எங்கேயும் எப்போதும்: ரூ.499க்கு OLA எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு தொடக்கம்- ஒரே நாளில் 1 லட்சம் புக்கிங்!

|

இருசக்கர வாகனங்களின் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் வாகன அதிகரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. மறுபுறம் பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டில் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. இதன் முழுவிவரங்களை பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் ஜூலை 15 ஆம் தேதி முன்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஓலா இ-ஸ்கூட்டர் துவக்க முன்பதிவுகள் ஓபன் செய்த 24 மணிநேரத்தில் 1 லட்சம் முன்பதிவுகளை செய்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்தார். இது உலகின் முதல் அதிக ஸ்கூட்டர் முன்பதிவு செய்யப்பட்ட நிகழ்வாக இருக்கிறது என குறிப்பிட்டார்.

ஜூலை 15 முதல் ஸ்கூட்டர் முன்பதிவு தொடக்கம்

ஜூலை 15 முதல் ஸ்கூட்டர் முன்பதிவு தொடக்கம்

ஓலா எலக்ட்ரிக் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜூலை 15 முதல் ஸ்கூட்டர் முன்பதிவு கிடைக்கிறது. இதில் ரூ.499 டோக்கன் தொகையாக முன்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்தியாவின் இவி புரட்சி (இவி- எலக்ட்ரானிக் வெஹிக்கிள்) வெடிக்கும் ஆரம்பத்தில் இருக்கிறது. எங்களுடன் இணைந்து தங்கள் ஸ்கூட்டரை ஒதுக்கிய 100,000+ புரட்சியாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி" என பவிஷ் அகர்வால் டுவிட்டரில் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு

வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு

"எங்கள் முதல் மின்சார வானத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த மகத்தான பதிலுக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனவும் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார். உலகை நிலையான இயக்கத்திற்கு மாற்றுவதற்கான எங்கள் பணியில் இது ஒரு மகிப்பெரிய படி என கூறினார். ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து இவி புரட்சியில் இணைந்த அனைத்து நுகர்வோருக்கும் நன்றி என தெரிவித்தார். மேலும் இது ஆரம்பம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த மாத இறுதியில் நாட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறந்த வகுப்பு துவக்க இடமும் கிடைக்கும் என கூறியுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பணிச்சூழலியல் இருக்கைகளுடன் வரும் என ஓலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

சில மணிநேரங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள்

சில மணிநேரங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள்

ஓலா எலக்ட்ரிக் தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஓபன் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணிநேரங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகளை தொடங்கியது. அதேபோல் வரவிருக்கும் காலங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பயங்கர போட்டிகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.499 செலவில் முன்பதிவு

ரூ.499 செலவில் முன்பதிவு

இதை முன்பதிவு செய்ய olaelectric.com என்ற தளத்தை அணுகலாம். இதை முன்பதிவு செய்ய ரூ.499 செலுத்த வேண்டும். ஓலா தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், நுகர்வோர் விருப்பங்களையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த மகத்தான வரவேற்பையடுத்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். இவி புரட்சியில் இணைந்த நுகர்வோருக்கு நன்றி கூறுகிறேன் என குறிப்பிட்ட அவர் இது ஆரம்பம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

நிலையான சார்ஜிங் விருப்பம்

நிலையான சார்ஜிங் விருப்பம்

இந்தியா ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரட்டை பாட் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி ஸ்ட்ரிப், அலாய் வீல்கள் போன்றவைகள் இருக்கிறது. ஸ்கூட்டரின் பேட்டரி அமைப்பு குறித்த விவரங்கள் ஓலா வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இது நிலையான சார்ஜிங் விருப்பத்தோடு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சவாரி இலக்கு இன்னும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

முறையாக முன்பதிவு செய்ய வேண்டும்

முறையாக முன்பதிவு செய்ய வேண்டும்

olaelectric.com என்ற தளத்திற்கு சென்றவுடன் Reserve For Rs.499 என்ற தேர்வை கிளிக் செய்யவும் பின் தங்களது மொபைல் நம்பர் கேட்கும். இதில் மொபைல் எண்ணை பதிவிட்டு அடுத்து என்ற தேர்வை கிளிக் செய்யவும். குறிப்பிட்ட எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும் அதை பதிவிட வேண்டும். பின் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு ஆவணம் சமர்பித்து முன்பதிவை தொடங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ola Electric Scooter Booking: How to Book Ola Electric Scooter Online in Tamil Nadu

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X