பெற்றோர்களே உஷார்! மொபைல் பேட்டரி வெடித்து 8 மாத குழந்தை பலி!

|

உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் (Bareilly), சார்ஜ் ஆகிக்கொண்டிருந்த மொபைலின் பேட்டரி வெடித்ததன் விளைவாக எட்டு மாத குழந்தை ஒன்று உயிர் இழந்துள்ளது.

இந்த "மொபைல் வெடிப்பு" சம்பவத்தில் சிக்கிய அந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சமீபத்தில் இதே போன்ற சம்பவம்.. விமானத்திலும் நடந்தது!

சமீபத்தில் இதே போன்ற சம்பவம்.. விமானத்திலும் நடந்தது!

நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டின் தொடக்கத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்திலும், இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

ஆனால் அந்த சம்பவத்தில் ஸ்மார்ட்போன் வெடிக்கவில்லை, மாறாக தீப்பிடித்து எரிந்து, விமானத்திற்குள் பீதியை ஏற்படுத்தியது!

சூரியனின் சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

வெடிப்பதற்கான காரணங்களும், வெடிக்கப் போவதற்கான அறிகுறிகளும்!

வெடிப்பதற்கான காரணங்களும், வெடிக்கப் போவதற்கான அறிகுறிகளும்!

கடந்த சில ஆண்டுகளாகவே, மொபைலின் பேட்டரி திடீரென வெடிப்பது அல்லது தீப்பிடித்து எரிவது போன்ற விபத்துகளால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அல்லது தீக்காயங்களை சந்திக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஒருவேளை இதுபோன்ற விபரீதங்களில் நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ சிக்கிக்கொள்ள கூடாது என்று நினைத்தால்..

மொபைல் போன்களின் பேட்டரிகள் வெடிப்பதற்கும், தீப்பிடிப்பதற்குமான பொதுவான காரணங்களை, அது வெடிக்க போகிறது என்பதற்கான அறிகுறிகளை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்!

01.

01. "அபாய" அறிகுறிகள் மீது எப்போதும் ஒரு கண் வைக்க வேண்டும்!

முதல் மற்றும் முக்கியமான அபாய அறிகுறி - மொபைல் வீக்கம் அல்லது பேட்டரி வீக்கம். பரேலியில் நடந்த மொபைல் வெடிப்பு சம்பவத்திலும் மொபைலின் பேட்டரி வீங்கி உள்ளது.

ஒருவேளை உங்கள் பேட்டரி வீங்கிவிட்டால், உடனே அந்த மொபைல் போனை ஓரங்கட்டவும்; முடிந்தால் அதை குப்பையில் போட்டு விடவும்.

அதுதவிர்த்து - மொபைல் போனின் டிஸ்பிளே / ஸ்க்ரீன் ஆனது முன்பிதுங்குவது அல்லது மொபைல் போனின் பின்புறம் சமமாக இல்லாமல் இருப்பது போன்றவைகளை கவனித்தாலும், உடனே அந்த போனை ஓரங்கட்டவும்!

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

02. விரிசல்... தண்ணீர்.. வியர்வை!

02. விரிசல்... தண்ணீர்.. வியர்வை!

சேதமடைந்த அல்லது உடைந்த போனை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். டிஸ்பிளேவில் அல்லது பாடியில் விரிசல் இருந்தால்.. அதன் வழியாக மொபைலுக்குள் நீரோ அல்லது வியர்வையோ கசியலாம்.

இது இரசாயன எதிர்வினைக்கு வழிவகுக்கலாம்; உள்ளிருக்கும் கூறுகளை சேதப்படுத்தலாம். அந்த சேதமானது ஷார்ட் சர்க்யூட்,ஓவர் ஹீட்டிங்கை தூண்டலாம் மற்றும் ஸ்மார்ட்போன் வெடிக்க அல்லது தீப்பிடிக்கக்கூடிய பிற காரணங்களுக்கு வழிவகுக்கலாம்.

03. அந்த சார்ஜர் ஆனது?

03. அந்த சார்ஜர் ஆனது?

எப்போதுமே உங்கள் ஸ்மார்ட்போன்களுடன் வரும் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

மலிவான அல்லது டூப்ளிகேட் சார்ஜர்களை வாங்குவதன் மூலம் நீங்கள் பணத்தை சேமிக்கலாம் ஆனால் அவைகளால் பேட்டரிக்கு ஏற்படும் அழுத்தத்தை தவிர்க்க முடியாது!

பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

04. தேர்ட்-பார்ட்டி அல்லது வேறு பிராண்ட்!

04. தேர்ட்-பார்ட்டி அல்லது வேறு பிராண்ட்!

சார்ஜர்களின் மீது மட்டுமல்ல.. சார்ஜிங் கேபிள்களிலும் கூட கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் ஒரிஜினல் கேபிள்களை பயன்படுத்தவும்.

வேறு பிராண்டின் சார்ஜரையோ அல்லது கேபிளையோ பயன்படுத்தினால் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி பாதிக்கப்படலாம்.

05. தீய்ந்து போய் இருந்தால்.. உருகி இருந்தால்..?

05. தீய்ந்து போய் இருந்தால்.. உருகி இருந்தால்..?

உங்கள் சார்ஜிங் கேபிளானது தீய்ந்து போய் இருந்தாலோ அல்லது உருகி இருந்தாலோ உஷார் ஆகி கொள்ளவும்; உடனே புதிய கேபிளை வாங்கவும்.

சேதமடைந்த கேபிள்கள் ஆனது சார்ஜிங் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்; தீப்பிடிப்பதற்கு கூட வழிவகுக்கலாம். அதுமட்டுமின்றி கேபிள்களை மிகவும் இறுக்கமாக மடிப்பதையும், சுருட்டுவதையும் தவிர்க்கவும்!

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

06. ஒருபோதும்

06. ஒருபோதும் "இந்த" பேட்டரிகளை?

ஒருபோதும் தேர்ட் பார்ட்டி அல்லது போலியான பேட்டரிகளை பயன்படுத்த வேண்டாம். அத்தகைய பேட்டரிகளைப் பயன்படுத்துவது கடுமையான பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தும்.

மிகவும் மோசமாக தயாரிக்கப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி ஆனது, எப்போதுமே ஓவர்-ஹீட்டிங்கிலேயே இருக்கும்; அதாவது அது எப்போது வேண்டுமானாலும் தீப்பிடித்து வெடிக்கலாம்!

07. தெரியாமல் கூட

07. தெரியாமல் கூட "அந்த" சார்ஜர்களை?

கார்களில் பயணிக்கும் போது தெரியாமல் கூட கார் சார்ஜிங் அடாப்டர்களை பயன்படுத்தி மொபைல் போன்களை சார்ஜ் செய்ய வேண்டாம்; மாறாக பவர் பேங்கைப் பயன்படுத்தவும்.

ஏனென்றால், பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்தே பாகங்களை வாங்கி நிறுவுகின்றனர்; அதன் வயரிங் தரம் "எப்போதுமே" உறுதியாக இருக்காது!

08. 100% சார்ஜிங் என்பது?

08. 100% சார்ஜிங் என்பது?

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! 100% வரை உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. முடிந்தவரை 90% ஐ தாண்டிய பிறகு சார்ஜிங்கை நிறுத்துவது நல்லது.

ஏனென்றால், அதிகப்படியான சார்ஜிங் பேட்டரியை விரிவுபடுத்தலாம், அதன் விளைவாக பேட்டரி வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து தெளிவான ஆய்வு எதுவும் இல்லை.

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

09. வெயிலில்.. மதிய நேரத்தில்?

09. வெயிலில்.. மதிய நேரத்தில்?

நமது ஸ்மார்ட்போன்களில் உள்ள பேட்டரிகள் ஆனது, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையின் கீழ் மட்டுமே வேலை செய்ய உகந்ததாக இருக்கும்.

எனவே வெயில் நேரத்தில், குறிப்பாக மதிய நேரத்தில், உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி வெயிலில் வெளிப்படாமல் இருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்.

அதுமட்டுமின்றி. உங்கள் போன் சார்ஜ் ஆகும் போது, அது தேவையற்ற வெப்பத்திற்கு உட்படாமலும் பார்த்துகொள்ளவும். அதாவது வெயில் படும் இடத்தில், தீ அல்லது கேஸ் அடுப்பின் அருகே, வெப்பத்தை உமிழும் மெஷின்களின் அருகே மொபைலை சார்ஜ் செய்ய வேண்டாம்!

10. லோக்கல் கடைகளில்?

10. லோக்கல் கடைகளில்?

முடிந்தவரை உள்ளூர் கடைகளில் உங்கள் போனை பழுதுபார்க்க வேண்டாம், மாறாக அங்கீகரிக்கப்பட்ட, அந்தந்த நிறுவனத்தின் சேவை மையங்களுக்கு மட்டுமே செல்லவும்.

ஏனெனில் சில உள்ளூர் கடைகளில் சரியான கருவிகள் இல்லாமல் போகலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை எப்படி சரிசெய்வது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கலாம்! அது ஸ்மார்ட்போனுக்கு மட்டும் அல்ல, அதை கையில் வைத்து சுற்றும் உங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்!

Best Mobiles in India

English summary
Reasons Behind Why Smartphone Catch Fire Symptoms That Your Mobile Phone Battery Could Blast

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X