லாக்டவுன் நேரம் ஸ்மார்ட்போன் மட்டுமே பொழுதுபோக்கா?- நீடித்த பேட்டரி ஆயுள்- முறையாக சார்ஜ் செய்ய இதான் வழி!

|

ஸ்மார்ட்போன் பேட்டரியை அடிக்கடி சார்ஜ் செய்வதன் மூலம் பேட்டரி சேதம் அடையுமா போன்ற பல்வேறு குழப்பங்கள் உங்களுக்கு இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த பேட்டரி ஆரோக்கியத்துக்கான உதவிக்குறிப்புள் உள்ளிட்ட அறிவுரைகளை கீழே பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் பேட்டரி மோசமடைவதற்கான காரணம்

ஸ்மார்ட்போன் பேட்டரி மோசமடைவதற்கான காரணம்

ஸ்மார்ட்போன் பேட்டரி மோசமடைவதற்கான காரணம் குறித்து பார்க்கையில்., நீங்கள் படுக்கச் செல்லும் போதோ அல்லது செல்போனை சார்ஜ் செய்துவிட்டு மறந்துவிடுவதுதான் மிகப்பெரிய காரணம் ஆகும். அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போனை எத்தனை மணிநேரம் பயன்படுத்துகிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு பயன்பாடுகளை ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து வைத்து தொடர்ந்து பயன்படுத்துவது என்பது தவறு. இதுவும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன் பேட்டரி

ஸ்மார்ட்போன் பேட்டரி

ஸ்மார்ட்போன் பேட்டரியும் பிற சார்ஜிங் வகை பேட்டரி போல் சிக்கலை சந்திக்கிறது. பேட்டரி அதிகளவு அதே சக்தியை தக்க வைத்திருக்க முடியாது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் அல்லது 500 முதல் 1000 சார்ஜிங் சுழற்சிகள் வரை பேட்டரிகள் தாக்குப்பிடிக்கும் என கூறப்படுகிறது. அதன்பின் புதிய பேட்டரி தேவை பெரும்பால பயனர்களிடம் இருக்கிறது.

சிறந்த பேட்டரி பராமரிப்பு

சிறந்த பேட்டரி பராமரிப்பு

இருப்பினும் சிறந்த பேட்டரி பராமரிப்பு என்பது அவசியம். இதன்மூலம் ஸ்மார்ட்போனையும் பாதுகாப்பு வைத்திருப்பதோடு, பேட்டரி ஆயுளையும் நீடித்த முறையில் வைத்திருக்க முடியும். உங்கள் பேட்டரி 30% முதல் 90% வரை வைத்திருப்பது என்பது சிறந்தது. இது 50%-க்கு கீழ் குறையும் போது சார்ஜிங் செய்யுங்கள். அதேபோல் சார்ஜிங் செய்யும் போது 100% நிறைவடையும் முன்பே சார்ஜிங் பின்னை கழட்டிவிடவும். மேலும் இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்தது.

இரவு நேர சார்ஜிங்

இரவு நேர சார்ஜிங்

இரவு நேர சார்ஜ் செய்வதற்கு பதிலாக காலை உணவு சமயத்தில் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். இல்லை., அலுவலகத்திற்கு சென்றபின் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அதேபோல் சார்ஜ் செய்யும் சார்ஜிங் சதவீதத்தை கண்காணித்துக் கொள்வது நல்லது. இதை சரிசெய்வதற்கு ஐஓஎஸ் பயனர்கள் சார்ட்கட் வழிமுறைகளை கையாளுகின்றனர். இதையடுத்து ஆட்டோமேஷன் மற்றும் பேட்டரி லெவல் என்ற அமைப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

ஸ்மார்ட்போனை முழு சார்ஜ்

ஸ்மார்ட்போனை முழு சார்ஜ்

உங்கள் ஸ்மார்ட்போனை முழு சார்ஜ் செய்வது பேட்டரிக்கு ஆபத்து அல்ல, இருப்பினும் இதை செய்யாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் முழுமையாச சார்ஜ் செய்வது என்பது அதன் ஆயுட்காலத்தை குறைக்கும்.

சார்ஜிங் லெவல் வழிமுறைகள்

சார்ஜிங் லெவல் வழிமுறைகள்

அதேபோல் பயன்பாட்டில் ஸ்மார்ட்போனை 20% குறைவாக சார்ஜிங் லெவல் வருவதை தடுக்கவும். அதேபோல் வார நாட்களில் குறைந்த பேட்டரி லெவலை எட்டும்போது எச்சரிக்கை ஒலி தோன்றியதும் சார்ஜ் செய்வது நல்லது. ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது 0% சதவீதத்தில் இருந்து 100% வரை பேட்டரி சார்ஜ் செய்வது நல்லது. பேட்டரி அளவீடு செய்வது என்பது சிஸ்டத்தை மறுதொடக்கம் செய்வதற்கு சமம்.

நவீன வகை ஸ்மார்ட்போன்கள்

நவீன வகை ஸ்மார்ட்போன்கள்

இரவு சார்ஜ் செய்துவிட்டு காலை எழுந்திருக்கும் போது சார்ஜ் முழுமையாக 100% சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் அது பார்க்க நல்லதாக இருந்தாலும் பேட்டரி, ஸ்மார்ட்போனை பெருமளவு பாதிக்கும். மேலும் நவீன வகை ஸ்மார்ட்போன்களை முழுமையாக சார்ஜ் செய்யும் போது அதை நிறுத்துவதற்கு சென்சார்கள் கொண்டிருக்கிறது.

வேகமான சார்ஜிங் என்பது ஸ்மார்ட்போன்களை சேதப்படுத்துமா

வேகமான சார்ஜிங் என்பது ஸ்மார்ட்போன்களை சேதப்படுத்துமா

வேகமான சார்ஜிங் என்பது ஸ்மார்ட்போன்களை சேதப்படுத்துமா என்ற சந்தேகம் இருக்கலாம். காரணம், தற்போது நவீன ஸ்மார்ட்போன்கள் அதிவேக சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. குவால்காம் தனித்துவ பேட்டரி ஆயுள் வழங்கினாலும் பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தனித்து தங்களது சொந்த வேக சார்ஜிங் தரத்தை வழங்குகின்றன.

பாதிக்காது வகையில் கட்டுப்பாடு

பாதிக்காது வகையில் கட்டுப்பாடு

அதிவேக சார்ஜ் செய்வது என்பது ஸ்மார்ட்போனில் பேட்டரியை பாதிக்காது காரணம் அது அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாடு தொடர்ந்து சார்ஜிங் மூலம் வெப்பமாகுவதே அதன் ஆயுட்காலத்தை பாதிக்கும். ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தப்படும் சார்ஜர் என்பது மிக அவசியம். செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால், செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான்.

பேட்டரி சார்ஜரும் பொருந்த வேண்டும்

பேட்டரி சார்ஜரும் பொருந்த வேண்டும்

எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reason of Mobile Battery Damage: Here the Methods to Charge Mobile Phone Properly

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X