இதை மட்டும் செஞ்சிடாதீங்க.. நாங்க பொறுப்பில்ல.. OnePlus போன் ஓனர்களுக்கு நிறுவனத்தின் முக்கிய எச்சரிக்கை!
மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எல்லா நிறுவனங்களுமே, வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு வரும் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டை (Latest OS Update) இன்ஸ்டால் செய்யசொல்லிதானே பரிந்துரைக்கும். ஆனால் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமோ.. ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டாம்" என்று கூறியுள்ளது.
இந்தாண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) மாடலுக்கு ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டான ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெர்ஷன் (Android 14 Beta Version) அணுக கிடைக்கிறது. இந்த அப்டேட்டை பயன்படுத்த வேண்டாம் என்று ஒன்பிளஸ் நிறுவனமே எச்சரித்துள்ளது.
ஏனெனில் ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெர்ஷன் ஆனது நிலையற்றதாக (Unstable) இருக்கலாம் மற்றும் ப்ரிக்கிங் சிக்கல்களை (Bricking issues) ஏற்படுத்தலாம். இதன் மூலம் அப்டேட் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது "பயனற்றதாக" (Useless) மாறலாம் என்று ஒன்பிளஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெர்ஷனானது டெவலப்பர்கள் (Developers) மற்றும் பிற மேம்பட்ட பயனர்களுக்கு (Advanced Users) மட்டுமே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் ஒன்பிளஸ் குறிப்பிட்டுள்ளது. மீறினால் "நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்கவும்; உங்களின் முக்கிய டேட்டாக்களை பேக்கப் எடுக்கவும்" என்றும் ஒன்பிளஸ் அறிவுறுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் 11 5ஜி-யில் ஆண்ட்ராய்டு 14 பீட்டாவை பதிவிறக்கம் செய்வது எப்படி? அப்டேட் செய்வதற்கு முன், உங்கள் எல்லா ஃபைல்களையும் டேட்டாவையும் பேக்கப் (Backup) எடுத்துக்கொள்ளவும். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் 30 சதவீத பேட்டரி மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் (Storage space) இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
பின்னர் ஒன்பிளஸின் சமூக மன்றத்தில் (OnePlus Community Forum) இருந்து ஸிப் ஃபோல்டரை (ZIP Folder) டவுன்லோட் செய்யவும். அதை தொடர்ந்து குறிப்பிட்ட சர்வரில் (Specified server.) இருந்து லேட்டஸ்ட் ரோம் அப்கிரேட் ஸிப் பேக்கேஜை (Latest ROM upgrade zip Package) டவுன்லோட் செய்யவும்.
பின்னர் உங்களுடைய போன் ஸ்டோரேஜிற்கு ரோம் அப்கிரேட் பேக்கேஜை காப்பி செய்யவும். அதை தொடர்ந்து செட்டிங்ஸ் (Settings) > அபௌட் டிவைஸ் (About Device) > வெர்ஷன் (Version) சென்று பில்ட் நம்பரை (Build Number) 7 முறை கிளிக் செய்யவும். இப்போது பாஸ்வேர்டை உள்ளிட்டு டெவலப்பர் மோட்டிற்க்குள் லாக்இன் (Login to Developer Mode) செய்யவும்.
இப்போது செட்டிங்ஸ் > அபௌட் டிவைஸ் > அப்டேட் சென்று மேல் வலது பக்கத்தில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் லோக்கல் இன்ஸ்டாலுக்குள் சென்று கரஸ்பாண்டிங் இன்ஸ்ட்டாலேஷன் பேக்கேஜ் (Corresponding Installation Package) என்பதை கிளிக் செய்யவும். பின்னர் எக்ஸ்ட்ராக்ட் > அப்கிரேட் > சிஸ்டம் அப்கிரேட்டை கிளிக் செய்யவும்.
அப்கிரேட் முடிந்ததும், ரீஸ்டார்ட் என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் உங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது வெற்றிகரமாக அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். ஒருவேளை ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெர்ஷன் ஆனது உங்களை மகிழ்ச்சியடை வைக்கவில்லை என்றால், ஒன்பிளஸின் ரோல்பேக் பேக்கேஜை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








