கொடுத்து வச்ச Paytm யூசர்கள்.. சைலன்ட்-ஆ சேர்க்கப்பட்ட புது வசதி.. ஒருவழியா iPhone-க்கும் வந்துடுச்சு!
"அவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.. ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லையே..?" என்று எத்தவொரு கஸ்டமரும் நினைத்துவிட கூடாது என்கிற நோக்கத்தின் யுபிஐ பேமண்ட் (UPI Payment) நிறுவனமான பேடிஎம் (Paytm) தனது பிளாட்ஃபார்மில் சைலன்ட் ஆக ஒரு புதிய வசதியை (New Feature) அறிமுகம் செய்துள்ளது.
நாம் இங்கே பேசுவது - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் (Android Smartphone) உள்ள பேடிஎம் ஆப்களில் ஏற்கனவே அணுக கிடைக்கும் யுபிஐ லைட் ஆதரவை (UPI Lite Support) பற்றித்தான். தற்போது இந்த ஆதரவு ஐஓஎஸ் (iOS) மூலம் இயங்கும் டிவைஸ்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தும் கூட, அதில் பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி வந்தாலும் கூட யுபிஐ லைட் ஆதரவு பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதென்றால்.. கவலைப்பட வேண்டாம். யுபிஐ லைட் என்றால் என்ன? இதை எவ்வாறு பயன்படுத்துவது? இதனால் நமக்கு என்ன நன்மை போன்ற விவரங்கள் இதோ:
யுபிஐ லைட் என்றால் என்ன? இரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்.. பேடிஎம் ஆப் வழியாக ரூ.200 க்குள் பணம் செலுத்த வேண்டும் என்கிற சூழ்நிலையில், யுபிஐ பின் நம்பரை (UPI PIN Number) உள்ளிடாமலேயே மிகவும் விரைவான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு அம்சமே யுபிஐ லைட் ஆகும்.
பேடிஎம் ஆப்பில் யுபிஐ லைட்-ஐ பயன்படுத்துவது எப்படி? உங்கள் ஆண்ட்ராய்டு / ஐபோனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும். பின்னர் ஹோம் ஸ்க்ரீனில் உள்ள யுபிஐ லைட் ஐகானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு; உள்ளிட்ட விவரங்கள் சரியானது என்பதை உறுதிப்படுத்தவும்.
இப்போது உங்கள் யுபிஐ வேலட்டில் பணத்தை சேர்க்கவும். பிறகு ரூ.200 க்குள் என்கிற தொகைக்குள் பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது, யுபிஐ லைட் விருப்பத்தை தேர்ந்தெடுத்து, பெறுநரின் யுபிஐ ஐடியை உள்ளிடவும் அல்லது க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும். பின்னர் நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிட்டு, பே என்கிற விருப்பத்தை கிளிக்ஸ் செய்யவும். அவ்வளவு தான்!
பேடிஎம் யுபிஐ லைட்டை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி, பேடிஎம் யுபிஐ லைட் ஆதரவின் ஒரு நேரத்தில் ரூ.200 க்கும் குறைவான தொகையை மட்டுமே அனுப்ப முடியும். மேலும் உங்கள் யுபிஐ லைட் வேலட்டில் உங்களால் அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே சேர்க்க முடியும்.
மேலும் யுபிஐ லைட்டைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும். கடைசி மற்றும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த அம்சத்தை ஆதரிக்கும் வங்கிகளில் கணக்கு வைத்து இருந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த யுபிஐ லைட் அம்சம் அணுக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








