குறுக்கே வந்து நிற்கும் புதிய அம்சம்! இனிமேல் ஒரு போட்டோவை அவ்ளோ ஈஸியா Forward பண்ண முடியாது!

|

வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக ஃபார்வேட் (Forward) செய்யப்படும் போட்டோ, வீடியோ, GIF-களுக்கென ஒரு பிரத்யேகமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதென்ன அம்சம்? அதனால் என்ன பயன்? அதை பயன்படுத்துவது எப்படி? அதை புறக்கணிப்பது எப்படி? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நேற்றுவரை இல்லை.. ஆனால் இனிமேல் குறுக்கே வந்து நிற்கும்!

நேற்றுவரை இல்லை.. ஆனால் இனிமேல் குறுக்கே வந்து நிற்கும்!

நேற்று வரையிலாக, வாட்ஸ்அப் வழியாக உங்களுக்கு கிடைத்த ஒரு ஃபார்வேட் மெசேஜை அல்லது ஒரு ஃபார்வேட் போட்டோவை அல்லது ஒரு ஃபார்வேர் வீடியோவை, வேறு ஒருவருக்கு ஃபார்வேட் செய்யும் போது உங்களால் அதற்கு எந்த விதமான கேப்ஷனையும் கொடுக்க முடியாது அல்லவா?

ஆனால் இன்றுமுதல் அப்படி இருக்க போவதில்லை - அடுத்தமுறை நீங்கள் ஒரு மெசேஜை ஃபார்வேட் செய்யும் முன் ஒரு அம்சம் குறுக்கே வந்து நிற்கும். அதாவது ஃபார்வேட் செய்யப்படும் மெசேஜ்களுக்கு - உங்கள் விருப்பப்படி - கேப்ஷன் கொடுக்கும் அம்சம் குறுக்கே வந்து நிற்கும்!

WhatsApp-ல் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் 1:1 அம்சம்! எந்த Setting-ல் தேடினால் கிடைக்கும்?WhatsApp-ல் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் 1:1 அம்சம்! எந்த Setting-ல் தேடினால் கிடைக்கும்?

தனித்தனியாக அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது!

தனித்தனியாக அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது!

வாட்ஸ்அப் பீட்டாவில் கடந்த சில நாட்களாக சோதனை செய்யப்பட்டு வந்த ஃபார்வேட் மீடியா வித் கேப்ஷன் (Forward media with caption) என்கிற அம்சமானது, தற்போது பொது பயன்பாட்டிற்கு வந்துள்ளது .

ஆக இனிமேல் நீங்கள் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ ஃபார்வர்ட் செய்ய விரும்பினால், அதற்கான தலைப்பை தனித்தனியாக மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக அதை அனுப்புவதற்கு முன்னதாகவே உங்களுக்கு தேவையான கேப்ஷனை டைப் செய்யலாம்!

ஐஓஎஸ் VS ஆண்ட்ராய்டு!

ஐஓஎஸ் VS ஆண்ட்ராய்டு!

வழக்கமாக வாட்ஸ்அப்பிற்கு வரும் பெரும்பாலான புதிய அம்சங்கள் ஆனது, முதலில் ஆண்ட்ராய்டுக்கு தான் வரும். ஆனால் இம்முறை, ஃபார்வேட் மெசேஜ்களுக்கு கேப்ஷன் அளிக்க உதவும் ஆப்ஷன் ஆனது - தற்போது வரையிலாக - ஆப்பிள் ஐஓஎஸ் (Apple iOS) வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது.

இது மிகவும் பயனுள்ள அம்சம் என்பதால், இது ஐஓஎஸ் வெர்ஷனோடு நின்று விடாது, கண்டிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மற்றும் மேக்ஓஎஸ் போன்ற பிற இயங்குதளங்களுக்கும் விரைவில் வந்து சேரும்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!இனிமேல் WhatsApp-ல ஒருத்தர பிளாக் பண்ணுறதுக்கு பதிலா.. இப்படி பண்ணுங்க.. வாழ்க்கையே வெறுத்துடுவாங்க!

ஃபார்வேட் செய்யும் முன்.. கேப்ஷன் சேர்ப்பது எப்படி?

ஃபார்வேட் செய்யும் முன்.. கேப்ஷன் சேர்ப்பது எப்படி?

இது மிகவும் எளிமையான ஒரு செயல்முறை ஆகும். யாராவது உங்களுக்கு ஒரு போட்டோ அல்லது வீடியோவை அனுப்பினால், அதை லாங் பிரஸ் செய்வதன் மூலம், அதை ஃபார்வேட் செய்வதற்கான ஆப்ஷன் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

பின்னர் அந்த மீடியாவை யாருக்கு அனுப்ப விரும்புகிறீர்களோ அந்த காண்டாக்ட்-ஐ தேர்ந்தெடுக்கவும். இப்போது அதே ஸ்க்ரீனில், குறிப்பிட்ட போட்டோ அல்லது வீடியோவிற்கு கீழ் கேப்ஷன் (Caption) என்கிற பகுதியை காண்பீர்கள்.

அதில் உங்களுக்கு தேவையானவற்றை டைப் செய்யலாம் அல்லது அதை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால், வெறுமனே டயலாக் பாக்ஸின் மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (X) ஐகானை கிளிக் செய்யவும். இப்படி செய்வதால் கேப்ஷனுக்கான பகுதியை நீங்கள் அகற்றலாம்!

வரிசைக்கட்டி நிற்கும் புதுப்புது அம்சம்கள்!

வரிசைக்கட்டி நிற்கும் புதுப்புது அம்சம்கள்!

கடந்த சில வாரங்களாகவே, வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியான முறையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வெளியான கால் லிங்க்ஸ் ( Call Links), இன்-சாட் போல்ஸ் (In-chat Polls), கம்யூனிட்டீஸ் ( Communities), மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) போன்ற அம்சங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவைகளாக உள்ளன!

கால் லிங்க்ஸ் என்பது வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான லிங்க்-ஐ உருவாக்க அனுமதிக்கிறது. கம்யூனிட்டீஸ் என்பது பிளாட்ஃபார்மில் உள்ள சாட்களை நிர்வகிக்கவும் ஒழுங்கமைக்கவும் உதவும் ஒரு டேப் ஆகும். மெசேஜ் யுவர்செல்ஃப் என்பது உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ள வழிவகுக்கும் ஒரு அம்சம் ஆகும்!

Best Mobiles in India

English summary
Now WhatsApp users can write caption in Photos and Videos before forwarding it here is how

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X