Home
How to

1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு இன்னும் 1 நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

மின் இணைப்புடன் ஆதார் எண்

மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. இதற்காக தனி இணையதளமும் அறிவிக்கப்பட்டது. https://adhar.tnebltd.org/Aadhaar/ இந்த இணையதளம் மூலமாகவோ அல்லது மின்வாரிய அலுவலகத்தில் மூலமாகவோ உங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.

1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா?

ஜனவரி 31 நிறைவு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முன்னதாக டிசம்பர் 31 வரை வழங்கப்பட்ட நிலையில் பின் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்னும் 1 நாள் மட்டுமே மீதம் உள்ளது. இந்த நிலையில் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிப்பார்க்கும் புதிய வசதியை மின் வாரியம் வெளியிட்டிருக்கிறது.

மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைக்க காரணம் என்ன?

சொந்த வீடு வைத்திருக்கும் பலர், வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு, 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இன்னும் சிலர் இலவச மின்சார சலுகையை பெற, ஒரே வீட்டிற்கு மூன்று, நான்கு மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். குறிப்பாக விதிகளை மீறி கூடுதல் தளங்களை எழுப்பி, ஒரே வீட்டிற்கு அதிக மின் இணைப்புகளை வாங்கியுள்ளனர். மேலும் இதன் மூலம் தமிழக அரசுக்கு, பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியானது.

இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம்

இவை அனைத்தையும் சரி செய்யும் வகையில் தமிழக அரசு மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணையும் இணைத்திருந்தால் தான் அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா?

முறைகேட்டை தடுப்பதற்கு நடவடிக்கை

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், மின்சாரத்தில் முறைகேடு செய்வதை தவிர்க்கும் வகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது தான் உண்மை.

மின் ஆதார் இணைப்பு சரிபார்ப்பது எப்படி?

https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml இந்த இணையதளத்தில் உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். சரி, அப்படி இணைக்காத பட்சத்தில் உடனடியாக இதை செய்துவிடுங்கள். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா?

ஆன்லைன் மூலம் இணைக்க வழிமுறைகள்

https://www.tangedco.gov.in/ என்ற இணைதளத்துக்குள் சென்று ஸ்க்ரால் செய்தால் வலது புறத்தில் Link Your Service connection number with Aadhaar என்ற தேர்வுக் காட்டப்படும் இதை கிளிக் செய்து உள்ளே நுழைந்துக் கொள்ளவும். இதில் உங்கள் மின் இணைப்பு எண்ணை உள்ளிடவும். பின் ஆதார் கார்ட் படத்தை அப்லோட் செய்யவும், தொடர்ந்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளவும்.

வாடகை வீடா? சொந்த வீடா?

குறிப்பு: இதில் நீங்கள் வாடகை வீட்டுத்தாரரா அல்லது சொந்த வீட்டுத்தாரரா என கேட்கப்படும் இதை சரியாக பூர்த்தி செய்து கொள்ளவும். பின் உங்கள் ஆதார் இணைப்பில் உள்ள மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும் அதை உள்ளிட்டுக் கொள்ளவும். இதையடுத்து உங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் உங்களுக்கு வரும். ஆன்லைன் மூலமாக இணைக்க முடியாதவர்கள் மின்சார வாரியத்திற்கு நேரில் சென்றும் இணைக்கலாம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Only One Day Left! How to Check Your Aadhaar Card is Link With EB Account?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X