மீசையை முறுக்கு.. மறுபடியும் கெத்து காட்டும் Paytm ஆப்.. UPI, ATM யூசர்களுக்கு 2 குட் நியூஸ்!
கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) ஆப்களுக்கு "மறுபடியும்" கடுமையான போட்டிகளை கொடுக்கும் நோக்கத்தின் கீழ் பேடிஎம் (Paytm) நிறுவனமானது தனது பேடிஎம் ஆப்பில் 2 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதென்ன அம்சங்கள்? இதனால் என்ன பயன்?
2 புதிய அம்சங்கள்: பேடிஎம் ஆப்பில் யுபிஐ பேமண்ட்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் (UPI payments Biometric authentication) மற்றும் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் (Cardless ATM withdrawals) வசதி என்கிற 2 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

யுபிஐ பேமண்ட்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம்: பேடிஎம் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம், பயனர்கள் யுபிஐ பின்னை கைமுறையாக உள்ளிடுவதற்கு பதிலாக, ஃபேஸ் ஐடி (Face ID) அல்லது கைரேகையை (Finger Print) பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை செய்யலாம்.
ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் வசதி: பெயரிலேயே குறிப்பிடுவது போல - ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் வழியாக பணம் எடுக்கும் அம்சமானது, பயனர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே, பேடிஎம் ஆப் வழியாக நேரடியாக பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
ஆர்பிஐ-ஆல் வந்த மாற்றம்: ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்த இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய இரு காரணி அங்கீகார விதிகளை (two-factor authentication rules) தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் இந்த சமீபத்திய அப்டேட் வந்துள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ், பயனர்கள் இப்போது ஒடிபி-ஐ (OTP) மட்டுமே பயன்படுத்தாமல், வேறு வழிகளிலும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க வேண்டும்.
அது பின் (PIN) நம்பர் ஆக இருக்கலாம், பாஸ்வேர்ட் (Password) ஆக இருக்கலாம், செக்யூர் டோக்கன் (Secure Token) ஆக இருக்கலாம் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரமாக (biometric authentication) கூட இருக்கலாம். இந்த விதிமுறை ஆனது யுபிஐ, கார்டுகள் மற்றும் வாலெட்டுகள் உட்பட அனைத்து வகையான டிஜிட்டல் பேமண்ட்களுக்கும் பொருந்தும்.
ரூ.5000 லிமிட்: பேடிஎம் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயோமெட்ரிக் அங்கீகார அம்சமானது ஆண்ட்ராய்டில் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் மற்றும் ஐஓஎஸ்-இல் உள்ள ஃபேஸ் ஐடி ஆகிய இரண்டிலும் செயல்படும் என்பதை பேடிஎம் உறுதிப்படுத்தி உள்ளது. பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், எந்தவொரு பயோமெட்ரிக் தரவும் பேடிஎம் அல்லது வங்கியால் சேமிக்கப்படவோ அல்லது அணுகப்படவோ இல்லை என்பதையும் பேடிஎம் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
என்பிசிஐ (NPCI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பயோமெட்ரிக் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5,000 என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய முறையை விரும்பும் பயனர்களுக்கு, அதாவது வழக்கம் போல பின் நம்பர் பயன்படுத்தி பணம் அனுப்ப விரும்பும் பயனர்களுக்கு - தொடர்ந்து யுபிஐ பின் வசதி கிடைக்கும் என்பதையும் பேடிஎம் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
பேடிஎம்மில் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி பணம் அனுப்புவது எப்படி? பேடிஎம்மில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை இயக்குவது ஒரு எளிமையான செயல்முறையாகும். பேடிஎம் ஆப்பை திறந்து, இடதுபுறத்தில் உள்ள ப்ரொபைல் ஐகானை கிளிக் செய்யவும். அங்கிருந்து செட்டிங்ஸ்-க்கு சென்று, உங்கள் டிவைஸை பொறுத்து "பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் செலுத்து" அல்லது "ஃபேஸ் ஐடி மூலம் பணம் செலுத்து" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து, நீங்கள் பயோமெட்ரிக் பேமண்ட்களை இயக்க விரும்பும் வங்கி கணக்கை (Bank Account) தேர்ந்தெடுத்து, அங்கீகார அமைப்பை முடிக்க ஸ்க்ரீனில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றவும். இது முடிந்ததும், உங்கள் கைரேகை அல்லது ஃபேஸ் ஐடியை பயன்படுத்தி யுபிஐ பேமண்ட்களை செய்து முடிக்கலாம்.
ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுப்பது எப்படி? பேடிஎம் பயனர்கள் இப்போது ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம். இந்த அம்சத்தை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் பேடிஎம் யுபிஐ உடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டை கொண்டிருந்தால் மட்டுமே போதும்.
முக்கியமாக நீங்கள் பணம் எடுக்க விரும்பும் ஏடிஎம்-இல் "யுபிஐ கேஷ் வித்ட்ராவல்" விருப்பம் இருக்க வேண்டும். அதை தேர்ந்தெடுத்து, விரும்பிய தொகையை உள்ளிட்டு, பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி, ஸ்க்ரீனில் தோன்றும் க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யலாம். யுபிஐ பின் நம்பரை சரிபார்த்த பிறகு, ஏடிஎம் பணத்தை வழங்கும்; மேலும் பேடிஎம் ஆப்பில் உடனடியாக ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜும் தோன்றும். இதன் கீழ் - ஒரு பரிவர்த்தனைக்கான பணம் எடுக்கும் வரம்பு ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








