தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

|

கூகுள் சேர்ச்சில் (Google Search) தெரியாமல் கூட நீங்கள் டைப் (Type) செய்ய கூடாத வார்த்தைகளை (Words) பற்றி உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை தெரியாது என்றால்.. உடனே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது!

அதென்ன வார்த்தைகள்? அதை ஏன் கூகுளில் டைப் செய்து தேடக்கூடாது? மீறி டைப் செய்தால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:

இது விளையாட்டு அல்ல.. மிகவும் சீரியஸ் ஆன விஷயம்!

இது விளையாட்டு அல்ல.. மிகவும் சீரியஸ் ஆன விஷயம்!

நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் விட்டாலும் சரி, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள், தன் நாட்டு மக்கள் எதை பற்றியெல்லாம் கூகுள் செய்து பார்க்கிறார்கள்? கூகுளில் என்னென்ன விஷயங்களை தேடுகிறார்கள் என்பதை கடுமையாக கண்காணித்து வருகிறது.

ஏனென்றால், சில குறிப்பிட்ட விஷயங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள கூடாது, அதைப்பற்றி படிக்கவோ அல்லது அதை கற்றுக்கொள்ளவே கூடாது என்று அரசாங்கங்கள் நினைக்கின்றன. அப்படியாக எக்காரணத்தை கொண்டும், கூகுளில் சேர்ச் செய்து பார்க்க கூடாத 4 "ஆபத்தான" விஷயங்கள் உள்ளன!

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

மீறி சேர்ச் செய்து பார்த்தால்.. என்ன ஆகும்?

மீறி சேர்ச் செய்து பார்த்தால்.. என்ன ஆகும்?

கூகுளில் தேடக்கூடாத விஷயங்களை நீங்கள் தேடி பார்க்கும் பட்சத்தில், நீங்கள் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் செல்லலாம்; அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுகளை கூட சந்திக்க நேரிடலாம்.

இதுபோன்ற ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, சில குறிப்பிட்ட கூகுள் தேடல்களில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். அதற்கு, கூகுளில் தேடிப்பார்க்க கூடாத 4 விஷயங்களை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:

01. வெடிகுண்டு அல்லது பிரஷர் குக்கர் வெடிகுண்டு!

01. வெடிகுண்டு அல்லது பிரஷர் குக்கர் வெடிகுண்டு!

கூகுள் சேர்ச் வழியாக "வெடி குண்டை தயாரிப்பது எப்படி?" என்றோ.. அல்லது "பிரஷர் குக்கர் வெடி குண்டை தயாரிப்பது எப்படி?" என்றோ.. நீங்கள் தேடும் பட்சத்தில், உங்களுக்கான ஆபத்தை நீங்களே உருவாக்கி கொள்கிறீர்கள் என்று அர்த்தம்!

வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

கூகுள் போன்ற சேர்ச் எஞ்சின் (Search Engine) வழியாக வெடிகுண்டு தொடர்பான தகவல்களை தேடுவது முற்றிலும் ஆபத்தான ஒரு காரியம் ஆகும்.

இதன் விளைவாக நீங்கள் அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகள் (Government Security Officers) அல்லது சேர்ச் எஞ்சின் ஊழியர்களின் ரேடாரில் சிக்கிக்கொள்வீர்கள். நீங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவீர்கள்; குறிப்பிட்ட சில எல்லைகளை மீறும் போது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்!

02. ஆபாச படங்கள்!

02. ஆபாச படங்கள்!

இந்தியா உட்பட உலகம் முழுவதுமே குழந்தைகளை உள்ளடக்கிய ஆபாசப் படங்களை (Child Pornography) பார்ப்பது சட்டத்திற்கு எதிரான ஒரு செயல் ஆகும். எனவே இது தொடர்பான கூகுள் தேடலும் கூட உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம்.

எனவே, உங்கள் வீட்டு வாசலுக்கு போலீஸ் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், குழந்தைகளை உள்ளடக்கிய ஆபாச படங்கள் தொடர்பான எந்தவிதமான கன்டென்ட்டையும் தேடிப்பார்க்க வேண்டாம்!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

03. சில கேள்விகளையும் தேட கூடாது!

03. சில கேள்விகளையும் தேட கூடாது!

ஏதாவது ஒரு ஆயுதத்தை தயாரிப்பது எப்படி அல்லது ஒருவரை உடல் ரீதியாக காயப்படுத்துவது எப்படி போன்ற குற்றவியல் (Criminal Activity) தொடர்பான சில கேள்விகளையும், தகவல்களையும் கூட நீங்கள் கூகுளில் தேட கூடாது.

மீறினால் - வழக்கம் போல சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். அதே போல நாட்டில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் (Banned Medicines) மற்றும் பிற பொருட்களை தேடுவதும் கூட குற்றம் தான்!

04. கருக்கலைப்பு!

04. கருக்கலைப்பு!

கடைசியாக - நீங்கள் அடிக்கடி கருக்கலைப்பு (Abortion) தொடர்பான தகவல்களை தேடும் பட்சத்தில், அது உங்களுக்கு சில கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் மருத்துவ கருத்தரிப்பு சட்டம், 1971 (எம்டிபி சட்டம்) மற்றும் அது தொடர்பான விதிகளின் படி, அனைத்து பெண்களும் அவர்களது 'மேரேஜ் ஸ்டேட்டஸை' (Marriage Status) பொருட்படுத்தாமல், பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கு உரிமையுடையவர்கள் ஆவார்.

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

ஆனால்.. குறுக்கு வழிகளை தேடினால் ஆப்பு தான்

ஆனால்.. குறுக்கு வழிகளை தேடினால் ஆப்பு தான்

இந்தியாவை பொறுத்தவரை, கருக்கலைப்பு என்பது சட்டத்திற்கு எதிரான ஒரு காரியம் அல்ல. மாறாக கருக்கலைப்பு என்பது குறிப்பிட்ட சில நடைமுறைகள், வழிகாட்டுதல்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள், கருக்கலைப்பு செய்வதற்கான நெறிமுறையற்ற நடைமுறைகளை, குறுக்கு வழிகளை கூகுளில் தேடினால், அரசாங்கத்திடம் சிக்கிக்கொள்ள இதைவிட ஒரு பெரிய முட்டாள்தனமான வழி இருக்கவே முடியாது!

Best Mobiles in India

English summary
Please Do Not Search These 4 Things On Google Or Else You Will Face Legal Problems

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X