Home
How to

PAN கார்டு இருக்கா? உடனே இதை பண்ணுங்க.. வருமான வரி செலுத்துவோர் கட்டாயம் பண்ணணும்.. சிம்பிள் செயல்முறை!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க எவ்வளவு காலம் அவகாசம் கொடுத்தாலும் பலரும் இணைக்காமல் இருக்கின்றனர். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைப்பு செயல்முறையை செய்யலாம். ஆனால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். 2026ஆம் ஆண்டில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? ஆதார் பான் இணைப்பு ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி? என்பதை இப்போது பார்க்கலாம்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு முன்னதாக பான் கார்டு, ஆதார் கார் நம்பர் ஆகியவற்றை எடுத்து வைத்து கொள்ளுங்கள். ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு வெரிபிகேஷன் செய்யப்படும். இதை உறுதி செய்து கொண்டு இணைப்பு செயல்முறையை தொடங்குங்கள்.

PAN கார்டு இருக்கா? உடனே இதை பண்ணுங்க.. வருமான வரி செலுத்துவோருக்கு?

பான் ஆதார் இணைப்பு செயல்முறை எப்படி?

1. ஈ-பில்லிங் போர்டல் (e-Filing Portal) செல்ல வேண்டும். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் குயிக் லிங்க்ஸ் (Quick Links) விருப்பத்தின் கீழ் லிங்க் ஆதார் (Link Aadhaar) டேப் தோன்றும். இதை கிளிக் செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள்.

2. இப்போது, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றின் நம்பர் கேட்கப்படும். இதை பிழை இல்லாமல் டைப் செய்து கொடுக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால், பேமெண்ட் பேஜ் தோன்றும்.

3. ஆகவே, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். ஈ-பே டேக்ஸ் (E-pay Tax) வழியாக அதை செலுத்தி கொள்ளலாம். இதற்கு பேமெண்ட் கேட்வே அதிலேயே தோன்றும். இதில் பான் கார்டு எண் மற்றும் மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும்.

4. பிறகு நெட்பேங்கிங், டெபிட் கார்டு, நெப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு பேமெண்ட்களின்படி கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். இப்போது, வழக்கம்போல பான் ஆதார் இணைப்புக்கு சென்று தொடரலாம். இதில் ஆதார் எண் வேலிடேட் (Validate) செய்யப்படும்.

5. அதாவது, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வெரிபிகேஷன் செய்யப்படும். 6 டிஜிட் ஓடிபி கொடுக்க வேண்டி இருக்கும். இதை கொடுத்துவிட்டு, வேலிடேட் விருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இதை செய்துவிட்டால் போதும், பான் மற்றும் ஆதார் இணைப்பு செயல்முறை முடிந்துவிடும். உங்களது கோரிக்கை பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு பிறகு பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை மட்டும் செக் செய்ய வேண்டி இருக்கும்.

பான் ஆதார் இணைப்பு ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி?

1. ஈ-பில்லிங் போர்ட்டலுக்கு சென்று கொள்ளுங்கள். இந்த முறை ஹோம் பேஜ்ஜில் இருக்கும் இ-பான் (E-PAN) விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இதை ஓப்பன் செய்தவுடன் செக் ஸ்டேட்டஸ்/டவுன்லோட் இ-பான் (Check Status/Download E-PAN) விருப்பம் தோன்றும்.

2. இதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். இப்போது, வழக்கம்போல ஆதார் நம்பர் (Aadhaar Number) கொடுக்க வேண்டி இருக்கும். இந்த செயல்முறைக்கும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். இதை கொடுத்தால் மட்டுமே ஸ்டேட்டஸ் தெரியும்.

3. இப்படி ஓடிபி கொடுக்கப்பட்ட பிறகு ஸ்டேட்டஸ் காண்பிக்கப்படும். இதில் உங்களது பான் கார்டு இணைக்கப்பட்டுவிட்டது. உங்களது பான் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. பான் கார்டு விண்ணப்பம் செயலாக்கத்தில் உள்ளது ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

4. ஆதாருடன் பான் கார்டு விவரங்கள் பொருந்தவில்லை என்றால் மட்டுமே பான் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மற்றப்படி உடனடியாக இணைக்கப்பட்டுவிடும். ஆகவே, இணைப்பு செயல்முறைக்கு முன்னதாக ஆதார் பான் விவரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PAN Aadhaar Linking Process Status Check Online Every Taxpayers Need To Know This Process
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X