Home
How to

10 ரூபாயோ 10000 ரூபாயோ.. இனி மறைக்கலாம்.. Google Pay, PhonePe-வில் இல்லாத வசதி Paytm-ல்.. எப்படி?

பேடிஎம் (Paytm) ஆப் ஆனது அதன் முக்கிய போட்டியாளர்கள் ஆன கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) ஆப்பில் இல்லாத ஒரு "மறைக்கும்" அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பேடிஎம் நிறுவனம் இந்த அம்சத்திற்கு ஹைட் பேமண்ட்ஸ் (Hide Payments) என்று பெயரிட்டுள்ளது.

பெயர் குறிப்பிடுவது போலவே, பேடிஎம் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைட் பேமண்ட்ஸ் அம்சமானது, பயனர்களின் பணப்பரிவர்த்தனை வரலாற்றை (Transaction history) மறைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் பேடிஎம் ஆப் வழியாக நடக்கும் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அதுகுறித்த அதிக கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை உறுதி செய்யப்படுகிறது.

இனி மறைக்கலாம்.. Google Pay, PhonePe-வில் இல்லாத வசதி Paytm-ல்!

இந்த அம்சம் பயனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனையை ப்ரைமரி டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரி வியூவில் (Primary transaction history view) இருந்து நகர்த்த அனுமதிக்கிறது. அதாவது குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனைகள் நீக்கப்படாது அல்லது மாற்றப்படாது. அவைகள் மறைக்கப்படும் மற்றும் தேவைப்படும் போதெல்லாம் அணுகக்கூடியதாகவும் இருக்கும்.

பேடிஎம் நிறுவனத்தின் கூற்றுப்படி இப்படி ஹைட் செய்யப்பட்ட பேமண்ட்கள் ஆனது ஒரு தனி, பாதுகாக்கப்பட்ட பிரிவில் வெறுமனே மறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தனது பயனர்களுக்கு இந்த திறனை வழங்கும் ஒரே யுபிஐ ஆப் நாங்கள் மட்டுமே என்றும் பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது

பேடிஎம் ஆப்பில் ஒரு குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனையை மறைப்பது எப்படி?
1. உங்கள் போனில் இருக்கும் பேடிஎம் ஆப்பை திறந்து 'பேலன்ஸ் மற்றும் ஹிஸ்டரி' (Balance and History) பகுதிக்கு செல்லவும்.
2. நீங்கள் மறைக்க விரும்பும் பேமண்ட்-ஐ இடதுபுறமாக ஸ்வைப் (Swipe Left) செய்யவும்.

3. இப்போது 'ஹைட்' (Hide) என்கிற விருப்பம் தோன்றும்; அதை கிளிக் செய்யவும்.
4. 'யெஸ், ஹைட் பேமண்ட்' (Yes, Hide Payment) என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் மீண்டும் அதை உறுதிப்படுத்தவும்.
5. உடனே நீங்கள் தேர்வு செய்த பேமண்ட் ஆனது பேமண்ட் ஹிஸ்டரியில் இருந்து மறைக்கப்படும்.

மறைக்கப்பட்ட பேமண்ட்-ஐ மீண்டும் காட்சிப்படுத்துவது (Unhide) எப்படி?
1. மறுபடியும் உங்கள் போனில் இருக்கும் பேடிஎம் ஆப்பை திறந்து 'பேலன்ஸ் மற்றும் ஹிஸ்டரி' (Balance and History) பகுதிக்கு செல்லவும்.
2. ஸ்க்ரீனில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி ஐகானை () கிளிக் செய்யவும்.

3. மெனுவிலிருந்து 'வியூ ஹிட்டன் பேமண்ட்ஸ்' (View Hidden Payments) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
4. உங்கள் மறைக்கப்பட்ட அனைத்து கட்டணங்களையும் காண உங்கள் ஸ்மார்ட்போனிற்கான அக்சஸ் பின்-ஐ (Access PIN) உள்ளிடவும் அல்லது பயோமெட்ரிக் (ஃபிங்கர் பிரிண்ட் அல்லது ஃபேஸ்) சரிபார்ப்பை வழங்கவும்.

5. இப்போது நீங்கள்ள் மறைத்து வைத்து இருக்கும் குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனையை டதுபுறமாக ஸ்வைப் (Swipe Left) செய்து 'அன்ஹைட்' (Unhide) என்பதை கிளிக் செய்யவும்
6. உடனே குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனை ஆனது இப்போது உங்கள் பேமண்ட் ஹிஸ்டரியில் (Payment History)
மீண்டும் தெரியும்.

பேடிஎம் நிறுவனத்தின் கூற்றுப்படி, மிகவும் நுணுக்கமான தனியுரிமை விருப்பங்களுக்கான வளர்ந்து வரும் பயனர் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது டுள்ளது. பல பயனர்கள் பகிரப்பட்ட டிவைஸ்களை அதிகளவில் நிர்வகிக்கிறார்கள், முக்கியமான கொள்முதல்களை கையாளுகிறார்கள் அல்லது அவர்களின் நிதி செயல்பாடுகளின் மிகவும் விவேகமான பார்வையை விரும்புகிறார்கள் என்றும் பேடிஎம் கூறியுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் இந்த புதிய அம்சம் - வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கும் அதே வேளையில், வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Paytm App Users Now Hide and Unhide Particular Transaction From Payment History Here is How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X