ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 5 எளிய வழிகள்

By Siva
|

விஞ்ஞான தொழில்நுட்பம் எந்த அளவுக்கு முன்னேற்றமாகி பொதுமக்களுக்கு பலவிதமான நன்மைகளை கொடுத்து வருகிறதோ, அதேபோல் ஒருசில மோசமான அனுபவங்களையும் தருகிறது அவற்றில் ஒன்றுதான் ஹேக்கிங்.

ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 5 எளிய வழிகள்

நாம் நமது பல ரகசியங்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைத்திருப்போம். ஆனால் ஒருசிறு சாப்ட்வேர் அல்லது இமேஜ் ஆகியவற்றின் மூலம் ஹேக்கர்கள் நமது ஸ்மார்ட்போனை ஹேக்கிங் செய்துவிடுவார்கள்.

பழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.??

நமது போன் ஹேக்கர்களின் கண்ட்ரோலுக்கு சென்றுவிட்டால் நம்முடைய அனைத்து விபரங்களும் எளிதில் ஹேக்கர்களை சென்றடைந்துவிடும். இந்நிலையில் ஹேக்கர்களிடம் இருந்து நமது ஸ்மார்ட்போனை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

ரிலையன்ஸ் ஜியோ இலவசம் : உண்மை இது தானா.??

எதையும் எல்லாவற்றையும் நம்பாதீர்கள்:

உங்கள் ஸ்மார்ட்போன் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. எனவே ஸ்மார்ட்போன் உங்களை கையைவிட்டு போகாமல் பார்த்து கொள்ளுங்கள். பொது இடங்களில் இருக்கும்போது டேபிள் மீதோ அல்லது பொது இடத்திலோ வைக்க வேண்டாம். அதேபோல் புளூடூத்தை பயன்படுத்தாத நிலையில் அதை ஆஃப் செய்து வைக்க வேண்டியதும் கட்டாயம்

ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 5 எளிய வழிகள்

பாஸ்வேர்டை சேவ் செய்வது நல்லதா?

ஒருசிலர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டை உபயோகிப்பதால் பாஸ்வேர்டை சேவ் செய்து வைக்கும் வழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் உங்கள் போன் தொலைந்துவிட்டாலோ அல்லது வைத்த இடத்தை மறந்துவிட்டாலோ யாருடைய கையிலாவது நம் போன் கிடைத்தால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஃபேஸ்புக், டுவிட்டர், மற்றும் வங்கி கணக்குகளின் பாஸ்வேர்டை சேவ் செய்ய வேண்டாம். முடிந்த அளவுக்கு ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்

ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 5 எளிய வழிகள்

பூட்டு ரொம்ப முக்கியம் பாஸ்:

எப்போது ஸ்மார்ட்போனை லாக் செய்து வைப்பது ரொம்ப முக்கியம். அதேபோல் ஆப்ஸ்களையும் தனியே லாக் செய்து வைப்பது நல்லது. 'ஆப் லாக்' போன்றவைகளை பயன்படுத்தி இமெயில் உள்பட முக்கியமானவற்றை லாக் செய்து வைத்தால் உங்கள் போனின் பாதுகாப்பு அதிகரிக்கும்

ரிலையன்ஸ் ஜியோ சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இவை தான்.!!

பப்ளிக் வேண்டாமா பாஸ்!!

மிக அவசிய தேவை இருந்தால் ஒழிய பப்ளிக் வைஃபையை தவிர்ப்பது நல்லது. பப்ளிக் வைஃபையில் உங்கள் ஸ்மார்ட்போன் வெகு எளிதில் ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது. ஒருவேளை கண்டிப்பாக பப்ளிக் வைஃபையை பயன்படுத்துவதாக இருந்தால் பாதுகாபுடன் கூடிய சாப்ட்வேருடன் பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

என்னதான் நமது ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் எதிர்பாராத காரணத்தால் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டாவை உடனே அழித்துவிடுங்கள். ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர், 3CX மொபைல் டிவைஸ் மேனேஜர் போன்றவைகளை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து அம்சங்களையும் அழித்துவிடுங்கள்

ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 5 எளிய வழிகள்

மேற்கண்ட ஐந்து வழிமுறைகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டால் உங்கள் நிம்மதி உங்களை விட்டு போக வழியே இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
In today's scenario, any smartphones can be hacked using a cheap software application available for free online with necessary information. With hacking, the hackers can completely control the devices starting from calls to private information.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X