சிறந்த ரவுட்டர் வாங்க சில டிப்ஸ்.!

By Meganathan
|

வீடி, அலுவலகம் மற்றும் வியாபார தளங்கள் என எங்கும் வயர்லெஸ் ரவுட்டர் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கின்றது. இணைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவைகளுக்கு தேவை கட்டாயமாகி வருகிறது. உலகின் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிக்க பிரபஞ்சத்தில் இணைய சேவை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

வீட்டில் நாம் பயன்படுத்தும் கணினிகளுக்கு வயர்லெஸ் ரவுட்டர் தேவையில்லை என்றாலும், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளுக்கு இவை அவசியமாக இருக்கின்றது. வர்லெஸ் ரவுட்டர் மூலம் பல்வேறு கருவிகளை இணைத்து கொள்ள முடியும் என்பதோடு இவை நம் பட்ஜெட்டில் அடங்கி செலவை குறைக்கின்றது.

தினமும் பல்வேறு வயர்லெஸ் ரவுட்டர்கள் சந்தையில் அறிமுகமாகின்றன, இவை உண்மையில் எதற்காக பயன்படுகின்றது என தெரியுமா?. தெரியவில்லை எனில் இதன் பயன் மற்றும் இதர முக்கிய பயன்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

01

01

வயர்லெஸ் ரவுட்டரை எதற்காக பயன்படுத்துவீர்கள் என்பதை பொருத்து ரவுட்டரை தேர்வு செய்ய வேண்டும். சாதாரணமாக பிரவுஸிங் மட்டும் மேற்கொள்ள சாதாரண ரவுட்டர் போதுமானது, ஒரு வேலை கேமிங், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவைகளை பயன்படுத்த சற்றே சக்திவாய்ந்த ரவுட்டர் தேவைப்படும். இதன் மூலம் இண்டர்நெட் வேகம் அதிகமாக கிடைக்கும்.

02

02

தற்சமயம் மொத்தம் மூன்று வகையான ரவுட்டர்கள் கிடைக்கின்றன, சிங்கிள், டூயல் மற்றும் ட்ரை பேண்ட். சிங்கிள் பேண்ட் ரவுட்டர் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வர்க் வழங்கும், இதுவே டூயல் பேண்ட் ரவுட்டர் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வர்க் வழங்கும். ட்ரை பேண்ட் ரவுட்டர்கள் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் இரண்டு 5 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வர்க் வழங்கும். நம் பயன்பாடுகளுக்கு டூயல் பேண்ட் ரவுட்டர்கள் போதுமானதாக இருக்கும்.

03

03

வயர்லெஸ் தரம் 802.11a, 802.11b/g/n, மற்றும் 802.11ac இருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட கணினி எனில் 802.11b/g/n நெட்வர்க் இருக்கும், இதன் மூலம் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் அல்லது 5 ஜிகாஹெர்ட்ஸ் நெட்வர்க் பயன்படுத்த முடியும். ஆனால் 802.11ac இது சற்றே வேகமானது, இதனால் நீங்கள் 802.11ac ரவுட்டரை வாங்குவது சிறந்ததாக இருக்கும்.

04

04

ரவுட்டர் வேகமானது மெகாபிட் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது. ரவுட்டர் வாங்கும் போது நீங்கள் தேர்வு செய்யும் ரவுட்டர் தான் இண்டர்நெட் வேகத்தை நிர்ணயிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

05

05

வயர்லெஸ் நெட்வர்க்களை பொருத்த வரை பாதுகாப்பிற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. யார் வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தும் கணினியில் இருந்து தரவுகளை திருடிவிட முடியும். நீங்கள் வாங்கும் ரவுட்டர் இரு பக்கமும் WPA2 கொண்டிருக்க வேண்டும்.

06

06

குறைந்த அளவு கருவிகள் இணைக்கப்பட்டிருக்கும் போது நெட்வர்க் அதிக பாதுகாப்பாக இருக்கும். சில ரவுட்டர்களில் கூடுதல் அம்சங்களாக என்க்ரிப்ஷன், மானிட்டர் டிவைஸ், பயனர்களை பிளாக் செய்யும் வசதி போன்றவை வழங்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Points to Know Before Buying Right Router For You Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X