பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி.. எப்படி பெறுவது? இதோ விவரம்..
இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய வசதியைக் கொண்டுவருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ரயில்வே அமைப்பு ரயில்ஒன் (RailOne) செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளை வாங்கும் பயனர்களுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதாவது இப்போது ரயில்ஓன் செயலியில் உள்ள R-wallet மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் வாங்கினால் 3 சதவீதம் கேஷ்பேக் (Cashback) வழங்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் இந்திய ரயில்வே அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுபிஐ (UPI), டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என எந்தவொரு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலும், டிக்கெட் விலையில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த 3 சதவீத தள்ளுபடி சலுகை ஆனது ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை ரயில்ஒன் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இணையதளங்கள், கவுண்டர்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்காது.
மேலும் ஏற்கனேவ வழக்கத்தில் உள்ள R-wallet மூலம் 3 சதவீத கேஷ்பேக் வசதி இதனுடன் சேர்த்து தொடர்ந்து செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளைக் காகிதமில்லா மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற்ற இந்த கேஷ்பேக் சலுகை திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சலுகை உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும்.
ரயில்ஒன் செயலி மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்
முதலில் ரயில் ஒன் செயலியை திறக்கவும்.
அடுத்து அந்த செயலியில் உள்ள Unreserved ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதன்பின்னர் Outside Station, Inside Station என இரண்டு விருப்பங்கள் இருக்கும். இதில் ரயில் நிலையத்திற்கு
வெளியே இருந்து புக் செய்கிறீர்கள் என்றால் Outside Station-ஐ தேர்ந்தெடுக்கவும்.
அதே நீங்கள் ரயில் நிலையத்திற்கு உள்ளே புக் செய்கிறீர்கள் என்றால் Inside Station-ஐ தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து நீங்கள் எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை நிரப்பவும். அதன்பின்னர் Proceed to Book கொடுத்து, எந்த வகையான ரயில் வேண்டும். எத்தனை பேர் செல்கிறீர்கள் என்பதைப் பதிவிட்டு Book Now என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதன்பின்னர் ஆன்லைன் பேமென்ட் செய்தால் உங்களுக்கு சலுகைகள் உடன் டிக்கெட் புக் ஆகிவிடும். குறிப்பாக இந்த சலுகை வரும் 14-ம் தேதி முதல் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
ஐஆர்சிடிசி இணையதளம்
அதேபோல் நாட்டில் ஐஆர்சிடிசி (irctc) இணையதளத்தில் 85 சதவீதம் பேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 12-ம் தேதிக்குப் பிறகு ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக உண்மையான பயனாளர்களுக்கு, ரயில் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய, ஐஆர்சிடிசி ஐடி உடன் ஆதாரை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்குப் பொருந்தாது என, ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








