இனி உபெர் ஆப் எதுக்கு-வாட்ஸ்அப் போதும்:ஜம்முனு பயணம் செய்யலாம்.!

|

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

உபெர் நிறுவனம்

உபெர் நிறுவனம்

அதேபோல் பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியையும் வழங்குகிறது வாட்ஸ்அப் நிறுவனம். இந்நிலையில் முன்னணி டாக்சி சேவை வழங்கும்
உபெர் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே எளிமையாக புக் செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!கிருஷ்ணா முதல் சிம்ரன் வரை- உங்க பெயரும் லிஸ்டில் இருக்கலாம்: வீக்கான பாஸ்வேர்ட்கள் பட்டியல் வெளியீடு!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

அதாவது உபெர் செயலியை இன்ஸ்டால் செய்யாதவர்களும் உபெர் ரைடு செய்ய வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே புக் செய்து பயணிக்கலாம்என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சேவை பல்வேறு மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

மாதம் வெறும் ரூ.125 விலையில் 12 'OTT சந்தா' வாங்கலாமா? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?மாதம் வெறும் ரூ.125 விலையில் 12 'OTT சந்தா' வாங்கலாமா? ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

ஆங்கிலம் மற்றும் இந்தி

ஆங்கிலம் மற்றும் இந்தி

குறிப்பாக இந்த புதிய சேவையை அறிவிக்கும் போது உபெர் நிறுவனம் கூறியது என்னவென்றால், பயனர்கள் ரைடுகளை புக் செய்ய ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தது. அதேபோல் இந்த புதிய வசதி தற்போது டெல்லி-என்சிஆர் பகுதியில் மட்டும் அறிமுப்படுத்தப்படும் என உபெர் தெரிவித்துள்ளது.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

சோதனை எப்போது?

சோதனை எப்போது?

மேலும் இந்த சேவை கடந்த ஆண்டு லக்னோவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது
வாட்ஸ்அப் மூலம் உபெர் ரைடுகளை புக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் பிஸ்னஸ்

வாட்ஸ்அப் பிஸ்னஸ்

அதாவது வாட்ஸ்அப் செயலியில் உபெர் ரைடு புக் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் டு ரை (WA2R) எனும் சாட்பாட்-ஐபயன்படுத்த வேண்டும். குறிப்பாக வாட்ஸ்அப்-இன் பிஸ்னஸ் பிளாட்பார்மில் தான் இது உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பிஸ்னஸ் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினாலே போதும். அதை தொடர்ந்து பிக்கப் மற்றும் டிராப் லோகேஷன்களை வழங்க வேண்டும்என்பது கவனிக்கத்தக்கது. இப்போது இதற்கான வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து +917292000002 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இல்லையெனில் https://wa.me/91792000002?text=Hi%20Uber எனும் வலைதள முகவரிக்கு சென்று கூட உபெர் பிஸ்னஸ் அக்கவுண்டிற்குகுறுந்தகவல் அனுப்பலாம்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து உபெர் செயலியில் கேட்கப்படுவதைப் போன்றே, சாட்பாட் உங்களின் பிக்கப் மற்றும் டிராப் லொகேஷன் சார்ந்த விவரங்களை வழங்க
சொல்லி கேட்கும்.

அவ்வளவுதான் பூமி, எவ்வளவு அழகு- விண்வெளியில் எடுத்த அரேபிய தீபகற்பத்தின் புகைப்படம்- பகிர்ந்த விண்வெளி வீரர்!அவ்வளவுதான் பூமி, எவ்வளவு அழகு- விண்வெளியில் எடுத்த அரேபிய தீபகற்பத்தின் புகைப்படம்- பகிர்ந்த விண்வெளி வீரர்!

வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின் தோராயமான கட்டண விவரம் மற்றும் ஓட்டுனர் வர எவ்வளவு நேரம் ஆகும் என்ற விவரங்கள் திரையில் தோன்றும். அவ்வளவு தான்.

இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..

புதிய அம்சம்

புதிய அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் ஒரு புதிய அம்சத்தை கொண்டுவர உள்ளது. அதாவது தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டுமே வாட்ஸ்அப்-இல் ஸ்டேட்டஸாக வைக்க முடியும். ஆனால் விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?

 வாய்ஸ் நோட்ஸ்

வாய்ஸ் நோட்ஸ்

நாம் இப்போது வாட்ஸ்அப் செயலியில் குரலை பதிவு செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவோம். இனிமேல் இதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த புதிய அம்சம் பயனுள்ள வகையில் இருக்கும்.

சிறந்த திட்டம் இதுதான்- ஜியோ தான் மாஸ்: 84 நாட்கள் வேலிடிட்டி உடன் சிறந்த பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்!சிறந்த திட்டம் இதுதான்- ஜியோ தான் மாஸ்: 84 நாட்கள் வேலிடிட்டி உடன் சிறந்த பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட்

வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட்

மேலும் சமீபத்தில் வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட் தெரிவித்தது என்னவென்றால், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாமல் போலியான அல்லது வாட்ஸ்அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?

  போலி செயலிகள்

போலி செயலிகள்

குறிப்பாக வாட்ஸ்அப் சிஇஒ வில் கேத்கார்ட் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வாட்ஸ்அப் போன்ற சேவைகளை வழங்குவதாக கூறும் சில போலி தீங்கிழைக்கும்செயலிகளை பாதுகாப்பு ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. Heymods என்ற டெவலப்பரின் Hey WhatsApp போன்ற செயலிகள் மிகவும் ஆபத்தானவை. கண்டிப்பாக இதுபோன்ற செயலிகளை மக்கள் பதிவிறக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Now You can book Uber ride on WhatsApp - here is how: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X