18 வயது பூர்த்தி அடைபவர்கள் இன்று முதல் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.!

நேரில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் மற்றும் விசா குறித்த ஒளி நகல்களை வழங்க வேண்டும், அதனை வாக்களர் பதிவு அதிகாரி அசல் பாஸ்போர்ட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

|

இப்போது தேர்தல் ஆணையம் சார்பில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தி அடைபவர்கள்  வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.!

மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் நிலையில், அதில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரும் 9,23 ஆகிய தேதிகளிலும் பின்பு அக்டோபர் மாதம் 7,14 ஆகிய தேதிகளிலும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

வாக்களர் பட்டியல்

வாக்களர் பட்டியல்

குறிப்பாக வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை சிறப்பு முகாம்களில் பெற்று அங்கேயே சமர்ப்பிக்கலாம். மேலும் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.

இணையம்:

இணையம்:

தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்தது என்னவென்றால் www.nvsp.in என்ற இணையதளத்தின் வழியே வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள் அதாவது 18 முதல் 25 வயதுக்குட்பட்ட மனுதாரர்கள் தவிர, மற்றவர்கள் முந்தைய முகவரி மற்றும் வாக்களர் புகைப்பட அடையாளஅட்டை எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயரை வாக்களர் பட்டியலில் சேர்க்க, படிவம் 6ஏ-வை நேரிலோ அல்லது வாக்களர் பதிவு அதிகாரிக்கும் தபாலிலோ அனுப்பலாம் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

நேரில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் மற்றும் விசா குறித்த ஒளி நகல்களை வழங்க வேண்டும், அதனை வாக்களர் பதிவு அதிகாரி அசல் பாஸ்போர்ட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. படிவம் 6ஏ-வை வெளிநாட்டு வாழ் இந்தியல்கள் தபாலில் அனுப்பினால் பாஸ்போர்ட்டின் ஒளிநகல்களை சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Now you can register for voter ID, update details in voters' list online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X