Just In
- 4 hrs ago
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- 9 hrs ago
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 23 hrs ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- 23 hrs ago
வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?
Don't Miss
- Finance
யாரும் டீ குடிக்காதீங்க.. நாட்டைக் காப்பாத்துங்க.. பாகிஸ்தான் அரசின் கோரிக்கை..!
- News
பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு.. கொத்தனாரின் உச்சக்கட்ட வெறித்தனம்.. மிரண்டுபோன விருதாச்சலம்
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- Movies
400 கோடி கிளப்பில் விக்ரம்...நான்ஸ்டாப் வசூல் வேட்டை..அடிச்சு தூக்கும் லோகி – கமல் காம்போ
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பான் கார்டு என்பது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் மிக முக்கியமான ஆவணமாகும். இது உங்கள் அடையாளத்தை நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் அவசியமாகிறது. பான் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நிரந்தர கணக்கு எண் (PAN) என்பது பான் கார்டில் உள்ள 10 இலக்க ஆல்பா எண்களால் ஆனது. ஆதார் அட்டையில் உள்ள ஆதார் எண் எப்படி உங்களின் அடையாள விபரங்களை வெளிப்படுத்துகிறதோ, அதேபோல், பான் அட்டை உங்களின் நிதி வரலாற்றைக் காண்பிக்கிறது.

PAN அட்டையில் உள்ள அடையாள விபரங்கள்
பான் அட்டையில் உள்ள அடையாள எண் தவிர மற்ற விபரங்களை நீங்கள் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறீர்கள். குறிப்பாக உங்கள் பான் அட்டையில் உள்ள பெயர் விபரம், மற்றும் பிறந்த தேதி விபரங்களில் இருக்கும் பிழைகளை நீங்கள் திருத்தும் செய்துகொள்ளலாம். அதேபோல், உங்கள் PAN கார்டில் உள்ள புகைப்படத்தையும் நீங்கள் மாற்றம் செய்து திருத்திக்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதென்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். அதுவும், வீட்டில் இருந்தபடியே நீங்கள் இதைச் சுலபமாகச் செய்து முடிக்க முடிக்கலாம்.

பான் அட்டை தகவல் ஏன் எப்போதும் மிகச் சரியாக இருக்க வேண்டும்?
PAN Card மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அதில் உள்ள தகவல்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எழுத்துப் பிழைகள் மற்றும் கையொப்பம் அல்லது புகைப்படம் பொருந்தாதது போன்ற திருத்தங்களை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். பான் கார்டு வைத்திருப்பவரின் நிதி வரலாற்றைக் கண்காணிக்கப் பயன்படுகிறது. வங்கிக் கணக்கைத் திறப்பது உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு தகவல் தேவை. மேலும் பான் எண்ணையும் ஆதாரையும் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

PAN அட்டை புகைப்படத்தை மாற்றுவது எப்படி?
உங்கள் பான் அட்டையில் தற்போது இருக்கும் புகைப்படம் போதுமானதாக இல்லாவிட்டாலோ அல்லது பழமையானதாகத் தோன்றினாலோ, அதை நீங்கள் ஆன்லைன் மூலம் மாற்றிக்கொள்ளலாம். இதற்கான மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை நீங்கள் வீட்டிலிருந்த படி ஆன்லைன் வழியில் கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயல்முறை மற்றும் பிற விவரங்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?
- நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது இந்த https://tin.tin.nsdl.com/pan/index.html இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலமோ இதை நீங்கள் செய்யலாம்.
- UTITSL போர்டல் வழியாக மாற்றங்களை மேற்கொள்ள https://www.pan.utiitsl.com/PAN/index.jsp என்ற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
- தற்போதுள்ள PAN தரவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் (Changes or corrections in existing PAN Data) என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அதன் பிறகு, நீங்கள் category type வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- கோரப்பட்ட தகவலை நிரப்பவும், பின்னர் கேப்ட்சா குறியீட்டை வழங்குவதன் மூலம் சமர்ப்பிக்கவும்.
- நீங்கள் இப்போது KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- Photo Mismatch மற்றும் Signature Mismatch என்பதற்கான விருப்பங்களை இங்கே காணலாம்.
- உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- இன்றியமையாத தகவல்களை மீண்டும் ஒருமுறை நிரப்பி Next என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதைத் தொடர்ந்து, நீங்கள் அடையாளம், முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
- Declaration box கிளிக் செய்த பிறகு Submit பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- மேலே உள்ள படிகளை நீங்கள் முடித்த பிறகு, இந்தியாவில் உள்ள முகவரிகளுக்கு உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்ற ரூ. 101 (+GST) செலுத்தப்பட வேண்டும்.
- இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிகளுக்கு ரூ. 1011 (+GST) செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Photo Mismatch மற்றும் Signature Mismatch விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

பான் அட்டையில் உள்ள போட்டோவை மாற்ற கட்டணம் எவ்வளவு?
உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

15 இலக்க ஒப்புகை எண் பத்திரம் மக்களே
கட்டணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு, 15 இலக்க ஒப்புகை எண்ணைப் பெறுவீர்கள்.
நீங்கள் விண்ணப்பத்தின் பிரிண்ட்அவுட்டை எடுத்து வருமான வரித்துறையின் PAN சேவை பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.
உங்களுக்குக் கிடைத்த 15 இலக்க ஒப்புகை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைக் கண்காணிக்கலாம்.
இந்த செயல்முறையைப் பின்பற்றி, உங்களுடைய பான் அட்டையில் உள்ள விபரங்கள் மற்றும் புகைப்படத்தை மாற்றிக்கொள்ளலாம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999