Home
How to

பழைய பேங்க் அக்கவுண்ட்.. இனிமே 15,000 ரூபாயோ.. 25,000 ரூபாயோ.. RBI போட்ட ரூல்ஸ்.. பணத்தை எடுக்க இதுதான் வழி!

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பழையதாக இருக்கும் பேங்க் அக்கவுண்ட்களுக்கு (Bank Accounts) புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பழைய பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுக்க இப்போது புதிய விதிகள் இருக்கின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாறப் போகிறது.

பேங்க் கஸ்டமர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய அக்கவுண்ட்டை தொடங்கி இருந்தாலும், அதற்கும் முன்பாக தொடங்கி இருந்தாலும் அந்த அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல்விட்டால், அது செயலற்ற அக்கவுண்ட் (Inactive Account) ஆக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இந்த செயலற்ற அக்கவுண்ட்டில் இருக்கும் தொகையானது உரிமை கோரப்படாத டெபாசிட்களாக (Unclaimed Deposits) கருதப்படும்.

பழைய பேங்க் அக்கவுண்ட்.. இனி 15,000 ரூபாயோ.. 25,000 ரூபாயோ.. RBI விதி!

ஆகவே, இந்த தொகைகள் டிஇஏ (DEA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியில் (Depositor Education and Awareness Funds) வரவு வைக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த தொகைகளை சம்பந்தப்பட்ட பேங்க் கஸ்டமர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இதற்காகவே புதிய விதிகளை ஆர்பிஐ இப்போது அமல் செய்து உள்ளது.

யுடிஜிஏஎம் போர்டல் (UDGAM Portal)

இந்த செயலற்ற அக்கவுண்ட்டில் இருக்கும் உரிமை கோரப்படாத பணத்தை எடுக்க பேங்க் கஸ்டமர்கள் யுடிஜிஏஎம் போர்டலை பயன்படுத்தலாம். உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள், தகவல்களை அணுகுவதற்கான நுழைவாயில் (Unclaimed Deposits, Gateway to Access Information) என்று இது அழைக்கப்படுகிறது. பெயர், பான் கார்டு எண், மொபைல் நம்பர் (Mobile Number) போன்ற விவரங்கள் அதில் கேட்கப்படும்.

இதை கொடுத்தால் போதும், உங்களது பெயர் மற்றும் விவரங்களின் அடிப்படையில் பழைய பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் காண்பிக்கப்படும். இதில் இருக்கும் தொகையை தெரிந்து கொள்ளலாம். இதை தெரிந்து கொண்ட பிறகு அந்த விவரங்களை வைத்து, நேரடியாக பேங்க் கிளைக்கு சென்று பணத்தை எடுத்து கொள்ளலாம். பேங்கில் கேஒய்சி (KYC) விவரங்களை கேட்கப்படும்.

ஆதார் கார்டு (Aadhaar Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), பாஸ்போர்ட் (Passport) அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving Licence) போன்ற போட்டோவுடன் கூடிய ஆவணங்கள் இந்த கேஒய்சி வெரிபிகேஷனுக்கு தேவைப்படும். இந்த ஆவணங்களை வெரிபிகேஷன் செய்த பிறகு பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ளலாம். வட்டி கொடுக்கப்பட வேண்டி இருந்தால், அதையும் கிளைம் செய்து வாங்கி கொள்ளலாம்.

மேலும், 2026 ஆம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. அந்த விதிகளையும் இப்போது பேங்க் கஸ்டமர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனென்றால், டிசம்பர் 31 ஆம் தேதி பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாளாக இருக்கிறது. இதை செய்யவில்லை என்றால், ஜனவரி 1ஆம் தேதி பான் கார்டு செயலிழப்பாகும்.

சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை வழங்கும் கிரெடிட் பீரோக்கள் அதை வாரந்தோறும் அப்டேட் செய்யும்படி விதிகள் வருகின்றன. இப்போது, கிரெடிட் ஸ்கோரை 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இது பேங்க் கஸ்டமர்களுக்கு மிகப்பெரும் மாற்றமாகும்.

வாடிக்கையாளர்கள் அல்லது பயனர்களை அடையாளம் காண்பதற்காகவோ அல்லது சேவைகளை வழங்குவதற்காகவோ மொபைல் நம்பரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிம் பைண்டிங் (SIM Binding) விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் கேஒய்சி வெரிபிகேஷன் செய்யப்பட்ட சிம் கார்டுகள் ஆப்களுடன் இணைக்கப்பட இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI New Rules For Inactive Account For Over 10 Years Check Reclaim Funds Rules UDGAM Portal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X