இது எங்களுக்கும் வேணும்! Telegram-க்கு வந்த மேஜிக் அம்சம்.. பார்த்து விட்டு வயிறு எரியும் WhatsApp வாசிகள்!

|

டெலிகிராம் ஆப்பில் (Telegram App) அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு "மேஜிக் "அம்சத்தை பற்றி கேள்விப்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள், ஒருவகையான வயிற்று எரிச்சலில் உள்ளனர் என்றே கூறலாம்!

அதென்ன அம்சம்? வயிற்று எரிச்சலாகும்படி அதில் அப்படி என்ன உள்ளது? டெலிகிராம் ஆப்பில் உள்ள இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி? இதோ விவரங்கள்!

உடனே அப்டேட் செய்யவும்!

உடனே அப்டேட் செய்யவும்!

உங்கள் ஸ்மார்ட்போனில் டெலிகிராம் ஆப் இருக்கிறது என்றால், உடனே கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) சென்று டெலிகிராம் ஆப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு (Latest Version) அப்டேட் செய்யவும்.

ஏனென்றால் டெலிகிராம் ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனில் தான் நாம் இங்கே பேசும் - மேஜிக் அம்சம் உள்ளது. அதாவது பழைய வெர்ஷனில் இது கிடைக்காது; டெலிகிராம் ஆப்பை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால் மட்டுமே இது கிடைக்கும்!

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

அதென்ன அம்சம்?

அதென்ன அம்சம்?

வாட்ஸ்அப் நிறுவனத்தின் மிக முக்கியமான போட்டியாளரும், பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மும் ஆன டெலிகிராம் நிறுவனம், அதன் ஆப்பில் ஹிட்டன் மீடியா (Hidden Media) என்கிற மிகவும் சுவாரசியமான ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஹிட்டன் மீடியா என்பது ஒரு டெலிகிராம் சாட் (Chat) வழியாக, நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் போட்டோக்கள் (Photos) மற்றும் வீடியோக்கள் (Videos) போன்ற மீடியாக்களின் மீது, ஒருவகையான "போர்வையை போர்த்தும்" அம்சம் ஆகும்!

இதுவொரு மேஜிக் மாதிரி வேலை செய்யும்!

இதுவொரு மேஜிக் மாதிரி வேலை செய்யும்!

டெலிகிராம் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹிட்டன் மீடியா அம்சத்தை, ஒரு போட்டோ அல்லது ஒரு வீடியோ மீது பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட போட்டோ அல்லது வீடியோவின் மீது 'ஸ்பாய்லர் எபெக்ட்' (Spoiler Effect) சேர்க்கப்படும்.

அதாவது குறிப்பிட்ட போட்டோ அல்லது வீடியோவானது ஒரு மினுமினுப்பான லேயர் உடன் ஷேர் செய்யப்படும். பெறுநர்கள் அந்த போட்டோ அல்லது வீடியோவை ஒரே ஒருமுறை டேப் (Tap) செய்தால் போதும், மாயாஜாலம் செய்தது போல அந்த லேயர் காணாமல் போய் விடும்!

வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!

இதற்கும் வாட்ஸ்அப்பின் வியூ ஒன்ஸ் அம்சத்திற்கும் சம்பந்தமே இல்லை!

இதற்கும் வாட்ஸ்அப்பின் வியூ ஒன்ஸ் அம்சத்திற்கும் சம்பந்தமே இல்லை!

டெலிகிராம் ஆப்பில் உள்ள இந்த ஹிட்டன் மீடியா அம்சமானது, வாட்ஸ்அப்பின் 'வியூ ஒன்ஸ்' (View Once) அம்சத்திலிருந்து மிகவும் வேறுபட்டது.

ஏனென்றால், இது நீங்கள் ஷேர் செய்யும் மீடியாக்களில் மினுமினுப்பான லேயரை (Shimmering layer) மட்டுமே சேர்க்கிறது; மேலும் குறிப்பிட்ட போட்டோ அல்லது வீடியோவானது பெறுநரால் பார்க்கப்பட்டதும், அது அவர்களுடைய டிவைஸில் ஸ்டோர் (Store) ஆகும்.

மேலும் தேவைப்பட்டால், அந்த போட்டோ அல்லது வீடியோவை மற்றவர்களுடனும் பகிரலாம். ஆனால் வாட்ஸ்அப்பின் வியூ ஒன்ஸ் அப்படி இல்லை; பெறுனரால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் மற்றும் அது டிவைஸில் ஸ்டோர் செய்யப்படாது!

டெலிகிராம் வழியாக ஒரு ஹிட்டன் மீடியாவை அனுப்புவது எப்படி?

டெலிகிராம் வழியாக ஒரு ஹிட்டன் மீடியாவை அனுப்புவது எப்படி?

- முதலில் உங்கள் டெலிகிராம் ஆப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு (Latest Version) அப்டேட் செய்யவும்

- பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டெலிகிராம் ஆப்பை திறக்கவும்.

- ஒரு ஹிட்டன் மீடியாவை அனுப்ப விரும்பும் சாட்-ஐ (Chat) திறக்கவும்.

- இப்போது, அந்த சாட்டின் கீழ் இடது மூலையில் அணுக கிடைக்கும் அட்டாச் பட்டனை (Attach Button) கிளிக் செய்யவும்

யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு Secret Folder-ஐ உருவாக்கி அதனுள் Private File-களை மறைத்து வைப்பது எப்படி?யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு Secret Folder-ஐ உருவாக்கி அதனுள் Private File-களை மறைத்து வைப்பது எப்படி?

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- ஸ்பாய்லர் எபெக்ட் உடன் நீங்கள் ஷேர் செய்ய விரும்பும் மீடியாவை தேர்ந்தெடுக்கவும்.

- பின்னர் த்ரீ-டாட் மெனு பட்டனை கிளிக் செய்து, ஹைட் வித் ஸ்பாய்லர் எபெக்ட் (Hide with spoiler effect) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

- அவ்வளவு தான். குறிப்பிட்ட மீடியாவானது ஒரு மினுமினுப்பான லேயருடன் ஷேர் செய்யப்படும். முன்னரே குறிப்பிட்டபடி, பெறுநர் அந்த லேயரை வெறுமனே கிளிக் செய்தால் போதும், அது நீங்கிவிடும்!

Best Mobiles in India

English summary
Now Telegram Users Can Add Spoiler Effect To Photos And Videos Send It As Hidden Media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X