WhatsApp-க்கு வந்த Unread அம்சம்! 2 கிளிக்கில் பயன்படுத்துவது எப்படி?

|

சமீப காலமாக, "வாட்ஸ்அப்பை திறந்தா மெசேஜ் வருதோ இல்லையோ.. ஏதாச்சும் ஒரு அப்டேட் வந்துடுது.. இல்லனா புதுசா ஒரு அம்சம் அறிமுகம் ஆகி இருக்குது!" என்கிற மைண்ட் வாய்ஸ்களை ஆங்காங்கே கேட்க முடிகிறது!

தீயாக வேலை செய்யும் நம்ம (வாட்ஸ்அப்) குமாரு!

தீயாக வேலை செய்யும் நம்ம (வாட்ஸ்அப்) குமாரு!

"என்னென்ன தேவைகள்.. அண்ணனை கேளுங்கள்" என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்றபடி வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனர்களுக்கு என்னென்ன அம்சங்கள் தேவைப்படுகிறது, எதெல்லாம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்றபடி புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!

சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லவில்லை! உண்மையாகவே!?

சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லவில்லை! உண்மையாகவே!?

உண்மையாகவே வாட்ஸ்அப் நிறுவனம் அதன் உலகளாவிய ஆய்வின் விளைவாகவே புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

சமீபத்தில் வெளியான 3 புதிய ப்ரைவஸி அம்சங்களே - சைலன்ட் ஆக WhatsApp Group இல் இருந்து வெளியேறுவது, View Once Message-ஐ Screenshot எடுக்க முடியாதபடி செய்தது & Online-இல் இருப்பதை மறைப்பது போன்ற ப்ரைவஸி அம்சங்களே - அதற்கு சாட்சி!

அந்த வரிசையில் அறிமுகமான Unread!

அந்த வரிசையில் அறிமுகமான Unread!

அன்ரீட் (Unread) என்றதுமே ஒரு மெசேஜை படித்துவிட்டு, அதை அன்ரீட் செய்து விடும் அம்சம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இந்த புதிய அம்சம் ஆனது நீங்கள் "படிக்காத" மெசேஜ்களை / சாட்களை பில்டர் செய்யும் ஒரு அம்சம் ஆகும்.

YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ "இதுக்கும்" ரெடி ஆகிக்கோங்க!

இது எப்படி வேலை செய்யும்?

இது எப்படி வேலை செய்யும்?

கவனக்குறைவால் அல்லது அதீத எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் மெசேஜ்களால் ஏதேனும் ஒரு சாட்-ஐ அல்லது மெசேஜை நீங்கள் படிக்காமல் விட்டுவிட்டால் - வாட்ஸ்அப்பின் புதிய Unread chat filter அம்சம் ஆனது - குறிப்பிட்ட மெசேஜ்களை தனியாக பில்டர் செய்து காட்டும்!

ஆக, இனிமேல் எந்தவொரு முக்கியமான மெசேஜ்களையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள்!

யாருக்கெல்லாம் அணுக கிடைக்கிறது?

யாருக்கெல்லாம் அணுக கிடைக்கிறது?

எல்லோருக்கும் தான்! நேற்றிரவு 'ட்விட்டர்' வழியாக அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் - தற்போது வரையிலாக - ஆண்ட்ராய்டு, வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் அணுக கிடைக்கிறது.

அன்ரீட் சாட் பில்டர் அம்சம் ஆனது iOS-இல் அணுக கிடைக்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டு எதையும் கூறவில்லை என்பதால், இது கூடிய விரைவில் ஐஓஎஸ்-க்கும் வரும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்!

விண்கற்களின் துகள்களை சேர்த்து செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?விண்கற்களின் துகள்களை சேர்த்து செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?

WhatsApp Unread Chat Filter-ஐ பயன்படுத்துவது எப்படி?

WhatsApp Unread Chat Filter-ஐ பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ள இந்த "அன்ரீட்" அம்சத்தை பயன்படுத்த நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் இதோ:

- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள வாட்ஸ்அப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும்.

- பின்னர் வாட்ஸ்அப்பை திறக்கவும்

- மேல் வலது மூலையில் உள்ள Search ஐகானை தட்டவும்.

புத்தம் புதிதாக ஒரு விருப்பத்தை காண்பீர்கள்!

புத்தம் புதிதாக ஒரு விருப்பத்தை காண்பீர்கள்!

- புதிதாக Unread என்கிற விருப்பத்தை காண்பீர்கள்.

- அதை கிளிக் செய்யவும், இப்போது உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள படிக்கப்படாத மெசேஜ்கள் / சாட்களை ஒரே வரிசையின் கீழ் காண்பீர்கள்.

- அவைகளையெல்லாம் படித்த பிறகு, சாட் விண்டோவிற்கு திரும்பி செல்ல மேலே காணப்படும் "x" ஐகானை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!

இதை விட கம்மி விலைக்கு இனி கிடைக்காது.. Samsung-இன் பிளாக்ஷிப் போன்!இதை விட கம்மி விலைக்கு இனி கிடைக்காது.. Samsung-இன் பிளாக்ஷிப் போன்!

சமீபத்தில் சேர்ந்த 3 ப்ரைவஸி அம்சங்கள்!

சமீபத்தில் சேர்ந்த 3 ப்ரைவஸி அம்சங்கள்!

முன்னரே குறிப்பிட்டபடி, WhatsApp நிறுவனம் சமீபத்தில் தான் அதன் மூன்று புதிய ப்ரைவஸி அம்சங்களை அறிவித்தது.

01. 'வியூ ஒன்ஸ்' விருப்பத்தின் கீழ் அனுப்பப்படும் மெசேஜ்களின் மீதான ஸ்க்ரீன்ஷாட் தடுக்கப்பட்டுள்ளது.

02. நீங்கள் ஒரு க்ரூப்-ஐ விட்டு வெளியேற விரும்பினால், அதை யாருக்கும் நோட்டிஃபைடு செய்யமால் (அட்மின் தவிர்த்து) Exit ஆகலாம்.

03. உங்கள் வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸை குறிப்பிட்ட 'காண்டாக்ட்'களிடம் (நபர்களிடம்) இருந்து மறைக்கலாம்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Now You Can Filter Unread Messages Chats in WhatsApp Using This New Feature How it Works

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X