட்டாள் தனமான ஓஎஸ் மேம்பாடுகள்.!

01. முட்டாள் தனமான ஓஎஸ் மேம்பாடுகள்.!

முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் எப்போது வாங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒருவேளை ஆண்ட்ராய்டு கிட்கேட் ஆக அல்லது ஐஓஎஸ் 7 ஆக இருந்தால், அவைகள் 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காலாவதியான தொலைபேசியில் புதிய ஓஎஸ் அப்டேட்.!

காலாவதியான தொலைபேசியில் புதிய ஓஎஸ் அப்டேட்.!

அம்மாதிரியான கருவிகளில் புதிய இயக்க முறைமையை அப்டேட் செய்யும் போது அதாவது காலாவதியான தொலைபேசியில் புதிய ஓஎஸ் அப்டேட் நிகழ்த்தினால் அது நிச்சயமாக உங்கள் தொலைபேசியை மெதுவாக இயக்கம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சிரமங்களை எதிர்கொள்ள தயாராக இருக்ங்கள்.!

சிரமங்களை எதிர்கொள்ள தயாராக இருக்ங்கள்.!

அதற்காக மேம்பாடுகளை புறக்கணிக்க வேண்டுமென்று அர்த்தமில்லை. சிறிய மேம்படுத்தல்கள் என்றால் சரி, ஆனால் நீங்கள் ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் இருந்து ஒரே தாவலாக நௌவ்கட் அப்டேட்டிற்கு குதித்தால் சிரமங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

02. கண்மூடித்தனமான ஆப்ஸ் மேம்படுத்தல்கள்.!

02. கண்மூடித்தனமான ஆப்ஸ் மேம்படுத்தல்கள்.!

ஆண்ட்ராய்டு தளமாக இருந்தாலும் சரி, ஐஓஎஸ் தளமாக இருந்தாலும் சரி நாம் நமது சாதனங்களில் புதிய பயன்பாடுகளையும், கேம்களையும் முயற்சிக்க தவறுவதில்லை. நிறுவும் போது 'லைட்வெயிட்' பயன்பாடுகளாக இருக்கும் பல அப்ஸ்கள் பின்னர் 'ஹெவிவெயிட்' ஆப்ஸ் ஆக மாற்றப்படலாம். இதற்கு முக்கிய காரணமாக ஆப்ஸ் அப்டேட்ஸ் திகழ்கிறது.

ரேம் மற்றும் சிபியூ ஆகியவற்றை அதிகம் சாப்பிடும்.!

ரேம் மற்றும் சிபியூ ஆகியவற்றை அதிகம் சாப்பிடும்.!

ஆப்ஸ் உருவாக்குநர்கள் தொடர்ந்து புதுப்பித்தல்களை வழங்க தவறுவதில்லை. அப்படியான ஒவ்வொரு புதுப்பிப்பும் புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது, அது ரேம் மற்றும் சிபியூ ஆகியவற்றை அதிகம் சாப்பிடும். இந்த சிக்கலில் நீங்கள் செய்ய முடியுமொரு சிறந்த விடயம் என்னவெனில், கனரக பயன்பாடுகளுக்கு சிறந்த லைட்வெயிட் ஆப்ஸ்களை கண்டுபிடிப்பது மட்டும் தான்.

03. நீங்களே அறியாத பின்னணி பயன்பாடுகள்.!

03. நீங்களே அறியாத பின்னணி பயன்பாடுகள்.!

ஸ்லோ டவுன் சிக்கலில் நீங்கள் புறக்கணிக்க வேண்டிய மிக முக்கிய விடயம் - பின்னணி பயன்பாடுகளாகும். நம்பினால் நம்புங்கள் நீங்களொரு 10 முதல் 15 ஆப்ஸ்களை நஇன்ஸ்டால் செய்திருப்பதாக நினைப்பீர்கள். ஆனால் செட்டிங்ஸ் சென்று, பதிவிறக்கப்பட்ட பயன்பாடுகளின் பட்டியலை பார்த்தால் 40-50 ஆப்ஸ் இருக்கும்.

செயல்படுத்தாத பொழுதும்கூட பின்னணியில் இயங்கும்.!

செயல்படுத்தாத பொழுதும்கூட பின்னணியில் இயங்கும்.!

சில பயன்பாடுகளின் உண்மையான சிக்கல் என்னவெனில் அவைகளை நாம் செயல்படுத்தாத பொழுதும்கூட அவைகள் பின்னணியில் இயங்கி கொண்டே தான் இருக்கும். குறிப்பாக மின்னஞ்சல் சேவைகள், எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் மெசேஜிங் பயன்பாடுகளை கூறலாம்.

அன்இன்ஸ்டால் செய்வது மிக மிக நல்லது.!

அன்இன்ஸ்டால் செய்வது மிக மிக நல்லது.!

இந்த பயன்பாடுகள் சிபியூ மற்றும் ரேம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன, அதன் விளைவாக உங்கள் தொலைபேசி செயல்திறன் பாதிப்படைகின்றன. எனவே, ரேம் மற்றும் சிபியூ நுகர்வை அதிகாமாக கொள்ளும் பயன்பாடுகளை பிளக்க அல்லது அன்இன்ஸ்டால் செய்வது மிக மிக நல்லது.

04. நினைவக சீரழிவு

04. நினைவக சீரழிவு

ஸ்மார்ட்போன்கள் ஆனது ப்ளாஷ் நினைவகத்தின்கீழ் இயக்கப்படுகின்றன. மிகவும் பொதுவான வகை பிளாஷ் நினைவகமானது நான்ட் (NAND) என அழைக்கப்படுகிறது. இந்த நான்ட் மெமரியானது நிரப்பப்படும் போது அது மெதுவான செயல்பாட்டை ஊக்குவிக்கும். சுருக்கமாக, நான்ட் நினைவகமானது திறமையாக செயல்பட, சில காலியான இடங்கள் இருக்க வேண்டும்.

சேமிப்பு திறனின் 75% உடன் எப்போதும் ஒட்டிக்கொள்ளுங்கள்.!

சேமிப்பு திறனின் 75% உடன் எப்போதும் ஒட்டிக்கொள்ளுங்கள்.!

இதை சரி செய்ய ஒரே வழி, உங்கள் சாதனத்தின் மொத்த சேமிப்பு திறனின் 75% உடன் எப்போதும் ஒட்டிக்கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் 16ஜிபி அளவிலான உள் சேமிப்பு கொண்டிருந்தால், 10ஜிபி மெமரியோடு நின்றுகொள்ளுங்கள், அதை கடக்க வேண்டாம்.

05. மன பிராந்தி

05. மன பிராந்தி

இதுவும் ஒரு நியாமான காரணமாகவே தெரிகிறது. சில நேரங்களில், பல உயர் இறுதியில் ஸ்மார்ட்போன்களை பார்த்து - இது மிக மிக வேகமாக இயங்கும் அல்லவா.? என்ற எதிர்பார்ப்பை நீங்களே வளர்த்து கொள்வீர்கள். பின்னர் அதை வாங்கி பயன்படுத்தும் போது, அது என்னதான் வேகமாக இயங்கினாலும் கூட, அது ஸ்லோ டவுன் அடைவதாகவே நீங்கள் கருதுவீர்கள். இது ஒரு சாதாரண மனித உளவியலாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
எத்தனையோடு நீங்கள் ஒற்றுப்போகிறீர்கள்.?

எத்தனையோடு நீங்கள் ஒற்றுப்போகிறீர்கள்.?

மேற்கூறப்பட்டுள்ள 5 காரணங்களில் எத்தனையோடு நீங்கள் ஒற்றுப்போகிறீர்கள் என்பதையும் - இதையெல்லாம் தாண்டிய காரணங்களும் உண்டு என்றால் அவைகளையும் - எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் பல சுவரசியமான டெக் டிப்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Reasons Your Phone Slows Down Over Time. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X